Thursday, October 5, 2023

நாககுமார காவியம்-TNPSC KEY POINTS NOTES PDF

பகுதி – (ஆ) – இலக்கியம்- ஐஞ்சிறுங்காப்பியங்கள்

நாககுமார காவியம்

நாககுமார காவியம் அல்லது நாகபஞ்சமி கதை எனப்படும். இந்நூல், தமிழில் தோன்றிய சிறு காப்பியங்களில் ஒன்றாகும். இதை எழுதியவர் யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கௌதமர் என்பார் அவனுக்குக் கதை கூறும் பாங்கில் இந்நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 170 விருத்தப்பாக்களால் ஆக்கப்பட்ட இந்நூல் ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சமண சமய நூலான நாககுமார காவியம் அச் சமயக் கொள்கைகளை நூலில் விளக்க முற்படுகிறது. இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம். பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு முத்தி பெறுவதற்குத் துறவின் இன்றியமையாமை பற்றிப் பேசுவதே இக்கதையின் நோக்கமாகத் தெரிகிறது.

இந்நூல் ஐந்து (5) சருக்கங்களில் நூற்றி எழுபது (170) விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கின்ற நூலாகும்.முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. இக்கதையின் நாயகன் ஐந்நூற்றி பத்தொன்பது (519) பெண்களை மணம் செய்கிறார். இந்நூல் 16-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது

TNPSC EXAM KEY POINTS -நாககுமார காவியம்

  1. நாககுமாரகாவியம் வேறு பெயர்-நாகபஞ்சமி கதை
  2. நூலாசிரியர் சமண மதத்தைச் சார்ந்த துறவியாக இருக்கலாம் என்பதைத் தவிர வேறெதுவும் தகவல் இல்லை.
  3. இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை.
  4. 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது.
  5. முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான்.
  6. காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.
  7. நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்.
  8. மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
  9. 519 பெண்களை மணக்கிறான் தலைவன்
  10. இந்நூலை “சொத்தை நூல்” என்கிறார் மது.ச.விமலானந்தம்
  11. அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: