CURRENT AFFAIRS IN TAMIL 24.02.24 |
‘யுமாஜின் 2024’ (Umagine TN) என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு:
- தமிழக தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘யுமாஜின் 2024’ (Umagine TN) என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- உலக நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழகத்திலும் உருவாக்குவோம் என்று சென்னையில் தொடங்கிய ‘யுமாஜின்’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
- சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல்கட்டமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை என முக்கியமான 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
ஜம்மு- காஷ்மீர் சங்கல்ப தினம்
- ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று 1994-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தினம் ஜம்மு- காஷ்மீர் சங்கல்ப தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- இதையொட்டி பிரிட்டனில் செயல்படும் ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் சார்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 21-ம் தேதி சிறப்பு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் எம்.பி.க்கள் பாப் பிளாக்மேன், தெரசா, எலியட், வீரேந்திர சர்மா மற்றும் பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் 100 பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு டிஐஜி நியமனம்:
- கோவையில் கடந்த 2022 அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன், தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- இச்சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
- இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல் துறையின் நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. டிஐஜி தலைமையில் இப்பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில், உளவு பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) டிஐஜி ஜெ.மகேஷுக்கு கூடுதல் பொறுப்புவழங்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓடிஸியஸ் ஆய்வுக்கலம்:
- அமெரிக்காவின் தனியார் விண்கலமான ஒடிஸியஸ் ஆய்வுக்கலம் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியுள்ளது.
- 1972-க்கு பிறகு (50 ஆண்டுகளுக்கு பிறகு) நிலவில் தரையிறங்கிய முதல் அமெரிக்காவின் விண்கலமாகும்.
- இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனமும், நாசாவும் இணைந்து இவ்விண்கலத்தை தரையிறக்கியுள்ளது.
தோஸ்தி-16 :
- இந்தியா, மாலத்தீவு, இலங்கை இணைந்து தோஸ்தி-16 என்னும் முத்தரப்பு பயிற்சியை மாலத்தீவில் நடத்தியுள்ளது.
- இப்பயிற்சியானது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டுள்ளது.
முக்கியமான நாட்களின் பட்டியல் பிப்ரவரி 2024:
பிப்ரவரி 24 - மத்திய கலால் தினம்
- மத்தியக் கலால் மற்றும் உப்புச் சட்டம், 1944 இயற்றப் பட்டதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தத் தினமானது கொண்டாடப் படுகின்றது.
- மத்தியக் கலால் மற்றும் சுங்க வாரியமானது (Central Board of Excise and Customs - CBEC) நாடு முழுவதும் மத்தியக் கலால் தினத்தைக்கொண்டாடியது.
- மத்தியக் கலால் மற்றும் சுங்க வாரியம் என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் ஒரு பகுதியாகும்.
- இந்த வாரியமானது சுங்கச் சட்டம், 1962, சுங்க கட்டணச் சட்டம், 1975, மத்திய கலால் சட்டம், 1944 மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகியவற்றைக் கையாள்கின்றது.
- 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax - GST) உருவாக்கப்பட்ட பிறகு, இந்த வாரியத்தின் நடவடிக்கைகள் GST தொடர்பான சட்டங்களால் வழி நடத்தப் படுகின்றன.
- முன்னதாக மத்திய கலால் மற்றும் சுங்க வாரியமானது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் என்று அழைக்கப்பட்டது.
- சுங்கம் தொடர்பான சட்டங்களை நிர்வகிப்பதற்காக சுங்க மற்றும் மத்திய கலால் / மத்திய GST துறையானது 1855 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியாவின் தலைமை ஆளுநரால் நிறுவப்பட்டது.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
2022 - 23ல், இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், காப்புரிமை பதிவுக்கு விண்ணப்பம் செய்ததில், 7,686 பதிவுடன், நாட்டிலேயே எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது ?
A) தமிழ்நாடு
B) மஹாராஷ்டிரா
C) கர்நாடகா
D) பஞ்சாப்
ANS : A) தமிழ்நாடு
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL
அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:
No comments:
Post a Comment