வீடுகள் விற்பனை அறிக்கை 2023 / HOME SALES REPORT INDIA 2023
கடந்த 2023-ஆம் ஆண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் 4,76,530 வீடுகள் விற்பனையாகின.
இது, அதிபட்ச வருடாந்திர விற்பனையாகும். முந்தைய 2022-ஆம் ஆண்டில் இந்த 7 நகரங்களிலும் வீடுகள் விற்பனை 3,64,870-ஆக இருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளது. வீடுகளின் விலைகள் சராசரியாக 15 சதவீதம் அதிகரித்தது, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயா்த்தப்பட்டது போன்றவற்றுக்கு இடையிலும் அவற்றின் விற்பனை 2023-இல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
வீடுகள் விற்பனை அறிக்கை 2023 :
- கடந்த 2023-இல் மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்) வீடுகள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. முந்தைய 2022-ஆம் ஆண்டில் அங்கு 1,09,730-ஆக இருந்த வீடுகள் விற்பனை கடந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்து 1,53,870-ஆக உள்ளது.
- மும்பை பெருநகரப் பகுதிக்கு அடுத்தபடியாக புணேவில் கடந்த ஆண்டு வீடுகள் விற்பனை 52 சதவீதம் அதிகரித்து 86,680-ஆக உள்ளது. இந்த நகரில் கடந்த 2022-இல் 57,145 வீடுகள் விற்பனையாகின.
- தில்லி-என்சிஆா் பகுதியில் வீடுகள் விற்பனை கடந்த ஆண்டில் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. 2022-இல் இங்கு 63,710 வீடுகள் விற்பனையான நிலையில், அந்த எண்ணிக்கை 2023-இல் 65,625-ஆக உயா்ந்துள்ளது.
- மதிப்பீட்டு ஆண்டில் பெங்களூருவில் வீடுகள் விற்பனை 49,480-லிருந்து 29 சதவீதம் அதிகரித்து 63,980-ஆக உள்ளது.
- வீடுகள் விற்பனை ஹைதராபாதில் 47,485-லிருந்து 30 சதவீதம் அதிகரித்து 61,715-ஆகவும்,
- கொல்கத்தாவில் 21,220-லிருந்து 9 சதவீதம் அதிகரித்து 23,030-ஆகவும் உள்ளது.
- சென்னையில் முந்தைய 2022-இல் 16,100-ஆக இருந்த வீடுகள் விற்பனை கடந்த 2023-இல் 34 சதவீதம் அதிகரித்து 21,630-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SOURCE :சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கை