TODAY CURRENT AFFAIRS IN TAMIL 01.03.2024 |
6 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்:
- ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி விளையாடிய நிலையில் அதற்கு வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் மகளிருக்கான டொமஸ்டிக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. மகளிருக்கான டொமஸ்டிக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது.
- தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 28 முதல் புனேவில் சீனியர் இன்டர் ஜோனல் மல்டி-டே டிராபி என்கிற தொடரை நடத்தப்போவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இ-டிக்கெட்
- மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலமாக இ-டிக்கெட் பயணச்சீட்டு (e-Ticketing) வழங்கும் திட்டத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
- தமிழக அரசு இத்திட்டத்தினை பாரத் ஸ்டேட் பாங்குடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.
பொருளாதார வளர்ச்சி
- நடப்பு காலாண்டில் (டிசம்பர் 3வது காலாண்டு) பொருளாதார வளர்ச்சியானது 8.40%-மாக உள்ளதென தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- கடந்த காலாண்டை விட (7.60%) பொருளாதர வளர்ச்சியானது தற்போது உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விமான தளம்:
- மொரிஷியஸின் அகலேகா தீவில் புதிய விமான தளம், படகுத் துறையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
- ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கு கடலோர பகுதியில் மொரிஷியஸ் நாடு அமைந்துள்ளது. தீவு நாடான அங்கு 13 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் 70 சதவீதம்பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அந்த நாட்டு மக்கள் தொகையில் தமிழ் வம்சாவளியினர் 6 சதவீதம் பேர் உள்ளனர். மொரிஷியஸின் தற்போதைய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவிந்த் ஜுக்நாத் பதவி வகிக்கிறார்.
- உலகின் ஒட்டுமொத்த கடல் வர்த்தகத்தில் 35 சதவீத வர்த்தகம் அகலேகா தீவுப் பகுதி வழியாக நடைபெறுகிறது.
பிரதமரின் சூரிய வீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நாடு முழுவதும் ரூ.75,021 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரம்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. காரிப் பருவ விவசாயத்துக்கு ரூ.24,420 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பிரதமரின் சூரிய வீடு: இலவசமின்சாரம்’ திட்டத்தை, பிரதமர் மோடி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்த முன்வரும் 1 கோடி வீடுகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.78,000 வரை மானியம் அளிக்கப்படும். 1 கிலோவாட் திறன்உள்ள சோலார் பேனல் பொருத்துவோருக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியம் கிடைக்கும்.
நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-மார்ச் 2024
நடப்பு காலாண்டில் (டிசம்பர் 3வது காலாண்டு) பொருளாதார வளர்ச்சியானது -மாக உள்ளதென தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது ?
A) 8.40%
B) 7.50%
C) 6.50%
D) 9.40%
ANS : A) 8.40%
நடப்பு நிகழ்வுகள் 2024
- JANUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / ஜனவரி 2024
- FEBRUARY 2024 -TNPSC CURRENT AFFAIRS IN TAMIL / பிப்ரவரி2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: