ஆலந்தூர் கோ. மோகனரங்கன் (பிறப்பு: ஜூன் 1, 1942 இறப்பு: அக்டோபர் 4, 2019) தமிழகக் கவிஞர். இவர் சென்னை ஆலந்தூரில் பிறந்தார். இவரின் தந்தை ம. கோபால் மற்றும் தாயார் கோ. மீனாம்பாள் ஆவார்கள்.
ஆலந்தூர் மோகனரங்கன் கவிஞர் என்ற முறையில் தமிழ் உலகுக்கு அறிமுகமானவர். மரபுக் கவிதைகள் கவிதை நாடகம் நாவல் சிறுகதைகள் எனப் பல்வேறு கோணங்களில் நூல்கள் எழுதியுள்ளார்.
காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.
‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை’ என்னும் தலைப்பில் இவர் மு. வரதராசனார் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. ‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை என்று பல ஊடகங்களில் பங்கேற்றுள்ளார்.
நூலகத்தால் உயர்ந்தேன் என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். 1096 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் இவர் 2500-க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆலந்தூர் மோகனரங்கன் குறிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில் பிறந்தவர்
இவரை “கவி வேந்தர்” என்பர்
ஆலந்தூர் மோகனரங்கன் சிறப்பு பெயர்கள்
- கவி வேந்தர்
- முத்தமிழ்க் கவிஞர்
ஆலந்தூர் மோகனரங்கன் சிறப்புகள்
காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.
‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை’ என்னும் தலைப்பில் இவர் மு. வரதராசனார் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.
நூலகத்தால் உயர்ந்தேன் என்னும் பெயர் கொண்ட நூல் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். 1096 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் இவர் 2500-க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளியில் படிக்கும் பொழுதே “புதிய பாதை” என்ற கையெழுத்து ஏட்டை நடத்தியவர்.
தமிழக அரசின் பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, விஜி.பி. விருது, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர்.
இவர் எழுதிய பொன்னம்மா ஒரு புதுமைப்பெண் என்ற நாடகம் ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு, ஆறுமுக நாவலர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், சபாபதி நாவலர், பரிதிமாற்கலைஞர், அரசஞ் சண்முகனார் ஆகியோரின் நூல்களை வெளியிட்டவர்.
அறிஞர் அண்ணா அவர்கள் 1942 முதல் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முதல்முறையாக நூல்வடிவம் கொடுத்து 22 தொகுதிகளாக வெளியிட்டவர். மறைமலையடிகள், திரு.வி.க, கா.சு.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர்.
விருதுகள்
- ‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை' என்னும் நூல், 1982-ல், குழந்தை இலக்கியப் படைப்பில் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதல் பரிசு பெற்றது.
- ’இமயம் எங்கள் காலடியில்’ என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான வகைமையில் இரண்டாம் பரிசு பெற்றது.
- ‘கொஞ்சு தமிழ்க் கோலங்கள்’ தொகுப்புக்கு அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது கிடைத்தது.
- ‘பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்’ நாடகம், ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப் பதக்கம் பெற்றது.
- தமிழக அரசின் பாவேந்தர் விருது.
- நாரண துரைக்கண்ணன் வழங்கிய ‘கவிவேந்தர்' விருது.
- வி.ஜி.பி. தமிழ்ச் சங்கம் வழங்கிய வி.ஜி.பி. விருது.
- வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் வழங்கிய ‘இலக்கிய ஆய்வுச் சுடர்’ விருது.
- மாம்பலம் சந்திரசேகர் வழங்கிய சான்றோர் விருது.
- கலைஞர் மு. கருணாநிதி விருது
- குழந்தை எழுத்தாளர் சங்கம் வழங்கிய ‘குழந்தை இலக்கிய மாமணி' பட்டம்.
- முத்தமிழ்க் கவிஞர் பட்டம்
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் Federation Radio Children’s Listening Club இணைந்து வழங்கிய ‘குழந்தை இலக்கிய ரத்னா’ பட்டம்.
மறைவு
ஆலந்தூர் கோ. மோகனரங்கன் 2019 அக்டோபர் 4ஆம் நாள் அதிகாலை 2 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் மரணமடைந்தார்
நூல்கள்
கவிதை நூல்கள்
- மோகனரங்கன் கவிதைகள்
- கவியரங்கில் மோகனரங்கன் (முதல் தொகுப்பு)
- கவியரங்கில் மோகனரங்கன் (இரண்டாம் தொகுப்பு)
- ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்-முதல் தொகுப்பு
- ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள் இரண்டாம் தொகுப்ப
- ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்-மூன்றாம் தொகுப்பு
- ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்-நான்காம் தொகுப்பு
- ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்-ஐந்தாம் தொகுப்பு
- குறுந்தொகையின் குழந்தைகள் (குறும்பா-ஐக்கூ)
- ஆலந்தூர் மோகனரங்கன் குறும்பா-இரண்டாம் தொகுப்பு
- குருவி குரங்கு குட்டிச்சுவர் (குறும்பா-ஐக்கூ)-மூன்றாம் தொகுப்பு
- ஒரு பல் ஆடுகிறது-குறும்பா (ஐக்கூ)
- ஆலந்தூர்மோகனரங்கன் மெல்லிசைப் பாடல்கள்
- பிறர் வாழப் பிறந்தவர்கள்
- சித்திரப் பந்தல்
- தமிழ் எங்கள் தலை
- காலக்கிளி
- இமயம் எங்கள் காலடியில்
- மனிதனைத் தீண்டாதான் மனிதனா?
- கொஞ்சு தமிழ்க்கோலங்கள்
- நல்ல உலகம் நாளை மலரும்
- கவிதை எனக்கோர் ஏவுகணை
- கனவும் கற்பனையும்-கடிதக் கவிதைகள் (ஆலந்தூர் கோ. மோகனரங்கன், அருணா பொன்னுசாமியுடன் இணைந்து எழுதியது)
- பள்ளிப் பறவைகள்
- அழகிய தமிழில் எழுதுங்கள்
- வண்ணத் தமிழ்
- ஆலந்தூர்மோகனரங்கன் குழந்தை இலக்கியம்
- சேமிப்பு வாழ்க்கையில் தித்திப்பு
- சவால் சம்பந்தம்
- ஏமாந்தவர் யார்?
- நாட்டுப்பற்று
- வைர மூக்குத்தி
- புது மனிதன்
- யாருக்குப் பொங்கல்
- கயமையைக் களைவோம்
- மனிதனே புனிதனாவாய்
- முத்தமிழ்க் கவிஞர் மோகனரங்கன் கவிதை நாடகங்கள்
- நினைத்தால் இனிப்பவளே
- இதயேம இல்லாதவர்கள்
- ஆலந்தூர் மோகனரங்கன் இலக்கியப் பதிவுகள்
No comments:
Post a Comment