பகுதி – (ஆ) – இலக்கியம்
தேம்பாவணி
தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, ஸ்பானிய நாட்டு ஆகிருத நகரில் வாழ்ந்த ஆகிர்த மரியாள் (Maríyal de Ágreda) என்னும் கன்னி மறைபொருளான இறைநகரம் (Mystical City of God) என்னும் நூலை, கன்னி மரியாவின் ஆணைப்படி எழுதியதாகக் கூறியுள்ளார். அந்த நூலில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றிய செய்திகளும் உண்டு. ஆகிர்த மரியின் அந்நூலைத் தழுவி, தமிழ் மரபுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் வீரமாமுனிவர்.
நூலின் அமைப்பு:
தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன.
மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.
இந்நூல் கிறித்தவச் சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.
தேம்பாவணியின் பொருள்:
தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு.
இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.
தேம்பாவணியின் அரங்கேற்றம்:
'தேம்பாவணி' கி.பி. 1726-ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது.
"தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தது.
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – வீரமாமுனிவர்
- இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
- பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி – எலிசபெத்
- பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
- அறிந்த மொழிகள் – இத்தாலியம் இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமற்கிருதம்.
- தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்
- சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை
- காலம் – 1680 – 1747
- இயற்றிய நூல்கள்: 1.ஞானோபதேசம், 2. பராமார்த்த குருகதை, 3. சதுரகராதி, 4. திருக்காவலூர்க் கலம்பகம், 5. தொன்னூல் விளக்கம்
TNPSC EXAM KEY POINTS: THEMBAVANI
- தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர்
- தேம்பா + அணி, தேம்பா என்பதற்கு “வாடாத” என்றும் அணி என்பதற்கு “மாலை” என்றும் பொருள். ஆகத் தேம்பாவணி என்பதற்கு “வாடாத மாலை” என்று பொருள்.
- தேன் + பா + அணி, தேன் போன்ற பாக்களால் ஆன மாலை” என்றும் பொருள் கூறுவர்.
- 20ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் சமயச்சார்பானவை. இக்காப்பியமும் கிறித்துவச் சமயத்தைச் சார்ந்த நூல்.
- 3 காண்டங்களையும், 36 படலங்களையும் 3615 பாடல்களையும் கொண்ட நூல்
- இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பரைப் பாட்டுடைத் தலைவராக கொண்ட பாடப்பட்ட நூல்
- சூசையப்பர் வரலாறு, அன்னை இறைமகன் பங்கு, பழைய, புதிய ஏற்பாட்டு வரலாற்று நிகழ்வுகள் இதன் அடிப்படையாகும்.
- காப்பியத்தின் இலக்கணத்தை கூறும் தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல் காப்பியத்தில் அமையும் கிளைக்கதைகள் பற்றி ஏதும் கூறுவில்லை. இதில் ஏறக்குறைய 40 கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.
- இல்லற வாழ்க்கையைவிடத் துறவற வாழ்க்கையை வலியுறுத்துகிறது.
- காப்பியத் தலைவரையே தூது செல்பவராகக் காட்டியிருப்பது இதன் புதுமை
- காப்பியத் தலைவன் மண்ணுலகில் முடிசூட்டிக் கொண்டு வாழந்து முடித்துப் பின் விண்ணுலுகு செல்வான். இதன் கதைத் தலைவருக்கு முதலில் விண்ணுலகில் முடிசூட்டப்படுகிறது. பின் மண்ணுலகிலும் ஒர மன்னன் முடிசூட்டுகிறான்.
- இறைவனின் முழு உருவ வழிபாட்டை ஏற்கிறது. “வேரிய கமல பாதம் வினையறப் பணிந்து போற்றி”, “கைகூப்பிக் கூறலுற்றான்” போன்ற தொடர்கள் இது தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட நூல் என்பதை உணர்த்துகிறது.
- கிறிஸ்தவ கலைக்களஞ்சியமாக திகழும் நூல்
- இதன் சொற்களும், தொடர்களும், பொருள் போக்கும் தமிழ்ப்புலவர்ககும் கடினமான ஒன்றாக இருக்கிறது.
- தமிழ் கற்பித்த ஆசிரியர் – சுப்ரதீக் கவிராயர்.
- தொன்னூல் விளக்கம் – ஐந்திலக்கண நூல் (குட்டித் தொல்காப்பியம்)
- தமிழ் அகராதியின் தந்தை – வீரமாமுனிவர்.
- சின்னச்சீறா – பனு அகமது மரைக்காயர் (2145 பாடல்கள்)
- தமிழின் முதல் அகராதி – சதுரகராதி (பெயர், பொருள், தொகை, தொடை)
- தமிழின் முதல் ஏளன நூல் – பரமாத் குருகதை
No comments:
Post a Comment