Sunday, February 11, 2024

FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.02.24

 

FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 11.02.24
 CURRENT AFFAIRS IN TAMIL 11.02.24

யானை உயிரிழப்பு தடுத்தல்-AI தொழில்நுட்பம்:

  1. ரயில் பாதைகளில் ஏற்படும் யானை உயிரிழப்பினை தடுக்க AI தொழில்நுட்பத்தை தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது.
  2. இந்தியாவில் இத்தொழில் நுட்பத்தினை பயன்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  3. உலக யானைகள் தினம் – Aug 12
  4. தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 2961-ஆக உள்ளது.
  5. புலிகள் திட்டம் மற்றும் யானைகள் திட்டம் இணைக்கப்பட்டு புலிகள் மற்றும் யானைகள் திட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.
  6. “திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha)” அசாமில் செயல்படுத்தப்படுகிறது
  7. அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் கஞ்உத்சவ் (யானைகள் திருவிழா) நடைபெற்றுள்ளது.
  8. இந்தியாவின் பாரம்பரிய விலங்கு – யானை (2010)
  9. கர்நாடாகாவில் யானைகள் அதிகம் உள்ளன.
  10. அசாமில் அதிகமாக யானைகள் இரயில் அடிப்பட்டு இறக்கின்றன.

நிதிஷ் (NITISH) என்ற கருவி
  1. பீகார் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், ஐஐடி பாட்னாவும் இணைந்து விவசாயிகளுக்காக நிதிஷ் (NITISH) என்ற கருவியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  2. வரவிருக்கும் மின்னல், வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் குளிர் அலைகள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்க இக்கருவி பயன்படுகிறது.
நரேந்திர குமார் யாதவ்
  • கட்டுடல் இந்தியா இயக்கத்தின் (Fit India Movement) பிராண்ட் அம்பாசிஸ்டராக நரேந்திர குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சு மிட்டாய் தடை
  1. பஞ்சு மிட்டாயில் கலர் கூட்டுவதற்காக ரோடமைன் – பி என்ற வேதிபொருள் சேர்க்கப்படுவதால் புதுச்சேரியில் இப்பொருளுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. ரோடமின் பி(RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்தது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும்.
  3. ஊதுவத்தியின் குச்சி போன்ற பகுதியில் ரோஸ் அல்லது பச்சை நிறத்தில் சாயம் பூசப்பட்டு இருக்கும். இதை இண்டஸ்ட்ரியல் டை (Industrial Dye) என்று அழைக்கிறார்கள். இது உண்பதற்கு ஏற்றதல்ல.
  4. பஞ்சு மிட்டாய்களில் ரோஸ் கலர் வருவதற்கு ரோடாமைன் பி-ஐ பயன்படுத்துகிறார்கள். இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்துடையது.
      டேவிட் வார்னர்
      1. அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் பங்கேற்ற முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
      2. உலக அளவில் இச்சாதனை புரிந்த 3வது வீராக திகழ்கிறார்.
      3. விராட்கோலி, ராஸ்டெய்லர் இவருக்கு முன் இச்சாதனையை புரிந்துள்ளனர்

      பிப்ரவரி 11 - 2024 இல் முக்கியமான நாட்கள்:

       உலக நோயுற்றோர் தினம்

      • இது பிப்ரவரி 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசுவாசிகள் பிரார்த்தனை செய்யும் விதமாக இந்த நாள் போப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

      அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச தினம்

      1. அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கை, பயனாளிகளாக மட்டுமல்லாமல், மாற்றத்தின் முகவர்களாகவும் அங்கீகரிக்க பிப்ரவரி 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. 
      2. எனவே, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அறிவியலுக்கான முழு மற்றும் சமமான அணுகலையும் பங்கேற்பையும் அடைவதில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது. மேலும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிகாரம் ஆகியவற்றை அடைய.


      CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

      பஞ்சு மிட்டாயில் கலர் கூட்டுவதற்காக --------என்ற வேதிபொருள் சேர்க்கப்படுவதால் புதுச்சேரியில் இப்பொருளுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது ?

      A) நிக்கல், காட்மியம்
      B) பென்சிடின்  
      C) வினைல் குளோரைடு
      D) ரோடமைன் – பி 

      ANS :   D) ரோடமைன் – பி 


      நடப்பு நிகழ்வுகள் 2024 

      MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

      விருதுகள் கௌரவங்கள் 2024 :

      CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

      முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

      அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

      No comments:

      Post a Comment

      Featured Post

      CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

      காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: