Monday, February 5, 2024

புதுக் கவிதை: சாலினி இளந்திரையன்-SHALINI ILANTHIRAIYAN TNPSC TAMIL NOTES



சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளார், நாடக ஆசிரியர், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர், பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர் என பண்முகம் கொண்ட பண்பாளர். 

சொல்லுதற்கு ஒரு செய்தி இருந்தால் மட்டும் போதாது; அதைச் சுவைபடச் சொல்லும் திறமையும் பெற்ற சாலை இளந்திரையன் அவர்களின் மனைவி சாலினி இளந்திரையன். எளிமைக்கும், தூய்மைக்கும் சொந்தமானவர் சாலினி இளந்திரையன். 

ஆசிரியப் பணியுடன் இலட்சியப் பாதையை இணைத்து வாழ்ந்தவர், தமிழ்ப் பெருந்தகை சாலை இளந்திரையனுக்கு, அக வாழ்விலும், புறவாழ்விலும் துணை நின்றவர். ஏற்ற பொறுப்புகளுக்கெல்லாம் முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செயல் புரிந்து ஏற்றம் தந்தவர். தமிழ் மொழியையும் இனத்தையும் நாட்டையும் இறுதி மூச்சு நிற்கும் வரை நேசித்து தொண்டாற்றியவர் சாலினி இளந்திரையன். 

பிறப்பு: தமிழகத்தின் தென் மாவட்டமான விருதுநகரில் வசித்து வந்த வே.சங்கரலிங்கம் - சிவகாமி தம்பதியருக்கு இரண்டாவது மகளாகவும், மூன்றாவது மகவாகவும் 22.12.1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் கனகசவுந்தரி.

ஷாலினி இளந்திரையன்

இயற்பெயர் = கனக சௌந்தரி

ஊர் = விருதுநகர்

பெற்றோர் =சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்

சாலை இளந்திரையன் துணைவியார்

ஷாலினி இளந்திரையன் குறிப்புகள்

புதுதில்லி திருவேங்கடவன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றினார்.அக்கல்லூரியிலேயே முதல்வராகவும் பணியாற்றினார்.

சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளார்; நாடக ஆசிரியர்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் கனகசவுந்தரி என்பது ஆகும்.

திராவிடத் தந்தை ஈ. வெ. இராமசாமி பெரியாரைத் தன் அரசியல் – சமூகச் சிந்தனைக்கு வழிகாட்டியாகச் சாலினி இளந்திரையன் கொண்டிருந்தார்.

கு. வெ. கி. ஆசான் = தமிழ்ப் பண்பின் உறைவிடம் பேராசிரியர் சாலினி இளந்திரையன். ஏற்றப் பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செய்தவர்; தமிழ் மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசித்து இறுதி மூச்சு நிற்கும் வரை தொண்டாற்றியவர். உற்றாருக்கும் மற்றவருக்கும் சேவையும் உதவியும் செய்து மகிழ்ந்தவர். இவர் தாம் சாலினியார்!

முனைவர் இரா. ஞானபுசுபம் = உறவாலும் கொள்கையாலும் தங்களோடு தொடர்புடயவர்களும் இணைந்ததே குடும்பம் என்பது சாலய் – சாலினியின் கோட்பாடாக நெடுகிலும் இருந்து வந்தது. இப்பெரிய குடும்பத்திற்குத் தலைமை ஏற்றவர் சாலினியே. இந்தக் குடும்பத்தைத் தம் கனிவான அன்பாலும், கடமை தவறாத செயல்நெறிகளாலும், கடின உழைப்பாலும், ஈத்துவக்கும் இன்பத்தாலும் பேணிக் காத்தவரும் சாலினியே.


இதழ் ஆசிரியர்: சாலினி இளந்திரையன் அரசியற் செயற்பாட்டளாராக (Political Activist) இருந்த பொழுது அவரது கருத்துகளை வெளியிடுவதற்காக 1987 ஆம் ஆண்டில் மனித வீறு என்னும் இதழை வெளியிட்டார். இது இதழ்கள் 12 வெளியீடுகளோடு நின்றுவிட்டது. பின்னர் அறிவியக்கப் பேரவையின் கொள்கையான வீரநடய் அறிவியக்கம் என்னும் இதழுக்கு 1992, 1993 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் தீவிர ஆர்வமும் செயலில் ஈடுபாடும் காட்டினார். தடை செய்யப்பட்ட, தமிழர் தன்னுரிமைப் பிரகடன மாநாட்டில் கலந்து கொண்டதற்காகச் சில நாள் சிறைப்பட்டார். 

மறைவு: தம் துணைவர் மறைந்த பின்னரும் மனித நேயப் பார்வையுடன் மக்கள் தொண்டாற்றினார். சென்னைதலைநகர் தமிழ்ச் சங்கமும், தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து தமிழைச் செவ்வியல் மொழியாகவும், மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் அறிவிக்கக்கோரி 2000 ஏப்ரல் 30 ஆம் நாள் மாநாடு ஒன்றை நடத்தினர். அம்மாநாட்டுக்குத் தலைமை ஏற்கத் தில்லிக்குச் சென்றவர் பேராளர்களை வரவேற்பதற்காகச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 29.04.2000 ஆம் நாள் மறைந்தார்.

ஷாலினி இளந்திரையன் நூல்கள்

  • பண்பாட்டின் சிகரங்கள்
  • களத்தில் கடிதங்கள்
  • சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள்
  • ஆசிரியப் பணியில் நான்
  • குடும்பத்தில் நான்

இலக்கிய கட்டுரை
  • இரண்டு குரல்கள்
  • தமிழ்க் கனிகள்
  • தமிழனே தலைமகன்
  • தமிழ் தந்த பெண்கள்
  • வாடா மலர் (முதல் கட்டுரை)
  • பண்பாட்டின் சிகரங்கள்
நாடக நூல்கள்
  • படுகுழி
  • எந்திரக்கலப்பை
  • புதிய தடங்கள்

கடித இலக்கியம்

  • களத்திலே கடிதங்கள்

தன்வரலாற்று நூல்

  • ஆசிரியப் பணியில் நான்
  • குடும்பத்தில் நான்

ஆய்வு நூல்

  • வாழ்க்கை வரலாற்று இலக்கியம்

இதழ்
  • மனித வீறு

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: