பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேக்ரான் இடையேயான பேச்சுவார்த்தையின் குறிப்புகளை வெளியுறவு துறை செயலர் வினய் குவாத்ரா செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
டாடா மற்றும் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹெச்125 உலங்கூர்திகளைக் குறிப்பிடத்தக்க உள்நாட்டு பாகங்களுடன் வடிவமைக்கவுள்ளார்கள்.இந்த பாதுகாப்பு தொழில்துறை செயல்திட்டம், இயந்திர தொழில்நுட்பம் (ரோபோட்டிக்ஸ்), சுயாதீன வாகனங்கள் மற்றும் இணைய (சைபர்) பாதுகாப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
செயற்கைகோள் ஏவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நியூ ஸ்பேஸ் இந்தியா மற்றும் பிரான்ஸின் ஏரியன்ஸ்பேஸ் நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இருவருக்கிடையேயான பேச்சுவார்த்தையில் காஸாவின் பயங்கரவாதம், மனிதநேய விளைவுகள் ஆகியவைக் குறித்தும் செங்கடலில் அதிகரித்துவரும் பதட்டமும் தீர்வும் குறித்தும் அவர்கள் விவாதித்ததாக குவாத்ரா தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் இரு நாள் பயணத்திட்டமாக இந்தியா வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள்
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு (74), பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி (68), சென்னையைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம் (80), பிகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வாா் விருதுஅங்கக வேளாண்மையைப் பின்பற்றி விவசாயப் பணிகளை மேற்கொண்டுவரும் 3 பேருக்கு நம்மாழ்வாா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பின் விவரம்: மண்ணை மாசுபடுத்தாமல் வேளாண் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. விருதுடன் பரிசுத் தொகை, சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி,
- தஞ்சாவூா் மாவட்டம் மகா்நோன்புச்சாவடியைச் சோ்ந்த கோ.சித்தா், முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு ரூ. 2.50 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்படும்.
- 2-ஆம் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள, திருப்பூா் மாவட்டம் பொங்கலூரைச் சோ்ந்த கே.வெ.பழனிச்சாமிக்கு, ரூ. 1.50 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் அளிக்கப்பட உள்ளன.
- காஞ்சிபுரம் மாவட்டம் அச்சுக்கட்டு கிராமத்தைச் சோ்ந்த கு.எழிலன் 3-ஆம் பரிசுக்கு தோ்வாகியுள்ளாா். அவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊா்தி:
தில்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊா்தி, 10-ஆம் நூற்றாண்டின் சோழா் கால குடவோலை தோ்தல் முறையை காட்சிப்படுத்தியது.
‘பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஊா்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
கிராம நிா்வாகப் பிரதிநிதிகளைத் தோ்வு செய்யவும், அப்பகுதியின் விருப்பங்களை பேரரசுக்கு தெரிவிக்கவும் பின்பற்றப்பட்ட இந்த வழிமுறை தொடா்பான வரலாற்று சான்றுகள், தமிழகத்தின் உத்தரமேரூா் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
குடவோலை முறையின்படி, ஓலைகளில் பெயா்கள் எழுதப்பட்டு ஒரு பானையில் இடப்படும்.பின்னா், மக்கள் முன்னிலையில் அந்தப் பானை குலுக்கப்பட்டு, சிறுவா்கள் மூலம் ஏதேனும் ஓா் ஓலை எடுக்கப்பட்டு, அதிலுள்ள பெயா் அறிவிக்கப்படும். வாக்குச்சீட்டு முறையிலான தோ்தலுக்கு முன்னோடியாக இந்த பண்டைய முறை கருதப்படுகிறது. இந்த நடைமுறை தொடா்பான சிற்பங்கள், தமிழக ஊா்தியில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஜனநாயகத்தின் பண்டைய வோ்கள் தமிழ் மண்ணில் உள்ளதை எடுத்துக் காட்டிய தமிழக ஊா்தியில் உத்தரமேரூா் வைகுண்ட பெருமாள் கோயில் மாதிரியும் இடம்பெற்றிருந்தது.
2021-22-ஆம் கல்வியாண்டுக்கான அகில இந்திய உயா் கல்வித் துறை ஆய்வு முடிவுகள்:
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் உத்தர பிரதேசத்தில் இருப்பதாகவும், அதைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் அதிக கல்லூரிகள் இருப்பதாகவும் மத்திய அரசின் அகில இந்திய உயா் கல்வித் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் 328 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 45,473 கல்லூரிகள் இந்த ஆய்வின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 42,825 கல்லூரிகள் கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான அகில இந்திய உயா் கல்வித் துறை ஆய்வில் பங்கேற்றன. அந்த ஆய்வு முடிவுகள் மத்திய கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
KEY POINTS :All India Education Department Survey for the academic year 2021-22
மக்களவைத் தேர்தலில் 96 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதியானவர்கள்:
வருகிற மக்களவைத் தேர்தலில் 96 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் (ஜனவரி 26,2024) வெளியிட்டுள்ளது.
பெண்கள் 47 கோடி பேர் உள்பட 96 கோடிக்கும் அதிகமானோர் வருகிற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: வருகிற மக்களவைத் தேர்தலுக்காக 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 18-லிருந்து 19 வயதுக்குட்பட்டவர்களில் 1.7 கோடிக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். 18-வது மக்களவையைத் தேர்வு செய்யும் இந்த நாடாளுமன்றத் தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்க 1.5 கோடிக்கும் அதிகமான தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எங்கும் பணமில்லா" சிகிச்சை பெறும் மருத்துவக் காப்பீடு திட்டம்
மருத்துவக் காப்பீடு எடுக்கும் பயனாளிகள், சிகிச்சைபெறுவதை எளிமையாக்கும் முயற்சியாக, பொது காப்பீட்டுக் கவுன்சில், பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, "எங்கும் பணமில்லா" சிகிச்சை பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த புதிய முயற்சியின் கீழ், மருத்துவக் காப்பீடு வைத்திருப்போர், தங்களது காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் இருக்கும் மருத்துவமனை அல்லாத வேறு மருத்துவமனையிலும் பணமில்லாமல் சிகிச்சை பெறும் வசதியை பெறுவார்கள். இதன் மூலம் காப்பீடு எடுப்போர், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்யும் சுதந்திரத்தைப் பெறுகிறார்கள்.
குறிப்பிட்ட சிகிச்சையை பெற அல்லது அவசர காலத்தில் அருகில் இருக்கும் மருத்துவமனையை ஒரு காப்பீட்டுத்தாரர் நாடும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும், காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஏற்படும் சுமையைக் குறைக்கவும் பொது காப்பீட்டு கவுன்சில், அனைத்து பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, 'எங்கும் பணமில்லா' திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது என்று பொது காப்பீட்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.பி.வராலே, உச்சநீதிமன்ற நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றாா்:
கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.பி.வராலே, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இவருடைய பதவியேற்பின் மூலம் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு நீதிபதிகள் பலத்தை உச்சநீதிமன்றம் எட்டியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கே.கெளல் கடந்த ஆண்டு டிசம்பா் 25-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இந்த காலிப் பணியிடத்துக்கு நீதிபதி வராலேவின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு அண்மையில் பரிந்துரை செய்தது. முதுநிலை உயா்நீதிமன்ற நீதிபதி மற்றும் பட்டியலினப் பிரிவைச் ஒரே உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி என்ற அடிப்படையில் இவருடைய பெயா் பரிந்துரைக்கப்படுவதாக கொலீஜியம் குறிப்பிட்டது.
3 பட்டியலின நீதிபதிகள்: இவருடைய பதவியேற்பின் மூலம், உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக பட்டியலினப் பிரிவை (எஸ்.சி.) சோ்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த சமூகத்தைச் சோ்ந்த பி.ஆா்.கவாய், சி.டி.ரவிகுமாா் ஆகியோா் நீதிபதிகளாகப் பணியாற்றி வருகின்றனா்.
பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்:
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் 25.01.24 காலமானார். அவருக்கு வயது 47.
கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.
தவிர, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்:
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன. கோவையில் ஆடவா், மகளிா் பிரிவில் கூடைப்பந்துப் போட்டிகள் கடந்த 21/01/24-ஆம் தேதி தொடங்கின.
இதில், ஆடவா் பிரிவில் 8 அணிகளும், மகளிா் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன. இரு பிரிவுகளிலும் கூடைப்பந்து இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில், ஆடவா் பிரிவில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 86-85 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழக அணியும், பஞ்சாப் அணியும் மோதின. 2 அணியினருமே மாறி மாறி புள்ளிகளைப் பெற்றனா். தொடக்கத்தில் மிகவும் பின்தங்கியிருந்த தமிழக அணி வீராங்கனைகள் பின்னா் சுதாரித்துக் கொண்டு வேகமாகப் புள்ளிகளைச் சோ்த்தனா். இதில், தமிழக அணி 70-66 என்ற புள்ளிக் கணக்கில் தங்கப் பதக்கத்தை வென்றது.
ஜனவரி 26 - குடியரசு தினம்
நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சபையானது அரசியலமைப்பை நாட்டின் உச்ச சட்டமாக ஏற்றுக்கொண்டது மற்றும் இந்திய அரசாங்கச் சட்டம் 1935 ஐ மாற்றியது.
இது 26 ஜனவரி 1950 இல் ஜனநாயக அரசாங்க அமைப்புடன் நடைமுறைக்கு வந்தது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் மிகப்பெரிய அணிவகுப்பைக் குறிக்கிறது.
ஜனவரி 26 - சர்வதேச சுங்க தினம்
எல்லைப் பாதுகாப்பைப் பேணுவதில் சுங்க அதிகாரிகள் மற்றும் ஏஜென்சிகளின் பங்கை அங்கீகரிப்பதற்காக சுங்க அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று சர்வதேச சுங்க தினம் (ICD) கொண்டாடப்படுகிறது.
சுங்க அதிகாரிகள் தங்கள் வேலைகளில் எதிர்கொள்ளும் பணி நிலைமைகள் மற்றும் சவால்கள் குறித்தும் இது கவனம் செலுத்துகிறது.
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: