TODAY CURRENT AFFAIRS IN TAMIL 29.02.24 |
சிறுத்தைகளின் நிலை’ அறிக்கை
- சூழலியல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறைகளின் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
- சிறுத்தைகளின் பரவலில் மத்திய இந்தியாவில் நிலையான அல்லது குறைந்த வளர்ச்சி போக்கு காணப்படுவதாகவும் சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளி பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ‘சிறுத்தைகளின் நிலை’ என்று பெயரிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
- 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் 1.08 சதவிகிதம் வளர்ச்சி விகிதம் ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு மலைத்தொடர்களில் 1.5 சதவிகிதம் வளர்ச்சியும் , கங்கை சமவெளி மற்றும் சிவாலிக் மலைகளில் 3.4 சதவிகிதமாக வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
மாநிலங்கள் அளவில் புலிகளின் எண்ணிக்கை:
- மத்தியப் பிரதேசம் (3907) நாட்டிலேயே அதிக சிறுத்தைகள் கொண்டுள்ள மாநிலமாகவும்
- மகாராஷ்டிரா (1985),
- கர்நாடகா (1879) மற்றும்
- தமிழ்நாடு (1070) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
லீப் தினம் :
லீப் தினம் |
- நான்கு ஆண்களுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29 லீப் தினமாகக் கொண்டாடும் வகையில் தேடுபொறி தளமான கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
- அதில் பிப்ரவரி 28-க்கும் மார்ச் 1-க்கும் இடையே பிப்ரவரி 29ல் ஒரு தவளையின் படத்தை இட்டு அது தாவிவந்து அமர்ந்து சிரிப்பது போன்றும், தவளை தாவிச் செல்லும்போது பிப்ரவரி 29 மறைந்துவிடுவது போன்றும் வடிவமைத்துள்ளது.
- கிரிகோரியன் நாள்காட்டி உள்பட பல்வேறு சூரிய நாள்காட்டிகளில் பிப்ரவரி 29 அன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் தினம் அனுசரிக்கப்படுகிறது. சொசிஜீன்ஸ் தயாரித்த காலண்டரில்தான் முதன்முறையாக ஆண்டுக்கு 365 நாள்களும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடைசி மாதமாக இருந்த பிப்ரவரியில் கூடுதலாக ஒரு நாளைச் சேர்க்கும் வழக்கமும் அறிமுகமானது.
மாநிலங்களவையில் பாஜக பலம் 117 ஆக அதிகரிப்பு:
- நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் 20 வேட்பாளர்கள் உட்பட 41 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
- உத்தரபிரதேசம் (10), கர்நாடகா (4), இமாச்சல பிரதேசத்தில் (1) உள்ள 15 இடங்களுக்கு போட்டி இருந்ததால் தேர்தல் நடைபெற்றது. இதில் உ.பி.யில் 8, கர்நாடகாவில் 1, இமாச்சல பிரதேசத்தில் ஒருவர் என 10 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் 3, உ.பி.யில் சமாஜ்வாதி 2 இடங்களில் வெற்றி பெற்றது.
- இந்தத் தேர்தலின் மூலம் பாஜகவுக்கு கூடுதலாக 2 இடங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 97 ஆகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) பலம் 117 ஆகவும் அதிகரித்துள்ளது. மாநிலங்களவையில் இப்போதைக்கு மொத்தம் 240 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மை (121) பெற என்டிஏ கூட்டணிக்கு இன்னும் 4 இடங்கள் தேவைப்படுகிறது.
ஏவுதள வளாகம்:
- இந்தியாவின் இரண்டாவது ஏவுதள வளாகம் தூத்துக்குடி, குலேசகரப்பட்டினத்தில் அமைய உள்ளது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ரூ.986 கோடியில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளம் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ரோகிணி ராக்கெட் :
- தூத்துக்குடி, குலேசகரப்பட்டினம் ராக்கெட் எவுதளத்திலிருந்து ரோகிணி எனும் சிறிய ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் ஏவப்பட்டது.
கலைஞர் எழுதுகோல் விருது 2022
- சிறந்த இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருது V.N.சாமி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
- வி.என்.சாமி பத்திரிகை துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் முதிர்ந்த அனுபவம் கொண்டவர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த அவர் கடந்த 1931-ல் பிறந்தவர். 92 வயது நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியாரின் உதவியாளராக இருந்த அவர், தமிழ்நாடு, சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றி கடந்த 1989-ல் ஓய்வு பெற்றார்.
- எழுதிய நூல் – புகழ் பெற்ற கடற்போர்கள்
- TNPSC AWARDS KEY POINTS NOTES -பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
கர்ம யோகி திட்டம்:
- கர்ம யோகி திட்டத்தின் கீழ், மத்திய அரசின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு கியூசிஐ (QUALITY COUNCIL OF INDIA) மற்றும் ஐகேர் (ICARE) ஆகிய இரண்டு தரமதிப்பீட்டு நிறுவனங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
- இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அரசுபயிற்சி நிறுவனங்களை, தரமதிப்பீடு செய்யும் பணி கியூசிஐ நிறுவனத்துக்கும், தெற்கு, மேற்கு,கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள அரசு பயிற்சி நிறுவனங்களை தர மதிப்பீடு செய்யும் பணி ஐகேர் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது
- குமாஸ்தாவிலிருந்து, ஐஏஎஸ் அதிகாரி வரை அனைவருக்கும் வழங்கப்படும் பயிற்சி முறைகளின் தரம் குறித்து, இந்த இரு நிறுவனங்களும் மதிப்பீடு செய்ய உள்ளன. ஐகேர் சென்னையைச் சேர்ந்தநிறுவனம் ஆகும். உயர் கல்விநிறுவனங்களின் தரமதிப்பீட்டிற்காக மத்திய அரசு பயன்படுத்தி வரும் என்ஐஆர்எப் (NIRF) வழிமுறை இந்நிறுவனம் உருவாக்கியதாகும்.
- கர்ம யோகி திட்டம்: ‘கர்ம யோகி’ திட்டத்திற்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படவுள்ள வாய்ப்பு குறித்து, ஐகேர்நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்த்திக் தர் கூறுகையில், “இத்திட்டத்திற்கு செயல் வடிவம்கொடுப்பதற்காக பிரத்யேகமாக ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகத்தில் பல்வேறு நாடுகளில் நடப்பில் இருக்கும் சிறந்த தர நிர்ணய முறைகளைக் கருத்தில் கொண்டும், நம் நாட்டின் பிரத்யேக தேவைகளுக்கு ஏற்பவும் ஒரு பொதுவான தர நிர்ணய முறையை இந்த ஆணையம் உருவாக்கியுள்ளது.இந்தத் திட்டத்தில் எங்களுடைய முக்கியமான பணி, மத்தியஅலுவலர்களுக்கென நாடெங்கிலும் உள்ள பயிற்சி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதும் (Assessment), அங்கீகாரம் (Accreditation) வழங்குவதுமாகும். தவிர, பயிலகங்கள் தங்கள் தரத்தைத் தொடர்ந்து அதிகப்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கு வோம்” என்று தெரிவித்தார்.
காலநிலை உச்சி மாநாடு 2.0
- சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2.0-வை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
முதல் வேத கடிகாரம்
- பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ம் தேதி வேத கடிகாரத்தை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேசத்தின், நகரின் ஜந்தர் மந்தர் பகுதியில், அரசு ஜிவாஜி வான்காணகத்திற்கு அருகில் கட்டப்பட்ட 85 அடி உயர கோபுரத்தில் இந்த கடிகாரம் நிறுவப்பட்டுள்ளது.
- கடிகாரம் வேத இந்து பஞ்சாங்கம், கிரக நிலைகள், முஹுரத், ஜோதிட கணக்கீடுகள் மற்றும் கணிப்புகள் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும்.
- இது இந்திய தர நேரத்தையும் (IST) மற்றும் கிரீன்விச் சராசரி நேரத்தையும் (GMT) காட்டும். "நேரத்தைக் கணக்கிட இரண்டு தொடர்ச்சியான சூரிய உதயங்களுக்கு இடையிலான கால அளவை கடிகாரம் அளவிடும்."
- TNPSC GK KEY POINT NOTES : முதல் வேத கடிகாரம்
‘இலக்கிய மாமணி’விருது
- கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் 3 அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார். அதன்படி, மரபு தமிழ், ஆய்வு தமிழ், படைப்பு தமிழ் ஆகிய வகைப்பாட்டில் ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது வழங்கப்படுகிறது.
- அந்த வரிசையில், 2022-ம்ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரங்க. ராமலிங்கம், (மரபு), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வு), கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யகாந்தன் (எ) மா.மருதாச்சலம் (படைப்பு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக,இலக்கிய மாமணி விருதுக்கு நீலகிரிமாவட்டத்தை சேர்ந்த மணி அர்ஜுனன் (மரபு), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அர.திருவிடம் (ஆய்வு), சென்னை மாவட்டத்தை சேர்ந்த க.பூரணச்சந்திரன் (படைப்பு) ஆகியோர் தேர்வாகினர்.
- இதேபோல, 2023-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஞா.மாணிக்கவாசகன் (மரபு), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சு.சண்முகசுந்தரம் (ஆய்வு), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச.நடராசன் (படைப்பு) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
- இலக்கிய மாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு, ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
- TNPSC AWARDS KEY POINTS NOTES -பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
பிரிட்டன் அரசின் உயரிய விருது
- பார்தி ஏர்டெல் நிறுவனர், தலைவரான சுனில் பாரதிக்கு பிரிட்டன் அரசின் உயரிய விருதான Knight Commander of the Most Excellent Order விருது வழங்கப்பட்டுள்ளது.
அறிவு சார் சொத்துக் குறியீடு
- உலகளாவிய அறிவு சார் சொத்துக்குறியீட்டில் இந்தியாவிற்கு 42வது இடம் கிடைத்துள்ளது.
உத்திரகாண்ட்
- கலவரக்காரர்கள் சேதத்திற்கு பொறுப்பேற்கும் சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.
- இச்சட்டத்தினை அமல்படுத்தும் 3வது மாநிலமாக உத்திரகாண்ட் மாறியுள்ளது.
- முதலிரு மாநிலங்கள்: மத்தியப்பிரதேசம், ஹரியானா
21வது பயோ ஆசியா உச்சி மாநாடு
- 21வது பயோ ஆசியா உச்சி மாநாடானது ஹைதரபாத்தில் நடைபெற்றுள்ளது.
FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL:
பிப்ரவரி 29 - அரிதான நோய் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் அரிய நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 28 அன்று அரிய நோய் தினம் கொண்டாடப்படுகிறது.
- இருப்பினும், 2024 ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டு என்பதால், பிப்ரவரி 29 அன்று அரிய நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, இந்த நாள் வியாழக்கிழமை வருகிறது.
- அறியப்படாத அல்லது கவனிக்கப்படாத நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2008 ஆம் ஆண்டில் அரிய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பு இந்த தினத்தை நிறுவியது
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
உலகளாவிய அறிவு சார் சொத்துக்குறியீட்டில் இந்தியாவிற்கு ---------- இடம் கிடைத்துள்ளது.?
A) 32வது
B) 42வது
C) 52வது
D) 62வது
ANS : B) 42வது
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024: