Monday, October 16, 2023

ஸ்ரீகுப்தர் -GUPTA EMPIRE -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL


குப்தப் பேரரசு -முற்கால குப்தர்கள்

ஸ்ரீகுப்தர் (Śri Gupta) (ஆட்சிக் காலம்:கி பி 240- 280)


வட இந்தியாவில் குப்த  வம்சத்தை நிறுவியர் ஆவார். வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகமாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.ஆ. 240-280). இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.ஆ. 280-319) ஆட்சிக்கு வந்தார்.

கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ.319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். 

இவர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். மற்றவர்களின் ஆவணங்களிலிருந்து இவரது பேரரசர் நிலை நமக்குப் புலப்படுகிறது. 

இவரது ஆட்சிக் காலத்தின் கல்வெட்டோ.நாணயமோநமக்குக்கிடைக்கவில்லை.

இரண்டாம் சந்திரகுப்தரின் மகள் பிரபாவதி குப்தரின் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, மன்னர் ஸ்ரீகுப்தர், குப்த வம்சத்தை நிறுவியதாக அறியப்படுகிறது.

நாளாந்தா பல்கலைக் கழகத்தில் பௌத்த சமயக் கல்வி கற்க, சீனாவிலிருந்து வரும் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான, ஸ்ரீகுப்தர் நாளந்தாவிற்கு அருகில் மிருகசிகாவனம் (Mṛgaśikhāvana) எனும் பௌத்த விகாரை ஒன்று கட்டிக் கொடுத்து, அருகில் உள்ள 40 வருவாய் கிராமங்களையும் இவ்விகாரைக்கு தானமாக வழங்கினார் என, கி பி 690-இல் நாளாந்தாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த அறிஞர் யிஜிங் (Yijing) தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்

ஸ்ரீகுப்தர் வைணவ சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும், தமது இராச்சியத்தில் சமணம் மற்றும் பௌத்த சமயங்களின் நடவடிக்கைகளை ஆதரித்தார்


GUPTA EMPIRE -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL GR 2 GR 4 VAO-(100 KEY POINTS QUESTIONS)

1. யாருடைய காலம் பண்பாட்டு மறுமலர்ச்சியின் காலம் செவ்வியல் கலைகளின் காலம் என அழைக்கப்படுகிறது ? குப்தர்களின் காலம் 

2. நீதிசாரம் ( தர்ம சாத்திரம் ) யாரால் எழுதப்பட்டது ? காமந்தகார் 

3. விசாகதத்தரின் இரு நூல்கள் ?               அ ) தேவி சந்திரகுப்தம் ஆ ) முத்ராராட்சம் 

4. சீன பயணி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியா வந்தார் ? 2 ம் சந்திரகுப்தர் 

5. மெஹரோலி இரும்பு தூண் கல்வெட்டு யாருடைய சாதனைகளை குறிக்கிறது? முதலாம் சந்திரகுப்தர்

6. அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியை விளக்குகிறது ?சமுத்திரகுப்தர் 

7. அலகாபாத் தூண் கல்வெட்டு யாரால் பொறிக்கப்பட்டது ? ஹரிசேனர் 

8. அலகாபாத் தூண் கல்வெட்டு எந்த வரி வடிவத்தில் எத்தனை வரிகளை கொண்டது ? நாகரி வடிவம் ( சமஸ்கிருதம் ) 33 வரி 

9. லிச்சாவி என்பதன் பொருள் ? வடக்கு பீகாரில் இருந்த பழமையான கனசங்கம் இது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதி .

10. முதலாம் சந்திரகுப்தரின் மனைவி குமார தேவி எந்த மரபை சேர்ந்தவர் ? லிச்சாவி

11 - குப்த வம்சத்தின் முதல் அரசர்? ஶ்ரீகுப்தர்

12. முதலாம் சந்திரகுப்தரின் காலம் ?    (கிபி 319-335 ) 

14. முதலாம் சந்திரகுப்தரின் தந்தை ?  

13. மகாராஜா -அதிராஜா என்ற பட்டத்தை பெற்றவர் யார் ?கடோத்கஜர் 

15. சமுத்திரகுப்தர் மௌரிய பரம்பரையில் வந்ததாக கூறிய சான்று எது ? அசோகரின் கல்வெட்டு 

16. கங்கைச் சமவெளியின் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை வென்றவர் யார் ? சமுத்திரகுப்தர் 

17. சமுத்திர குப்தரின் எந்த கல்வெட்டு அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார் என்று கூறுகிறது ? அலகாபாத் ( பிரயாகை ) கல்வெட்டு 

18. தெய்வ புத்திர சகானுசாகி என்பது ? ஒரு குஷாண பட்டம் 

19. யாருடைய காலத்தில் இலங்கை அரசன் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி கயாவில் பௌத்த மடம் கட்ட அனுமதி கோரினார் ? சமுத்திரகுப்தர் 

20. சமுத்திர குப்தரின் ஆட்சிக்காலம் ? 11 - குப்தர் 40 ஆண்டுகள் 

21. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் யார் ? சமுத்திரகுப்தர் 

22. வசுபந்து என்ற புத்த அறிஞரை ஆதரித்தவர் ? சமுத்திரகுப்தர் 

23. ஹரிசேனர் என்ற அறிஞரை ஆதரித்த குப்தரசர் ? சமுத்திரகுப்தர் 

24. யாருடைய காலத்தில் வீணை நாணயங்கள் பொறிக்கப்பட்டது ? சமுத்திரகுப்தர் 

25. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம் ? 40 ஆண்டுகள் 

26. இராம குப்தர் உடன் வாரிசுரிமைக்கு போராடி ஆட்சிக்கு வந்தவர் யார் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

27. விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் ?         இரண்டாம் சந்திரகுப்தர் 

28. பாடலிபுத்திரத்தை தலைநகரமாக கொண்டவர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

29.400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை படையெடுப்பின் மூலம் வென்றவர் யார் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

30. வாகட இளவரசருக்கு தன் மகள் பிரபாவதியை திருமணம் செய்து கொடுத்தவர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

31. விக்ரமன் , தேவ குப்தன் தேவராஜன் , சிம்ஹவிக்ரமன் , விக்ரமாதித்தன் சாகரி ஆகிய பெயர்கள் யாரைக் குறிக்கும் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

32.இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் கலை இலக்கியம் அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? நவரத்தினங்கள் 

33. அகராதி உருவாக்கியவர் யார் ? அமர சிம்மர் 

34. வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

35. இரண்டாம் சந்திரகுப்தர்க்குப்பின் ஆட்சி செய்தவர் ? முதலாம் குமார குப்தர் 

36. நாளந்தா பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார் : குமார குப்தர் 

37. குப்த வம்சத்தின் கடைசி பேரரசர் ? ஸ்கந்த குப்தர் 

38. குப்த வம்சத்தின் கடைசி அரசர் விஷ்ணு குப்தர் 

39 , விஷ்ணு குப்தரின் ஆட்சி 11- குப்தர் 540 முதல் 550 வரை 

40. யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்தப் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது ? இரண்டாம் சந்திரகுப்தர் 

41. மகா ராஜாதி ராஜா , பரம பட்டாரக , பரமேஸ்வர போன்ற பட்டங்களை கொன்டவர்கள் யார் ?குப்தர்கள் 

42. அலகாபாத் கல்வெட்டுகளில் புருஷா ( அனைவருக்கும் மேலானவர் ) என்று கடவுளுடன் ஒப்பிடபடுபவர் யார் ? சமுத்திரகுப்தர் 

43. குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெறுகிறது ? 6 

44. அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவி எது ? குமாரமாத்யா 

45. குமாரமாத்யா , சந்தி விக்கிரஹிகா , மகா தண்ட நாயகா பட்டங்களை பெற்றவர்?ஹரிசேனர் 

46. மகா தண்ட நாயகாக துருவபூதியின் புதல்வர் யார் ? ஹரிசேனர்

47. அமைச்சர்களில் உயர் நிலையில் இருப்பவர் ? மஹா சந்திர விக்ரஹா 

48. மகா அஸ்வபதி என்பதின் பொருள் ? குப்தர் குதிரைப்படைத் தலைவர் 

49. குப்தர்களின் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது ? தேசம் அல்லது புக்தி 

50. மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் ? உபாரிகா 

51. மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிக அதிகாரிகளையும் நியமித்தவர்கள் ? உபாரிகாக்கள் 

52. மூன்று உபாரிகளுக்கு  ராஜா என்ற பட்டம் இருந்ததாக கூறுவது எது ? தாமோதர் செப்பேடுகள்

53. குப்தர் ஆண்டாக ஈரான் கல்வெட்டு குறிப்பிடுவது எது ? கிபி 165

54. லோக பாலா என்பது யாரை குறிப்பிடுகிறது ? மாநில ஆளுநர் 

55.குப்தப் பேரரசின் மாநிலங்கள் எந்த அதிகாரியின் கீழ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன மற்றும் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? விஷ்யபதி , விஷ்வா 

56. மாவட்ட மட்டத்திற்கு கீழ் உள்ள பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் ? விதி , பூமி , பீடா , பதகா 

57. அஷ்ட குல அதிகாரனா என்பதன்   பொருள் ?  8 உறுப்பினர் கொண்ட குழு 

58. மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ? தண்டபாஷிகா 

60. கத்யதபகிதா என்பதன் பொருள் ? அரச சமையல் அறை கண்காணிப்பாளர் 

61. துடகா எந்த அமைப்பை குறிக்கிறது ? ஒற்றர்கள் அமைப்பு 

62. அரசு கருவூலத்தில் முக்கிய வருவாய்கள் .மூலவளங்கள் பற்றி குறிப்பிடும் நூல் ? நீதி சாரா 

63. அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரியின் பெயர் ? அக்ஷபதலதிக்கிருதா 

64 , இரணியவெஷ்தி என்பதன் பொருள் என்ன ? கட்டாய உழைப்பு

65.  தரிசு நிலத்தின் பெயர் ? கிலா

66. எந்த செப்பேடு அரசர் தான் என்று காட்டுகிறது ? பஹார்பூர் செப்பேடு 

67. மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாத்து அதிகாரி? உஷ்தபாலா

68. பயிரிடக்கூடிய நிலத்தின் பெயர் ? ஷேத்ரா 

69 , அப்ரஹதா என்பதன் பொருள் ? காடு அல்லது தரிசு நிலம்

 70. குடியிருக்க தகுந்த நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? வாஸ்தி 

71. அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம் பெறும் முறை ? நிவி தர்மா 

72. நிரந்தரமான அறக்கட்டளை -பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் இது எவ்வகை நிலக்குத்தகை ? நிவிதர்ம அக்ஷயனா

73.வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அதை பிறருக்கு தானம் செய்ய முடியாது , நிர்வாக உரிமையும் இல்லை இது எவ்வகை நிலக்குத்தகை ? அப்ரதா தர்மா  

74 , தரிசு நிலத்தை முதன்முதலாக சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை இந்த நிலத்திற்கு குத்தகை இருந்து விலக்கு அளிக்கப்பட்டது இது எவ்வகை நில குத்தகை ? பூமி சித்ராயனா 

75. குப்தர் காலத்தில் நில கொடைகள் எத்தனை வகைப்படுத்தப்பட்டன ? 3 

76. பிராமணருக்கு தரப்படும் நிரந்தரமான பரம்பரையாக வரக்கூடிய நிலமானியம் இதற்கு வரி கிடையாது இதன் பெயர் ? அக்ரஹார மானியம் 

77. கோயில் மராமத்து வழிபாடு ஆகிய பணிகளுக்காக பிராமணர்கள் வணிகர்கள் ஆகியோர்களுக்கு அளிக்கப்படும் மானியம்?தேவகிரகார மானியம்

78. குப்தர்களுக்கு கீழிருந்த நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட மானியம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?சமயசார்பற்ற மானியம் 

79. குப்தர் காலத்தில்குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த மிகப் புகழ்பெற்ற ஏரி ? சுதர்சனா ஏரி 

80. குப்தர் காலத்தில் பாசனத்திற்கு உதவிய பந்தியா . கரா என்ற இருவகை அணைக்கரை பற்றி குறிப்பிடும் நூல் எது ? நாரத ஸ்மிருதி 

81. விளைச்சலில் அரசன் பெறும் வரியை குறிப்பிடும் வரி எது ? ஆறில் ஒரு பங்கு பாகா வரி 

82. அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள் விறகு பூக்கள் போன்றவை குறிப்பிடும் வரி ? போகாவரி

83. கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் வரி? கரா

84. ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வழியாக இருந்து பின்னர் கட்டாய வழியாக மாற்றப்பட்டது இது ஒரு அடுக்கு முறை வரி ? பலி வரி 

85. காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வழியாகவும் இருக்கலாம் எனினும் இது ஒரு கூடுதல் வரி அவ்வரி எது ? உதியங்கா வரி 

86. இது ஒரு கூடுதல் வரி .ஆனால் வசூலிக்கப்பட்டதற்காக அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர் ? உபரிகரா 

87. எவ்வரி தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என நேரடி பொருள் தரும் இது நடைமுறையில் குறிப்பிட்ட தானியங்களில் விளைச்சலின் ஒரு பங்கினை அரசின் பங்காக பொருளாகவே அளிக்கிறது ? ஹிரண்யா 

88. காட்டுக்கும் ஆவிக்கும் செய்யவேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகளின் பெயர் என்ன ? வாத பூதா 

89. கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்டவேண்டிய கலப்பை வரியின் பெயர் என்ன ? ஹலிவகரா 

90. குப்தர் காலத்தில் வசூலிக்கப்பட்ட நுழைவு வரியின் பெயர் என்ன ? சுல்கா வரி 

91. நிலப் பதிவின்போது விதிக்கப்படு பெயர் என்ன ? கிளிப்தா , உபகிளிப்தா 

92. குப்தர் காலத்தில் இரும்பு படிகள் மற்றும் செம்பு படிகள் எங்கிருந்து பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன ? பீகார் ராஜஸ்தான்

93. குப்தர் கால ஆட்சியின் தென்பகுதியில் மிளகு ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்தது என்பதை யாருடைய நூலின் மூலம் அறியலாம் ? காளிதாசர் 

94. குப்தர்கால வணிகத்தில் பொதுவாக ஒரே இடத்தில் தங்கி இருப்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ? சிரேஷ்டி 

95. லாபத்திற்காக ஊர்ஊராக சென்று வணிகம் செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? சார்த்த வாகா 

96. வணிகக் குழுக்கள் வங்கிகளின் பங்கி குறிப்பிடும் கல்வெட்டு ? மண்டசோர் கல்வெட்டு 

97. வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்கு கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று யார் குறிப்பிடுகிறார் ? சீனப்பயணி பாஹியான் 

98. குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் எவ்வகை நாணயங்களை வெளியிட்டனர் ? தங்க நாணயங்கள் 

99. குப்தர்கள் காலத்தில் எவ்வகை பாணியிலான கலைகள் வளர்ந்தன ?நகரம் , திராவிடம் 

100. குப்தர் கால குடைவரை கோவில்கள் காணப்படும் இடங்கள் ? அஜந்தா , எல்லோரா , பாக் உதயகிரி 

101. சிவப்பு மட்பாண்டங்கள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை ? குப்தர் காலம் 

102. அஷ்டத்தாயி என்ற நூல் யாரால் எழுதப்பட்டது ? பாணினி 

103. மகாபாஷ்ய என்ற நூலை எழுதியவர்? பதஞ்சலி 

104 .சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலை எழுதியவர் ? சந்திரகோமியர் 

105. குப்தர்கால குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் யார் ? ஆரிய தேவர் , ஆரிய அசங்கர் 

106. குப்தர்கால அலுவலக மொழி ? சமஸ்கிருதம் 

107. சமண ராமாயணத்தை எழுதியவர் ? விமலா 

108. சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமோர்வசியம் போன்ற புகழ்பெற்ற நாடகங்களை எழுதியவர் யார் ? காளிதாசர் 

109. மகாவிஹாரா என்று அழைக்கப்பட்டது எது : நாளந்தா 

110.5 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டிலிருந்து 1,200 வரை புகழ்பெற்ற கல்வி சாலையாக இருந்தது எது ? நாளந்தா பல்கலைக்கழகம் ( பாதுகாக்கப்படும் உலகின் தொன்மையான சின்னம் ) · 

111. பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட வருடம் எது ? 1200 

112. நாளந்தா பல்கலைக்கழகத்தின் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட வருடம் ? 1915 

113. சுழியம் பதின்ம இலக்கு முறை யாருடைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ?குப்தர்கள் காலம் 

114 .சூரிய சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர் யார் ? ஆரியபட்டர் 

115. கணிதம் , கோணவியல் , அல்ஜீப்ரா ஆகியவற்றை பேசும் நூல் எது ? ஆரியபட்டியம் 

116. பிருஹத் சம்ஹிதா என்ற நூலை எழுதியவர் யார் ? வராகமிகிரர் 

117 .பிரம்மகுப்தரின் நூல்கள் ? பிரம்மஸ்புத சித்தாந்தா , கண்டகாத்யகா 

118 .மருந்துகள் , மருந்துகள் தயாரிக்கும் முறை பற்றி குறிப்பிடும் குப்தர்கால மருத்துவ நூல் எது ? நவனிதகம் 

119. குப்தர் காலத்தில் எழுதப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ நூல் எது மற்றும் அதன் ஆசிரியர் யார் ? ஹஸ்த்யாயுர் வேதா - பாலகாப்யா 

120 .குப்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? விஷ்ணு குப்தர் 

121.நிலப்பிரபுத்துவ துணைநிலை ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? சமந்தா


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: