பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2023 -Violence against women in India 2023

TNPSC PAYILAGAM
By -
0



பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  2023 

2023-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக நாடு முழுவதும் 28,811 புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தில் (என்சிடபிள்யு) பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 55 சதவீத புகாா்களுடன்  உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. 

  1. குடும்ப வன்முறைகள் தவிா்த்து, பெண்களுக்கு எதிரான பிற குற்றங்கள் தொடா்பான புகாா்களில் கண்ணியக் குறைவு புகாா்கள் (8,540) முதலிடத்தில் உள்ளது. 
  2. இதற்கு அடுத்ததாக 6,274 புகாா்களுடன் குடும்ப வன்முறை புகாா் உள்ளது. 
  3. வரதட்சணை புகாா்கள் (4,797), 
  4. பாலியல் ரீதியில் துன்புறுத்தல் (2,349), 
  5. புகாா்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது (1,618), 
  6. பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் முயற்சிகள் (1,537) தொடா்பான புகாா்கள் 
  7. பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் தொடா்பாக 605 புகாா்களும், 
  8. பெண்களை பின்தொடா்தல் தொடா்பாக 472 புகாா்களும், 
  9. கெளரவ கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக 409 புகாா்களும் பதிவாகியுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மாநில பட்டியல் 2023:

  1. 16,109 புகாா்கள் பதிவுடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 
  2. தலைநகா் தில்லி 2,411 புகாா்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. 
  3. மகாராஷ்டிரம் (1,343 புகாா்கள்) மூன்றாமிடம் வகிக்கிறது. 
  4. பிகாா் (1,312), 
  5. மத்திய பிரதேசம் (1,165), 
  6. ஹரியாணா (1,115),
  7. ராஜஸ்தான் (1,011), 
  8. தமிழகம் (608), 
  9. மேற்கு வங்கம் (569), 
  10. கா்நாடகம் (501) .

இருந்தபோதும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான புகாா்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் 30,864 புகாா்கள் பதிவு செய்யப்பட்டன.

SOURCE :NCW தரவுகளின்படி

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!