KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES-கம்பராமாயணம்
கம்பராமாயணம் , இராமனது வரலாற்றைக் கூறும் காப்பியம் ஆதலால் (இராம + அயனம்= இராமாயணம் ) இராமாயணம் எனப்பட்டது.
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -நூல்குறிப்பு :
கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்.
இந்நூலை இயற்றியவர் கம்பர்.
கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி இயற்றினார்.
கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல்.
இராமாயணம் தமிழ் இதிகாசம் இரண்டனுள் ஒன்று மற்றும் முதலாவது.
கம்பராமாணயம் ஒரு வழி நூல்
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல்
குலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர்.
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -கம்பராமாயணம் நூல் அமைப்பு:
- காண்டம் : 6
- படலம் : 118
- மொத்த பாடல்கள் : 10589
ஆறு காண்டங்கள்
1.பாலகாண்டம் 2.அயோத்தியா காண்டம் 3.ஆரண்ய காண்டம் 4.கிட்கிந்தா காண்டம் 5.சுந்தர காண்டம் 6.யுத்த காண்டம்
1. பாலகாண்டம்
பாலகாண்டம் இராமாயணத்தின் முதலாவது காண்டம் ஆகும்.
இராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுப்பது பாலகாண்டம்.
தசரதன் - கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார்.
தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர்.
தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர்.
இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர், தன்னுடைய யாகத்திற்குக் காவலாக அழைத்துச் செல்கின்றார்.
விசுவாமித்திரரின் யாகத்தினை அழிக்க வந்த தாடகை எனும் அரக்கியை இராமன் கொல்கிறார்.
தாடகையைப் போல யாகத்தினை அழிக்க வந்த அரக்கர்களையும் இராமனும், இலக்குவனும் அழிக்கின்றனர்.
மிதிலைக்கு இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர் அழைத்துச் செல்கிறார்.
வழியில், கல்லாக இருந்த அகலிகை இராமனின் கால்தூசு பட்டு உயிர்பெறுகிறாள்.
அவளை கௌதம முனிவருடன் சேர்த்துவிட்டு மிதிலைக்குச் செல்கின்றனர்.
அங்கு சீதைக்கு சுயம்வரம் நடக்கிறது.
அதில் இராமன் கலந்து கொண்டு சிவதனுசை உடைத்து, சீதையை மணக்கிறார்.
2. அயோத்தியா காண்டம்
அயோத்தியா காண்டம் இராமாயணத்தின் இரண்டாவது காண்டம் ஆகும்.
இராமன் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்தியாவிற்குச் செல்கிறார்.
உடன் இலக்குவனும், விசுவாமித்திரரும் செல்கின்றனர்.
அயோத்தியின் மன்னரான தசரதன் இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார்.
அதனை அறிந்த மக்களும், மந்திரிகளும் மகிழ்கின்றனர்.
மந்தரை எனும் கூனி பரதனின் தாயான கைகேயிடம் சென்று அவளுடைய மனதினை மாற்றுகிறாள்.
கைகேயி தசரதன் முன்பு தந்த இரண்டு வரங்களை இப்போதைய சூழ்நிலைக்குத் தக்கவாறு, இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் கேட்டுப் பெறுகிறாள்.
இராமனும், சீதையும் காட்டிற்கு செல்லுகையில், இலக்குவனும் உடன் செல்கிறான்.
மூவரும் காட்டிற்கு சென்று முனிவர்களையும், குகனையும் சந்திக்கின்றார்கள்.
குகனை தன்னுடைய மற்றொரு சகோதரன் என்று இராமன் பெருமையாக கூறுகிறார்.
தசரதன் இறந்து போனதால், இறுதிக் காரியங்களைச் செய்துவிட்டு பரதன் இராமனை காட்டில் வந்து சந்திக்கிறார்.
அயோத்திய அரசை ஏற்க இராமனிடம் வற்புறுத்துகிறார்.
ஆனால் இராமன் அதனை ஏற்க மறுக்கின்றார்.
பரதன் இராமன் மீண்டும் வந்து பொறுப்பு ஏற்கும் வரை இராமனின் பாதுகைகளை வைத்து அரசு செய்கிறான்.
3. ஆரண்ய காண்டம்
இராமன் காட்டில் விராதன், சரபங்கன், அகத்தியர், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார்.
அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்.
இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள்.
ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான்.
இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான்.
அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள்.
இராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார்.
வழியில் சடாயு சீதையை மீட்கப் போராடி வீழ்கிறார்.
சீதையை இல்லத்தில் காணாது தேடி வரும் சகோதரர்களுக்கு இராவணனைப் பற்றிக் கூறிவிட்டு உயிர்விடுகிறார் சடாயு.
4. கிட்கிந்தா காண்டம்
கிட்கிந்தா காண்டம் இராமாயணத்தின் நான்காவது காண்டம் ஆகும்.
சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள்.
அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர்.
அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார்.
சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார்.
அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார்.
இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள்.
அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர்.
வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர்.
சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார்.
இலங்கைக்குச் செல்ல ஏற்றவர் அனுமன் என்று தீர்மானித்து அனுமனிடம் தெரிவிக்கின்றனர்.
அனுமனுக்கு அவருடைய பெருமையை உணர்த்தி அவர் இலங்கை செல்ல விஸ்வரூபம் எடுக்கிறார்.
5. சுந்தர காண்டம்
சுந்தர காண்டம் இராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் ஆகும்.
கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம் சுந்தர காண்டம்.
அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்கிறது.
அனுமன் இலங்கைக்குச் செல்ல வான்வெளியில் பறந்து செல்கிறார். வழியில் எதிர்படும் தடைகளை இராம நாமம் கொண்டு வெற்றிபெற்று இலங்கையை அடைகிறார்.
அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை, அனுமார் சிறு குரங்கு வடிவில் சந்தித்து, இராமரின் கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதுஇக்காண்டத்தில்தான்.
சீதையும் அந்த மோதிரத்தினைப் பெற்றுக் கொண்டு சூளாமணி எனும் அணியைத் தருகிறாள்.
இராவணனைச் சந்தித்து அனுமன் இராமனின் பெருமைகளைக் கூறி, சீதையை இராமனிடம் சேர்த்துவிடும்படி கூறுகிறார்.
ஆனால் இராவணன் அனுமன் வாலில் தீயிடுகிறான்.
அனுமன் இலங்கையையே எரித்துவிட்டு இராமனிடம் சென்று சீதையைக் கண்டதைக் கூறுகிறார்.
6. யுத்த காண்டம்
யுத்த காண்டம் இதனை இலங்கை காண்டம் என்றும் அழைப்பர்.
இராமாயணத்தின் ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தில் இராமன் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களோடு * நிகழ்த்திய போர் நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதி.
சீதையை காப்பற்றுவதும் இக்காண்டத்தில்தான்.
இராமன் இலங்கைக்கு பாலம் அமைத்து வானரப் படையுடன் சென்று, இராவணனுடன் போர் செய்கிறான்.
அப்போது இராவணனின் சகோதரன் வீடணன் இராமனுடன் இணைந்து கொள்கிறான்.
இராமன் இராவணனுடைய தம்பியான கும்பகருணன், மகன் இந்திரசித்து என அனைவரையும் போரிட்டுக் கொல்கிறார்.
இறுதியாக இராவணனைக் கொன்று வீடணனுக்கு இலங்கையைத் தந்துவிட்டு,
சீதையை மீட்டு அயோத்திக்குச் செல்கிறார்.
அயோத்தியில் இராமருக்குப் பட்டாபிசேகம் நடைபெற்றது.
உத்தர காண்டம்:
வால்மீகி எழுதிய இராமாயணம், யுத்த காண்டத்துடன் நிறைவுகிறது.
இராமர் - சீதையின் புதல்வர்களான லவன்-குசன் ஆகியவர்களின் வரலாற்றுச் செய்திகளை உத்தர காண்டம் கூறுகிறது.
இராமாயணத்தின் ஏழாவது காண்டமாகவும் கருதப்படுகிறது.
தமிழ் மொழியில் உத்தர காண்டம் எழுதியது ஒட்டக்கூத்தர்.
இராமனின் தம்பியர் மூவர்:
1. பரதன்
2. இலக்குவன்
3. சத்ருக்கனன்
இராமனால் தம்பியராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மூவர்:
1. குகன்
2. சுக்ரீவன்
3. வீடணன்
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -ஆசிரியர் குறிப்பு:
கம்பர் பிறந்த ஊர் : தேரழுந்தூர்
கம்பரின் தந்தை : ஆதித்தன்
கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.
கம்பர் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
ஆசிரியரின் சிறப்பு பெயர்கள் :
- கவிப்பேரரசர்
- கவிக்கோமான்
- கவிச்சக்ரவர்த்தி
- கம்பநாடுடைய வள்ளல்
கம்பர் இயற்றிய நூல்கள்
- கம்பராமாயணம்,
- ஏர் எழுபது
- சிலை எழுபது
- சடகோபர் அந்தாதி
- சரஸ்வதி அந்தாதி
- திருக்கை வழக்கம் (இரண்டாம் உழவு பற்றியது).
கம்பர் மகன் அம்பிகாபதி
- அம்பிகாபதி எழுதியது அம்பிகாபதிக்கோவை
- இராம நாடகக் கீர்த்தனை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்.
புகழுரைகள்:
“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
“கம்பனைப் போல வள்ளுவனைப் போல்
இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதியார்>
மேற்கோள்:
"தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்"
"எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே"
"இல்லாரும் இல்லை உடையாரும்"
"இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்"
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்"
"இன்று போய் நாளை வா"
"வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்"
"வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்"
"உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்"
"கை வண்ணம் அங்குக் கண்டேன்"
"கால் வண்ணம் இங்குக் கண்டேன்"
"அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா"
“நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் "
“வீரமும் களத்தே போட்டு வெறும் கையேடு இலங்கை புக்கான்”
“இற்பிறப்பு என்பெதான்றும் இரும்பொற என்பதான்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்”
“கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.
“தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க”
“ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ”
“விருந்துவரின் என்னுறுமோ என்று விம்மும்”
“பேசுவது மானம் இடைப்பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்”
தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. – கம்பர்
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -குகன் வருகை:
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாய கன்போர்க் குகன்எனும் நாமத்தான்
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல்திரள் தோளினான்.
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -குகனின் தோற்றம்:
துடியன் நாயினன் தோல்செருப்பு ஆர்த்தபேர்
அடியன் அல்செறிந் தன்ன நிறத்தினான்
நெடிய தானை நெருங்கலின் நீர்முகில்
இடியி னோடுஎழுந் தாலன்ன ஈட்டினான்.
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -குகன் இராமனைக் காண வருதல்:
1. “சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன்உப காரத்தான்
இருந்த வள்ளலைக் காணவந் தெய்தினான்.”
2. “கூவா முன்னம் இளையோன் குறுகிநீ
ஆவான் யார்என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான்.”
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -குகனைக்குறித்து இராமனிடம் இலக்குவன் கூறியது:
நிற்றி ஈண்டு என்றுபுக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன் என்றான்
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -இராமன் இலக்குவனிடம் குகனை அழைத்துவரப் பணித்தும், வந்த குகன் பணிதலும்:
அண்ணலும் விரும்பி என்பால் அழைத்திநீ அவனை என்றான்
பண்ணவன் வருக என்னப் பிரிவினன் விரைவில் புக்கான்
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி
மண்ணுறப் பணிந்து மேனி வளைத்துவாய் புதைத்து நின்றான்.
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -தேனும் மீனும் விருப்பத்துடன் கொண்டு வந்தாகக் குகன் கூறுதல்:
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவ தாகத்
திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன வீரன்
விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -இராமன் குகனைப் பாராட்டல்:
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த வன்றே
பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -குகன் வேண்டுகோள்:
கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்
பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன தைய செய்குவென் அடிமை என்றான்.
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -குகன் கொண்டுவந்த படகில் மூவரும் புறப்படல்:
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும்
தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர் தமையெல்லாம் அருளுதிர் விடைஎன்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா.
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -குகன் படகைச் செலுத்துதல்:
விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுவீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார்.
KAMBARAMAYANAM TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -குகன் உடன்வருவதாக நவின்றபோது இராமன் கூற்று:
அன்னவன் உரைகளோ அமலனும் உரைநேர்வான்
என்னுயிர் அனையாய்நீ இளவல்உன் இளையான் இந்
நன்னுத லவள்நின்கேள் நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடையது. நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.
KAMBARAMAYANAM 50 KEY POINTS TNPSC EXAMS :
- முதற்படலம், ஆற்றுப்படலம் இறுதிப்படலம் விடை கொடுத்த படலம்.
- தமிழின் மிகப் பெரிய நூல் கம்பராமாயணம்.
- காப்பியத்தின் உச்சகட்ட வளர்ச்சி கம்பராமாயணம்.
- திருமாலின் அவதாரம் இராமன்.
- இராமனின் குலம் சூரிய குலம்.
- தந்தை தசரதன், தாய் கோசலை (கௌசல்யா).
- வளர்ப்புத்தாய் கைகேயி.
- நாடு கோசலம்.
- நகரம் அயோத்தி.
- ஆசிரியர் வசிட்டர்.
- கைகேயியின் தோழி கூனி.
- கூனியின் இயற்பெயர் மந்தரை.
- கைகேயியின் மனத்தை மாற்றியவள் கூனி.
- இராமன் முதன் முதலாகக் கொன்றது தாடகை என்ற பெண்ணை..
- விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்கும் பொருட்டு இராமன் தாடகையைக் கொன்றான்..
- இராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்றவர் விசுவாமித்திரர்..
- இராமன் – சீதை திருமணம் நடந்த இடம் மிதிலை.
- சீதையின் தந்தை ஜனகன்.
- சீதைக்கு ஜானகி, மைதிலி என்ற வேறுபெயர்களும் உண்டு.
- பரதன் மனைவி மாண்டலி.
- இலக்குவன் மனைவி ஊர்மிளா (ஜனகன் மகள்).
- சத்ருக்னன் மனைவி சதகீர்த்தி (ஜனகன் மகள்).
- இராவணன் மனைவி மண்டோதரி.
- கும்பகருணன் மனைவி வச்சிரசுவாலை, தீர்க்க சுவாலை.
- வீடணன் மனைவி சுரமை.
- கைகேயியின் மகன் பரதன்.
- சுமத்திரையின் மக்கள் இலக்குவன்,சத்ருக்கனன்.
- ஆதிசேடனின் அவதாரம் இலக்குவன்.
- திருமணம் முடிந்து அயோத்தி வரும் வழியில் இராமனை எதிர்த்தவர் பரசுராமர்.
- கங்கைக் கரையைக் கடக்க இராமனுக்கு உதவியவன் குகன்..
- குகனின் தலைநகரம் சிருங்கிபேரம்.
- கிஷ்கிந்தையை ஆண்டவன் வாலி.
- வாலி மனைவி தாரை.
- வாலி மகன் அங்கதன்.
- வாலி தம்பி சுக்ரீவன் * வாலியைக் கொன்றவன் இராமன்.
- சுக்ரீவன் அமைச்சன் அனுமான்.
- இராமனுக்காகச் சீதையிடம் தூது சென்றவன் அனுமான்.
- இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.
- அங்கதன் தூது வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
- இரண்யவதம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
- வீடணன் மகள் திரிசடை.
- இராவணன் மகன் இந்திரஜித்.
- இந்திரஜித்தின் இயற்பெயர் மேகநாதன்.
- இந்திரஜித்தின் அம்பால் மயங்கி விழுந்தவன் இலக்குவன்.
- இந்திரஜித்தைக் கொன்றவன் இலக்குவன்.
- 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து இந்திரஜித்தை இலக்குவன் கொன்றான்.
- தேவ – அசுரப்போர் 18 வருடம் நடந்தது.
- இராமாயணப் போர் 18 மாதம் நடந்தது.
- மகாபாரதப் போர் 18 நாள் நடந்தது.
- செங்குட்டுவனின் வடநாட்டுப் போர் 18 நாழிகை நடந்தது.
- இராமன் முடிசூட்டிக் கொண்ட போது அரியணை தாங்கியவன் அனுமான்.
- உடைவாள் ஏந்தியவன் அங்கதன்.
- வெண்கொற்றைக் குடை பிடித்தவன் பரதன்.
- கவரி வீசியவர்கள் இலக்குவன் சத்ருக்கனன்.
- முடிஎடுத்துக் கொடுத்தவர் சடையப்ப வள்ளலின் முன்னோர் முடிசூட்டியவன் வசிட்டன்.
- கம்பர் தம் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்.
No comments:
Post a Comment