TODAY CURRENT AFFAIRS IN TAMIL 04.09.2023:
- மத்திய அரசின் கெளரவ நிதி உதவித் திட்டம் : விவசாயிகளுக்களுக்காக மத்திய அரசின் கெளரவ நிதி உதவித் திட்டதின் கீழ் வழங்கப்பட்ட 14-ஆவது தவணைத் தொகையில் தமிழகத்தை விட கேரளா முன்னிலையில் உள்ளது. இதில் கேரளாவானது 23.40 லட்சம் பயனாளிகளையும் தமிழகமானது 20.95 லட்சம் பயனாளிகளையும் கொண்டுள்ளது.
- கும்பகோணத்தில் சுவாமி மலையில் உருவான நடராஜர் சிலையானது தில்லி பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்படத்தில் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக அமைய உள்ளது. இதன் உயரம் 28அடியாகவும், அகலம் 21 அடியாகவும், எடை 18டன்னனுடன் காணப்படுகிறது.
- நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கான திட்டமிடலுக்கும், அமல்படுத்துவதற்கும் பிரதமர் விரைவு சக்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
- எம்சிசி(MCC)யின் 94வது முருகப்பா தங்ககோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியன் இரயில்வே அணியானது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இந்திய முழுவதும் 75 பேர் தேர்வானதில் தமிழகத்திலிருந்து 4 பேர் தேர்வாகியுள்ளன.1. டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்,2. எஸ். மாலதி,3. முனைவர் எஸ்.பிருந்தா,4. எஸ். சித்திரகுமார்
No comments:
Post a Comment