பகுதி – (ஆ) – இலக்கியம்
ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES - எட்டுத்தொகை:
புறநானூறு-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும்.புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
பாடியவர்கள்: இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இந்நூலில் அதிக பாடல்களைப் பாடியவர் ஔவையார் (33 பாடல்கள்) ஆவார். அவரை அடுத்து அதிக பாடலைப் பாடியவர் கபிலர் (28 பாடல்கள்) ஆவார். இந்நூலில் இடம்பெறும் புலவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர். அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது
புறநானூறு வழி அறியலாகும் செய்திகள்:அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளைப் புறநானூறு வழி அறியலாம்.
சமூக நிலை:பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும் 30 படைக்கலக்கருவிகளையும் 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்குக் கையில் வேல் கொடுத்துப் போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி எனப் புறநானூறு விளங்குகிறது.
வரலாற்றுக் குறிப்புகள்:புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும் கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டைய போர்க் களங்களான வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், கானப்பேரெயில் போன்ற போர்க்களங்கள் குறிப்பிட்டுள்ளன.
எடுத்துக்காட்டுப் பாடல்:
- தொடியுடைய தோண்மணந்தனன்
- கடிகாவிற் பூச்சூடினன்
- தண்கமழுஞ் சாந்துநீவினன்
- செற்றோரை வழிதபுத்தனன்
- நட்டோரை யுயர்புகூறினன்
- வலியரென வழிமொழியலன்
- மெலியரென மீக்கூறலன்
- பிறரைத்தா னிரப்பறியலன்
- வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
- வருபடை எதிர் தாங்கினன்
- பெயர்படை புறங்கண்டனன்
- கடும்பரிய மாக்கடவினன்
- நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
- ஓங்குகியல களிறூர்ந்தனன்
- தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
- பாணுவப்பப் பசிதீர்த்தனன்
- மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
- செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
- இடுக வொன்றோ சுடுக வொன்றோ
- படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
- புறம்+நான்கு+நூறு = புறநானூறு
- புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல் ஆதலால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
- புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.
- திணை = புறத்திணைபாவகை = ஆசிரியப்பாபாடல்கள் = 400புலவர்கள் = 157அடி எல்லை = 4-40
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
- புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
- புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
- இப்பாடல்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச், சிற்பம், கொடை, கல்வி முதலியவற்றை விளக்குகிறது.
- பேராசிரியர் யோர்ச். எல். அகார்ட் என்பவரால் புறநானூறு The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் (1999) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- ஜி.யு.போப் (போப்பையர்) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் " Extracts from purananooru & Purapporul venbamalai" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் : ஔவையார்
- முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
- 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
- நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
- புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன
No comments:
Post a Comment