CURRENT AFFAIRS IN TAMIL 23.02.24 |
இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், காப்புரிமை பதிவு-தமிழகம் முதலிடத்தில் உள்ளது
தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் அதிகம் துவக்கப்படுவதால், 2022 - 23ல், இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பிடம், காப்புரிமை பதிவுக்கு விண்ணப்பம் செய்ததில், 7,686 பதிவுடன், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், 2021 - 22ல், 5,263 விண்ணப்பம் பதிவாகி இருந்தது.
தமிழகத்தில், 2021ல், 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை, தற்போது, 7,600ஆக உயர்ந்துள்ளது.
2022 - 23ல் நாடு முழுதும் காப்புரிமைக்கு, 82,811 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
- அதில், 7,686 பதிவுகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
- மஹாராஷ்டிரா, 5,626 பதிவுடன் இரண்டாவது இடத்திலும்;
- உபி., 5,564 பதிவுடன் மூன்று;
- கர்நாடகா, 5,408 பதிவுடன் நான்கு;
- பஞ்சாப், 3,405 பதிவுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
- ஆதித்யா எல்-1 சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை கண்டறிந்துள்ளது.
- விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள பாப்பா (PAPA) என்னும் கருவி பிப். 10, 11 ஆகிய தேதிகளில் எலக்ட்ரான் நிலையை கண்டறிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- சூரிய காற்றின் எலக்ட்ரான் மற்றும் அயனிகளை தொடர்ந்து ஆதித்யா எல்1 கண்காணித்து வருவதாகவும், விண்வெளி வானிலை நிலைகளை கண்காணிப்பதில் பாப்பா கருவி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல் 1' என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 2023 இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்தும், சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள, 'எல் 1' எனப்படும், லெக்ராஞ்சியன் புள்ளியில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
- தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில், 2022ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளையும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்; 38 மாவட்டங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளையும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
- 2022ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை, 15 பேருக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 பேருக்கும், தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 பேருக்கும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
- 1-12 வரை பள்ளி மாணக்கர்கள் பாடங்களை காணொளி வாயிலாக கற்க தமிழக அரசு மணற்கேணி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
- இதற்கான இணையதள முகவரி; https://manarkeni.tnschools.gov.in.
- KEY POINTS : MANARKENI WEB
- அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்படும் விருதான ஜிடி பிர்லா 2023 இயற்பியல் பேராசிரியர் அதிதி சென் என்பவர்க்குவழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதினை பெறும் முதல் பெண் ஆவார்.
- இந்தியா 2023ஆம் ஆண்டிற்கான சைபர் குற்றங்கள் அறிக்கை பட்டியிலில் 80வது இடத்தினை பிடித்துள்ளது.
- மத்திய பிரதேசமானது பை இல்லாத பள்ளிகள் (Bag Less School) கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.
- இக்கொள்கையின்படி பள்ளிகளுக்கு குழந்தைகள் ஒருநாள் மட்டும் புத்தகம் கொண்டு செல்ல வேண்டாம்.
முக்கியமான நாட்களின் பட்டியல் பிப்ரவரி 2024:
பிப்ரவரி 23 - உலக அமைதி மற்றும் புரிதல் நாள்
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 23 அன்று, உலக புரிதல் மற்றும் அமைதி தினம் கொண்டாடப்படுகிறது.
- இது 115 ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டரி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நிறுவப் பட்டதை நினைவு கூர்கின்றது.
- 1905 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று பால் ஹாரிஸ், குஸ்டாவஸ் லோஹர், சில்வெஸ்டர் ஷைல் மற்றும் ஹிராம் ஷோரே ஆகியோர் சிகாகோவில் கூடியிருந்த முதல் ரோட்டரி சந்திப்பு இதுவாகும்.
- இந்த ஆண்டுவிழா "உலக அமைதி மற்றும் புரிதல் தினம்" என்று அழைக்கப் படுகின்றது.
- ரோட்டரி இன்டர்நேஷனல் என்ற பெயரானது 1922 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- போலியோவை முடிவுக்கு கொண்டு வந்தது என்பது ரோட்டரி இன்டர்நேஷனலின் மிகவும் புகழ்பெற்ற ஒரு மனிதாபிமான முயற்சியாகும்.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL