Monday, November 11, 2024

PM Vishwakarma Scheme : பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் :

 

PM Vishwakarma Scheme


  • 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை வெளியிட்டார். 2023 செப்டம்பர் 17 அன்று விஸ்வகர்மா ஜெயந்தியின் போது, புது தில்லியின் துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இது தொடங்கப்பட்டது. 
  • இந்தத் திட்டம் பாரம்பரிய கைவினைத்திறனை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 2023 ஆகஸ்ட் 16 அன்று, பிரதமர் திரு மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பல்வேறு பாரம்பரிய கைவினைகளில் திறமையான நபர்களை ஊக்கப்படுத்துவதையும் இதன் மூலம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

திட்டத்தின்சிறப்பம்சங்கள்:

  • பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஐந்து ஆண்டு காலத்திற்கு ( 2023-24 முதல் 2027- 28 வரை) ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது.
  • பயோமெட்ரிக் அடிப்படையிலான பிரதமரின் விஸ்வகர்மா தளத்தைப் பயன்படுத்தி பொது சேவை மையங்கள் மூலம் விஸ்வகர்மாக்கள் இலவசமாக பதிவு செய்யப்படுகின்றன.
  • கைவினைஞர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
  • அவர்கள் 5% சலுகை வட்டி விகிதத்துடன் ரூ.1 லட்சம் (முதல் தவணை) மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாவது தவணை) வரை பிணையம் இல்லாத கடன் உதவியைப் பெறுகிறார்கள். மத்திய அரசால் 8 சதவீத வட்டி மானியம் வழங்கப்பட்டு வங்கிகளுக்கு முன்பணமாக வழங்கப்படும்.
  • அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி, கருவித்தொகுப்பு ஊக்கத்தொகை ரூ. 15,000 மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய திறன் மேம்பாட்டு முறைகளை இந்த திட்டம் மேலும் வழங்குகிறது.


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: