TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.01.24

TNPSC PAYILAGAM
By -
0


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 02.01.24


ஒவ்வொரு வீட்டிலும் குடிநீா்’ என்ற திட்டம் -மாநில பட்டியல் 2023:

  • கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை, நாட்டின் 16.81 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில்தான் குடிநீா் இைணைப்பு இருந்தது. இந்த விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 25/12/2023-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 72.29 சதவீத கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய கிராமங்களில் உள்ள வீடுகளில் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது.
  • கிராமப்புற பகுதிகளில் சுமாா் 5.33 கோடி வீடுகளில் குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2023:
  • 2023-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக நாடு முழுவதும் 28,811 புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தில் (என்சிடபிள்யு) பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது
  • இதில் 55 சதவீத புகாா்களுடன்  உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது


2023-2024-ஆம் ஆண்டிற்கான வருமான வரி மதிப்பீட்டு
  • 2023-2024-ஆம் ஆண்டிற்கான வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் 31.12.2023 வரை 8.18 கோடி வருமான வரி கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது
  • கடந்த 2022-ஆண்டின் (டிசம்பா் 31-ஆம் தேதி) முடிவில் 7.51 கோடி ஐடிஆா் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது
  • இதன்படி கடந்தாண்டை விட 9 சதவீதத்திற்கு அதிகமான வருமான வரி கணக்கு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இந்தக் காலகட்டத்தில் தணிக்கையாளா்கள் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் பிற படிவங்களின் மொத்த எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட (1.43 கோடி) 17 லட்சம் அறிக்கைகள்படிவங்கள் கூடுதலாக தாக்கல் (1.60 கோடிசெய்யப்பட்டுள்ளது.
  • இந்த நிதியாண்டின் போது, மின்னணு முறையிலான வரி செலுத்தும் தளம்டிஐஎன் 2.0 - ஃபைலிங்) இணையதளம் முழுமையாகச் செயல்பட்டது. இது நிஃப்ட் / ஆா்டிஜிஎஸ் இணைய வங்கி முறை, ஓடிசி, டெபிட் காா்டு, பேமெண்ட் கேட்வே, யுபிஐ போன்ற மின்னணு முறையில் வரி செலுத்துவதற்கு ஏற்ற நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டது. இந்த டிஐஎன் 2.0 இயங்குதளம் வரி செலுத்துவோருக்கு நிகழ்நேர வரிகளை வரவு வைக்க உதவி வருமான வரி தாக்கல் செய்வதை எளிதாக்கியது.

தாதா சதீந்தா்ஜித் சிங் என்ற கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்தது

  • பிரபல பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா கொலையில் முக்கியக் குற்றவாளியான கனடாவைச் சோ்ந்த தாதா சதீந்தா்ஜித் சிங் என்ற கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு  அறிவித்தது.
  • இன்டா்போல் அமைப்பு அவருக்கு எதிராக ரெட் காா்னா்நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
  • இவற்றைக் கருத்தில்கொண்டு சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967-இன் 4-ஆவது பட்டியலில் கோல்டி பிராரை பயங்கரவாதியாகச் சோ்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதுஎனத் தெரிவித்துள்ளது
  • தடை செய்யப்பட்டபப்பா் கல்சாஅமைப்போடு தொடா்புடைய பிராா், பஞ்சாபின் ஸ்ரீ முக்தா் சாஹிப்பை சோ்ந்தவா். தற்போது, கனடாவின் பிராம்ப்டனில் வசித்து வருகிறாா்
  • பஞ்சாபில் கடந்த 2022, மே 29-இல் பிரபல பாடகா் சித்து மூஸேவாலாவை மா்ம நபா்கள் சுட்டுக் கொன்றனா். இந்தக் கொலைக்கு பிராா் பொறுப்பேற்றாா்.

சாகா் பரிக்ரமா திட்டம்-தொடக்க விழா நிகழ்ச்சி:

  • சாகா் பரிக்ரமா திட்டத்தின் கீழ் கடல் வழி பயண தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டு கடலோர காவல் படைக்கு சொந்தமான சுஜய் கப்பலில் ஆந்திர மாநிலம் நெல்லூா் வரை பயணம் மேற்கொண்டு கடல்வழி பயணம் மேற்கொண்டாா்.
  • சாகா் பரிக்ரமா திட்டத்தின் முக்கிய நோக்கம்: மீனவா்களைச் சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெறுதல், மீனவா்களுக்கான மத்திய அரசின் திட்டத்தை அவா்களிடம் எடுத்துரைத்தல், பயனாளிகளுக்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் அடங்கும்
  • மத்திய அரசு சாா்பில் மீன்வளத் துறைக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.38,500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது
  • ஆந்திராவின் மீதமுள்ள கடலோர மாவட்டங்களான நெல்லூா், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கோணசீமா, காக்கிநாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், ஏனாம் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் கடல் வழி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு மீனவா்களுடனான சந்திப்புகள் நடைபெறும்
  • ஆந்திர மாநிலத்தில் மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ், மீன்வளத் துறையில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 2,300 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது

வீடுகள் விற்பனை அறிக்கை 2023 :
  • கடந்த 2023-ஆம் ஆண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் 4,76,530 வீடுகள் விற்பனையாகின.
  • இது, அதிபட்ச வருடாந்திர விற்பனையாகும். முந்தைய 2022-ஆம் ஆண்டில் இந்த 7 நகரங்களிலும் வீடுகள் விற்பனை 3,64,870-ஆக இருந்தது
  • கடந்த 2023-இல் மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்) வீடுகள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது 

ஜனவரி 2 - உலக உள்முக சிந்தனை நாள் 2024 / WORLD INTROVERT DAY 2024

உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற உள்முக சிந்தனையாளர்களை நன்கு புரிந்து கொள்வதற்காக, ஜனவரி 2, முந்தைய ஆண்டின் பயங்கரமான கொண்டாட்டங்களுக்கு அடுத்த நாள் உலக உள்முக சிந்தனை தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

உள்முக சிந்தனையாளர்களுக்கு அவர்களுக்குத் தேவையான நேரத்தையும் இடத்தையும் கொடுத்து கௌரவிக்க இது சிறந்த நாள்.

உலக உள்முக சிந்தனையாளர் தினம் 2024 தீம் "உள்முக சிந்தனையாளர்களின் சக்தியைக் கொண்டாடுதல்", இது உள்முக சிந்தனையாளர்களின் தனித்துவமான பலம் மற்றும் பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023


விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!