TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.09.2023:
- ஹாக்கி ஃபைவ்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏஎச்எஃப் சாா்பில் ஓமனின் சலாலா நகரில் ஹாக்கி ஃபைவ்ஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வந்தது.
- இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வளமாவூரில் நாட்டில் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்காவிற்கு மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அடிக்கல் நாட்டியுள்ளார்.
- மும்பையிலுள்ள உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் புராஜக்ட் 17 ஆல்ஃபா (பி17A) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்திய கடற்படைக்காக 7வது மற்றும் கடைசி போரக்கப்பலான மகேந்திரகிரி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஹைதராபாத் நகரில் இந்தியாவின் முதல் முறையாக சூரிய தகடு கூரை இருசக்கர வாகன பாதை அமைக்கப்பட உள்ளது.
- 1919-ல் தொடங்கப்பட்ட PIB என்ற Press Information Bureau-இன் முதன்மை இயக்குநர் ஜெனரலாக மணீஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்
- AIR (All India Radio) மற்றும் NSD (News Service Division)யின் முதன்மை இயக்குநராக வசுதா குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- U-WIN என்னும் தடுப்பூசி தளமானது டிஜிட்டல் முறையில் தடுப்பூசி விவரம் நிர்வகிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
- அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணமானது அக்டோபர் மாதத்தினை இந்து பாரம்பரிய மாதம் (Hindu Heritage Month) என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
- இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளது.
No comments:
Post a Comment