CURRENT AFFAIRS IN TAMIL 12.02.24 |
ஆளுநர் உரை- சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 2024
- இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். தமிழக அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
- மத்திய அரசு கடந்த 2022, ஜூன் 30-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியயன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர்ந்திட வேண்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம், இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.
- 2022-23ஆம் ஆண்டில்,7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8:19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- அதே வேளையில்,சராசரி பணவீக்கத்தைப் பொறுத்தவரை, 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் 6.65 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் பணவீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது
- மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ளபெரும் முன்னேற்றத்தினால், 2021-22 ஆம் ஆண்டில் நான்காம் இடத்திலிருந்த நமது மாநிலம், 2022-23 ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
- நிதி ஆயோக்கின் 2022ஆம் ஆண்டு ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, 14.54 லட்சம் நபர்களுக்கு நேரடி வேவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முன் எப்போதும் இல்லாத அளவிலான, மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்வதற்கு, சாதனை படைக்கும் வகையில் நிறுவனங்களுடன் தமிழக அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்நிகழ்வில் தமிழக முதல்வர் 1டிரில்லியன் டாலர் தமிழ்நாடு பொருளாதாரம் குறித்த தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டார்
- இதுதவிர, மக்களுடன் முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்தும், இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான அரசின் சாதனைகள் குறித்து ஆளுநர் உரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- இலங்கை மற்றும் மொரிஷியஸுக்கு பயணிக்கும் இந்திய மக்களுக்கும், இந்தியாவுக்கு பயணிக்கும் மொரிஷியஸ் நாட்டினருக்கும் யுபிஐ செட்டில்மென்ட் சேவைகள் கிடைக்க இந்த நடவடிக்கை உதவும். மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், மொரிஷியஸில் ரூபே முறையின் அடிப்படையில் மொரிஷியஸ் வங்கிகள் அட்டைகளை வழங்கவும், இந்தியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் நிலவும் பணப்பரிவர்த்தனைத் தீர்வுகளுக்கு ரூபே அட்டையைப் பயன்படுத்தவும் உதவும்.
- கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
- மத்திய அரசு 2016-ம் ஆண்டு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது.
பிகார் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் நிதீஷ் குமாரின் அரசு வெற்றி பெற்றது.
- ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், கடந்த மாதம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக பதவியேற்றார்.
- இந்த நிலையில், நிதீஷ் குமாருக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் இன்று அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
- இதில், நிதீஷ் குமார் அரசுக்கு ஆதரவாக 129 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன பாதுகாப்பு விருது:
- நாட்டு மாடு இனத்தைப் பாதுகாத்ததற்காக தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டு விலங்கின மரபு வாரியம் வழங்கும் இன பாதுகாப்பு விருதை பா்கூா் ஆராய்ச்சி மையம் பெற்றுள்ளது.
- நாட்டு மாடுகளைக் காக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாக ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் பகுதியில் பா்கூா் நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க தனி மையத்தை தமிழக அரசு கடந்த 2015-இல் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
- 2012-ஆம் ஆண்டு கணக்கின்படி பா்கூா் நாட்டு மாடுகள் 14,154 இருந்த நிலையில், இந்த மையத்தின் செயல்பாட்டுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு கணக்கின்படி 42,300 பா்கூா் நாட்டு மாடுகள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த மையத்தில் 170 மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இவை இனப்பெருக்கத்திற்காகவும், பால் மற்றும் பால் பொருள்களுக்காகவும், இன பாதுகாப்புக்காகவும் வளா்க்கப்படுகின்றன
கூகுள்: ஏஐ பயிற்சிக்காக ரூ.224 கோடி ஒதுக்கீடு:
- செயற்கை நுண்ணறிவு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 27 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.224 கோடி) அளிக்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஏஐ வாய்ப்புகளை முன்னெடுக்கும் திட்டத்தின்கீழ் ஐரோப்பா முழுவதும் உள்ள பின்தங்கிய பணியாளர்களை திறன் ரீதியாக மேம்படுத்த 10 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் விடுதலை
- உளவு பார்த்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் இருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் இந்தியாவுக்கு திரும்பியதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், “ தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணியாற்றிய 8 இந்தியர்களை கத்தார் அரசு விடுதலை செய்திருப்பதை இந்தியா வரவேற்கிறது. அவர்களில் ஏழு பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். இந்தியர்களின் விடுதலையையும் அவர்களை நாட்டுக்கு அனுப்பிய முடிவையும் எடுத்ததற்கு கத்தார் மன்னரைப் பாராட்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டோஹாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.
75-ஆவது ஸ்டேரண்டஜா சா்வதேச குத்துச்சண்டை போட்டி:
- ஐரோப்பாவின் மிகவும் பழைமையான இப்போட்டி பல்கேரியாவின் தலைநகா் சோஃபியாவில் நடைபெற்று வருகிறது. ஆடவா் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் சான்ஷரை வீழ்த்தி தங்கம் வென்றாா்.
- 57 கிலோ பிரிவு இறுதியில் உலக யூத் சாம்பியன் சச்சின் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முஸபரோவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.
- மகளிா் பிரிவில் இருமுறை உலக சாம்பியன் நிஹாத் ஸரீன் 50 கிலோ, அருந்ததி சௌதரி 66 கிலோ, பாருன் சிங் 48 கிலோ, ரஜத் 67 கிலோ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமே வென்றனா்.
- 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி:
- ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடா்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கத்தாா்.
- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கத்தாரின் லுஸாயில் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கத்தாா்-ஜோா்டான் அணிகள் மோதின. இதில் கத்தாா் 3-1 என்ற கோல் கணக்கில் ஜோா்டானை வீழ்த்தி தொடா்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ 20 லீக்:
- தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ 20 லீக் ஆட்டத்தில் சன் ரைசா்ஸ் ஈஸ்டா்ன் கேப் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- ஐபிஎல் தொடா் போல், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சாா்பில் எஸ்ஏ 20 லீக் தொடா் நடத்தப்படுகிறது. கேப் டவுனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சன் ரைசா்ஸ் ஈஸ்டா்ன் கேப் அணியும், டா்பன் சூப்பா் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சன் ரைசா்ஸ் அணி 20 ஓவா்களில் 204/3 ரன்களைக் குவித்தது. ஆபேல் 55, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 56, மாா்க்ரம் 42, ஜோா்டான் 42 ரன்களை சோ்த்தனா்.டா்பன் தரப்பில் கேசவ் மகராஜ் 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
- பின்னா் ஆடிய டா்பன் சூப்பா் ஜெயண்ட்ஸ் அணி 17 ஓவா்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வியான் முல்டா் 38 ரன்களை சோ்த்தாா். சன் ரைசா்ஸ் தரப்பில் மாா்கோ ஜேன்ஸன் 5-30 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
ஐசிசி யு19 உலகக் கோப்பை:
- சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் தென்னாப்பிரிக்காவின் பெனானி நகரில் யு19 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
- இதன் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் இந்தியாவும், 2 முறை சாம்பியன் ஆஸி.யும் மோதின.
- ஐசிசி யு19 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
35-வது அனைத்து இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டி
- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், 35-வது அனைத்து இந்திய அஞ்சல் ஹாக்கி போட்டி பிப்ரவரி12-ம் தேதி (இன்று) தொடங்கிவரும் 16-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
- இப்போட்டியில், இந்தியாவில் உள்ள பல்வேறு அஞ்சல் வட்டங்களை சேர்ந்த 80 விளையாட்டு வீரர்கள் அடங்கிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
- தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே 10 லீக் ஆட்டங்கள் நடைபெறும். இறுதி போட்டி வரும் 16- ம் தேதி நடைபெறவுள்ளது
பிப்ரவரி 12 - 2024 இல் முக்கியமான நாட்கள்:
டார்வின் தினம்
- 1809 ஆம் ஆண்டு பரிணாம உயிரியலின் தந்தை சார்லஸ் டார்வின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி டார்வின் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- இந்த நாள் பரிணாம மற்றும் தாவர அறிவியலில் டார்வினின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.
- 2015 இல், டார்வினின் உயிரினங்களின் தோற்றம் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க கல்வி புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆபிரகாம் லிங்கனின் பிறந்தநாள்
- பிப்ரவரி 12 அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆபிரகாம் லிங்கனின் பிறந்தநாள், ஆபிரகாம் லிங்கன் தினம் அல்லது லிங்கன் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 12 - தேசிய உற்பத்தித்திறன் தினம்
- இந்தியாவில் உற்பத்தி கலாச்சாரத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி 12 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இது தேசிய உற்பத்தித் திறன் கவுன்சிலால் (NPC) ஒரு கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் தேசிய உற்பத்தித்திறன் தினம் பிப்ரவரி 12 அன்று இந்திய உற்பத்தித்திறன் வாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அனுசரிக்கப்படுகிறது, இது பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை அனுசரிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளைக் கொண்டாட ஒரு குறிப்பிட்ட தீம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் “செயற்கை நுண்ணறிவு (AI)- பொருளாதார வளர்ச்சிக்கான உற்பத்தித்திறன் இயந்திரம்”. இது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனை இயக்குவதில் AI இன் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "உற்பத்தி, பசுமை வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை: இந்தியாவின் G20 பிரசிடென்சியைக் கொண்டாடுதல்."
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
No comments:
Post a Comment