Padma Awards -2024-ம் ஆண்டுக்கான அரசு பத்ம விருதுகள்

TNPSC PAYILAGAM
By -
0


2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள்

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு  இரவு அறிவித்தது. பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம பூஷண் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், தமிழக முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி, பாடகி உஷா உதுப், நடிகா் மிதுன் சக்கரவா்த்தி, டென்னிஸ் வீரா் ரோஹன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் எழுத்தாளா் ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி டி சிவலிங்கம், இந்தியாவின் முதல் யானை பெண் பராமரிப்பாளா் பாா்வதி பருவா, வன சூற்றுச்சூழல் ஆா்வலா் சாய்மி முா்மு, மிஸோரமின் சமூக ஆா்வலா் சங்தாங்கிமா, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் பிரேமா தன்ராஜ், தெற்கு அந்தமானில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லம்மாள், 650-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாத்து வரும் காசா்கோட்டைச் சோ்ந்த விவசாயி சத்யநாராயண பெலேரி, சா்வதேச மல்லா்கம்பம் பயிற்சியாளா் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே என 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு (74), பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி (68), சென்னையைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம் (80), பிகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள்

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன: 

பத்ம விபூஷன் (விதிவிலக்கான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காக), 

பத்ம பூஷன் (உயர் வரிசையின் புகழ்பெற்ற சேவை) மற்றும் 

பத்மஸ்ரீ (புகழ்பெற்ற சேவை). பொது சேவையின் ஒரு அங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகள் அல்லது துறைகளில் சாதனைகளை அங்கீகரிக்க இந்த விருது முயல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நியமன செயல்முறை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. சுய நியமனம் கூட செய்யலாம்.

வரலாறு மற்றும் பொருத்தம்

இந்திய அரசாங்கம் 1954 இல் இரண்டு சிவிலியன் விருதுகளை நிறுவியது - பாரத ரத்னா & பத்ம விபூஷன். பிந்தையது பஹேலா வர்க், துஸ்ரா வர்க் மற்றும் திஸ்ரா வர்க் என மூன்று வகுப்புகளைக் கொண்டிருந்தது. ஜனவரி 8, 1955 அன்று வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவர் அறிவிப்பின்படி இவை பின்னர் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மறுபெயரிடப்பட்டன.

யார் தீர்மானிப்பது

பத்ம விருதுகளுக்காக பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் முன் வைக்கப்படுகின்றன. பத்ம விருதுகள் குழுவானது கேபினட் செயலாளரின் தலைமையில் உள்ளது மற்றும் உள்துறை செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நான்கு முதல் ஆறு பிரபலங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவின் பரிந்துரைகள் இந்தியப் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுகின்றன.


 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள்

வைஜெயந்திமாலா: இந்திய சினிமா பிரபலம் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். 91 வயதான அவர் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் . அவருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மா சுப்ரமண்யம்: நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யம், மாநில அளவிலும், தேசிய அளவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளை தனது கலை பயணத்துக்க வென்றுள்ளார். 80 வயதான அவர் கடந்த 1981-ல் பத்மஸ்ரீ விருதையும், 2003-ல் பத்ம பூஷண் விருதையும் வென்றுள்ளார். இந்த சூழலில் தற்போது அவருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்: தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். தேமுதிக-வின் நிறுவனத் தலைவர். கடந்த டிசம்பரில் அவர் காலமானார். இந்த சூழலில் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பன்: 87 வயதான கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடன கலைஞர் பத்திரப்பன் பத்மஸ்ரீ விருதை வென்றுள்ளார். புராணம் மற்றும் இந்திய வரலாற்றை தனது கலை மூலம் பரப்பி வருகிறார். தனது கலையில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய வழக்கத்தை தகர்த்து பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

ஜோஷ்னா சின்னப்பா: 37 வயதான சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை. உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ டி குரூஸ்: எழுத்தாளர் ஜோ டி குரூஸ், சாகித்ய அகாடமி விருதை இவரது படைப்பு வென்றுள்ளது. இந்த சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி. நாச்சியாருக்கு மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

சேசம்பட்டி டி.சிவலிங்கம்: தமிழகத்தை சேர்ந்த நாதஸ்வர கலைஞரான சேசம்பட்டி டி.சிவலிங்கத்துக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE : https://www.padmaawards.gov.in/Content/PadmaAwardees2024.pdf

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!