CURRENT AFFAIRS IN TAMIL 14.02.24 |
தமிழக அரசின் தனித் தீர்மானங்கள்
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிராக தமிழக அரசின் தனித் தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்து பேசினார். பின்னர், சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தீர்மானம் 1 - "2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது”
- தீர்மானம் 2 - 'ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேற்காணும் இரண்டு தீர்மானங்களையும் மாண்புமிகு உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். பின்னர் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எதிர்க்கட்சி துணைத் தலைவர்:
- தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதுவரை அந்த இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வதுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
முதல் பழங்குடியின பெண்
- திருவண்ணாமலை, புலியூர் கிராமத்தினைச் சேர்ந்த ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் மாவட்ட உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
- இத்தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி:
- ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்பெயினில் உள்ள கிரனடா நகரில் நடைபெற்று வருகிறது.
- இதில் மகளிருக்கான 10 மீட்டர்ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இஷா அனில் தக்சலே இறுதி சுற்றில் 251.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷாம்பவி ஷிர்சாகர் 227.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
- ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா 3 பதக்கங்களையும் முழுமையாக கைப்பற்றியது. உமாமகேஷ் மதீனன் இறுதி சுற்றில் 252.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான பார்த் மானே 250.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அஜய் மாலிக் 229 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டம்):
- சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டம்’ (பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா திட்டம்) ரூ.75,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
- KEY POINTS :‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டம்’
பருப்பு வகைகளுக்கான சர்வதேச மாநாடு (Global meet on pulses):
- டெல்லியில் பருப்பு வகைகளுக்கான சர்வதேச மாநாடு (Global meet on pulses) 14.02.24 தொடங்குகிறது. வரும் 17-ம் தேதி வரை 4 நாட்களுக்கு இந்த மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 800 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டை சர்வதேச பருப்பு கூட்டமைப்பும் (ஜிபிசி) தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பும் (நாஃபெட்) இணைந்து நடத்துகின்றன.
- துபாயை தலைமையிடமாகக் கொண்டு ஜிபிசி செயல்படுகிறது. இது, கடந்த 1962-ல் லாப நோக்கமற்ற அமைப்பாக தொடங்கப்பட்டது
- சர்வதேச பருப்பு கூட்டமைப்பின் தலைவர் விஜய் ஐயங்கார்
உலக அரசு உச்சி மாநாடு:
- பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று அபுதாபி சென்றார். அந்த நாட்டு அதிபர் முகமது பின் சையது அல் நஹ்யானை அவர் சந்தித்துப் பேசினார்.
- அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- யுஏஇ-யில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- இரண்டாம் நாளான 14.02.24 சுவாமி நாராயண் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
- டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின்போது இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதாரவழித்தடம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் யுஏஇ இடம் பெற்றிருக்கிறது
எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்:
- எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் கிராப் பல்சர் எனும், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- போலிக்ஸ் கருவி கடந்த ஜனவரி 15 முதல் 18-ம் தேதிவரையான காலத்தில் விண்வெளியில் உள்ள கிராப் பல்சர் (crab pulsar) எனும் இளம் வயது நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்துவெளியேறும் எக்ஸ் கதிர்களின் தரவுகளை சேகரித்து வழங்கிஉள்ளது. அதற்கான தரவுகளின் வரைபடமும் வெளியிடப்பட்டுஉள்ளது.
- வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது.
- இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜன. 1-ம் தேதி பூமியில் இருந்து 650 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து 5 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்/2023 இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு. உரிய நேரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது இதற்கான காரணமாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
- சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதன் மூலம் இந்திய மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடுத்து வரும் தொடர்களில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாட முடியும். முன்னதாக, சஸ்பெண்ட் நடவடிக்கை காரணமாக தனி கொடியின் கீழ் இந்திய மல்யுத்த வீரர்கள் பங்கேற்க வேண்டிய நிலை இருந்தது.
ஐசிசி விருது 2024:
- ஜனவரி மாத சிறந்த வீரர் – ஷமார் ஜோசப் (மேற்கு இந்திய தீவு)
- ஜனவரி மாத சிறந்த வீராங்கனை – ஏமி ஹண்டர் (அயர்லாந்து)
பிப்ரவரி 14 - 2024 இல் முக்கியமான நாட்கள்:
பிப்ரவரி 14 - புனித காதலர் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று, காதலர் தினம் அல்லது செயிண்ட் வாலண்டைன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- 3 ஆம் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த செயிண்ட் வாலண்டைன் என்ற கத்தோலிக்க பாதிரியாரின் நினைவாக காதலர் தினம் அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 14 - உலக பிறவி இதயக் குறைபாடு விழிப்புணர்வு தினம்-World Congenital Heart Defect Awareness Day
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று, பிறவி இதயக் குறைபாடுகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவற்றைப் பற்றி அறியவும் உலக பிறவி இதயக் குறைபாடு விழிப்புணர்வு தினம் என்று கொண்டாடப்படுகிறது.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
பருப்பு வகைக்களுக்கான சர்வதேச மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
A) அகமதாபாத்
B) பெங்களூர்
C) அமராவதி
D) டெல்லி
ANS : D) டெல்லி
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: