Thursday, October 5, 2023

உதயணகுமார காவியம்-TNPSC EXAM KEY POINTS NOTES PDF

பகுதி – (ஆ) – இலக்கியம்- ஐஞ்சிறுங்காப்பியங்கள்

உதயணகுமார காவியம்

உதயகுமார காவியம் தமிழில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ள ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும்.

இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது. இது சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல்

இது குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத் கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7-ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல்.

நூல் பகுப்பு:

உதயணகுமார காவியம் உதயணனின் கதையைக் கூறுகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன.

  • உஞ்சைக் காண்டம்
  • இலாவாணக் காண்டம்
  • மகத காண்டம்,
  • வத்தவ காண்டம்
  • நரவாகன காண்டம்
  • துறவுக் காண்டம்.

TNPSC EXAM KEY POINTS -உதயணகுமார காவியம்

  1. இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு.
  2. உதயணன் என்பவனின் கதையை இது கூறுகிறது.
  3. கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.
  4. இது உதயணன் கதையை கூறும் நூல்.
  5. மிகப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் ஆகும்.
  6. உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
  7. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம்.
  8. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.
  9. இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை. * உதயண குமார காவியம் என்பது பெருங்கதை என்னும் இலக்கியத்தைச் சுருக்கி எளிமைப்படுத்தித் தரும் இலக்கியம் ஆகும். * இந்நூலின்கண் 367 செய்யுட்கள் உள்ளன.
  10. உதயணன் கதை இதன் அடைமொழி.
  11. இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயண்ணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.
  12. உ.வே.சாமிநாதர் இந்நூலை 1935 பதிப்பித்து வெளியிட்டார்.


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: