Thursday, February 15, 2024

FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15.02.24

CURRENT AFFAIRS IN TAMIL 15.02.24
CURRENT AFFAIRS IN TAMIL 15.02.24


தேர்தல் பத்திரம் ரத்து-உச்ச நீதிமன்ற உத்தரவு

  • "தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரம் நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமாக உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திர முறை உள்ளது.
  • அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. 
  • எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.
  • தேர்தல் பத்திரம் நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6-க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
  • கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. 

‘நீங்க ரோடு ராஜாவா?’ - சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் :
  • போக்குவரத்து விதி மீறல், சாலை பாதுகாப்பு குறுித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ‘நீங்க ரோடு ராஜாவா?'என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மூலம் விழிப்புணர்வு வீடியோவை போக்குவரத்து போலீஸார் தயார் செய்திருந்தனர்.
  • இதில், நடிகர் சாந்தனு பாக்யராஜ், நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
க்ரோ இன்டிடைவ் திட்டம் (CROW Initiative Plan):
  • தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற CROW இன்டிடைவ் என்னும் திட்டத்தினை நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.
  • CROW  – Greening & Restoration of Wasted and into Agroforestry
வீட்டு வரி என்ற பெயரிட்டு முறையை, சொத்து வரி என்று மாற்றம்:
  • ஊராட்சிகள் சட்டத்திருத்த முன்வடிவை, அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார். இதற்கான நோக்க காரண விளக்க உரையில், ‘‘6-வது மாநில ஆணையமானது வீட்டு வரி என்ற சொல், வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்
  • மற்ற வகை கட்டிடங்களுக்கு அல்ல என்ற தவறான கருத்துப்பதிவை ஏற்படுத்துகிறது. இதை கருத்தில் கொண்டு வீட்டு வரி என்ற பெயரிட்டு முறையை, சொத்து வரி என்று மாற்றம் செய்ய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம்:
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதை பராமரிக்க உருவாக்கப்பட்ட அறக்கட்டளை சட்டத்தை நீக்குவதற்கான சட்ட முன்வடிவு  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • இதற்கான நோக்க காரண உரையில், ‘‘கடந்த 2020-ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம், சென்னை போயஸ் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியமைக்கவும், பராமரிக்கவும், அதனை மேலாண்மை செய்வதற்குமான நீண்டகால ஏற்பாடுகளாக ஓர் அறக்கட்டளையை நிறுவுவதற்காக இயற்றப்பட்டது.
  • ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், போயஸ் தோட்ட நிலம் மற்றும் கட்டிடத்தை கையகப்படுத்தி மறைந்த முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளான, மனுதாரர்களிடம் வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டவாறு, அக்கட்டிடத்தின் சாவி சட்டப்பூர்வ வாரிசுகளிடம் வழங்கப்பட்டது.
  • இதன் அடிப்படையில் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில், அச்சட்டம் காலாவதியாகிவிட்டது. எனவே, அந்த சட்டத்தை நீக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு இந்த சட்ட முன்வடிவு வகை செய்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பாரத் மார்ட்:
  • துபாய்நகரில் பாரத் மார்ட் என்ற வளாகத்திட்டத்தைத் தொடங்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இந்தத் திட்டம் 2025-ல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
  • துபாயில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த நடுத்தர மற்றும் சிறுதொழில்துறையினரின் ஏற்றுமதிக்கு உதவும் வகையில் பாரத் மார்ட் வளாகம் அமைக்கப்படுகிறது.
  • பாரத் மார்ட் வளாகம் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான சதுர மீட்டர்கள் கொண்ட பரப்பளவில் அமையவுள்ளது. இங்கு மிகப்பெரிய அளவிலான கிடங்குவசதி, சில்லறை விற்பனை வசதி, ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான வசதி, விருந்தோம்பல் வசதிகள் இருக்கும்.
 GovTech (அரசு தொழில்நுட்ப) பரிசு :
  • துபாயில் நடந்த 2024 உலக அரசு உச்சிமாநாட்டில், அரசு சேவைகளை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவை (AI) புதுமையான முறையில் பயன்படுத்தியதற்காக இந்தியா 9வது GovTech பரிசை வென்றது
  • இந்த விருது இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான அமைச்சகத்தின் மாற்றும் திட்டமான iRASTEஐ அங்கீகரிக்கிறது. எமிரேட்ஸ் அரசாங்க சேவை சிறப்புத் திட்டம் (EGSEP) வருடாந்திர GovTech பரிசு மற்றும் "M-Gov விருது" ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
அஸ்ஸாமின் அதிகாரப்பூர்வ 'மாநிலப் பழம்:
  • அஸ்ஸாமின் மாநில அரசாங்கம் காஜி நேமு Kaji Nemu (சிட்ரஸ் எலுமிச்சை), இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தனித்துவமான எலுமிச்சை வகையை அதிகாரப்பூர்வ 'மாநிலப் பழமாக' குறிப்பிடுகிறது. 
  • மாநில விவசாய அமைச்சர் அதுல் போரா இந்த முடிவை அறிவித்தார், மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் பழத்தின் கலாச்சார, பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
நுவா-ஓ உதவித்தொகை திட்டம்:
  • ஒடிசா அரசாங்கம் நுவா-ஓ உதவித்தொகையை அறிவிக்கிறது, இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஆண்டு நிதி உதவி வழங்குகிறது. 
  • ஆண் மாணவர்களுக்கு ரூ.9,000, பெண்களுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது. எஸ்சி/எஸ்டி மற்றும் நிர்மான் ஷ்ராமிக் மாணவர்களுக்கு ரூ.10,000, பெண்களுக்கு ரூ.11,000. நுதானா உன்னத அபிலாஷா (NUA)- (Nutana Unnata Abhilasha (NUA) Odisha scheme) ஒடிசா திட்டத்தின் ஒரு பகுதியான இந்த முயற்சி, இளைஞர்களை திறமையாக்குவதில் கவனம் செலுத்துகிறது, 2023-24 முதல் 2025-26 வரை 385 கோடி ரூபாய் பட்ஜெட்டை ஒதுக்குகிறது. 
  • இந்த உதவித்தொகை வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களின் குழந்தைகளைத் தவிர்த்து, மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. 
  • சுமார் 4.5 லட்சம் இளங்கலை பட்டதாரிகளும், 32,000 முதுகலை பட்டதாரிகளும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 15 - 2024 இல் முக்கியமான நாட்கள்:


பிப்ரவரி 15 - சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் (Childhood Cancer Awareness Day):
  • சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை, கவனிப்பு மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட குறும்படத்தின் பெயர் என்ன?

A) சாலை மைதானம்
B) நீங்க ரோடு ராஜாவா?
C) சாலை ராஜா
D) எங்கள் சாலை


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (13.11.2024)

முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு மத்திய அரசு அனுமதி : ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய...