FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.02.24

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL 22.02.24
CURRENT AFFAIRS IN TAMIL 22.02.24


மூத்த குடிமக்கள் பராமரிப்பில் சீரமைப்பு-நீதி ஆயோக் அறிக்கை

  • நீதி ஆயோக் "மூத்த குடிமக்கள் பராமரிப்பில் சீரமைப்பு' என்ற தலைப்பில் அளித்துள்ள ஆய்வு அறிக்கையில்,
  • இந்தியாவின் மக்கள் தொகையில் 2050 ஆம் ஆண்டில் 19.5 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் சேமிப்புக்கு கூடுதல் வட்டி, குடியிருப்பு திட்டம், கட்டாய சேமிப்பு திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு தொலைநோக்கு ஆலோசனை வழங்கும் நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. 
  • முதியோர் மருத்துவ பராமரிப்பு வர்த்தகம் ரூ.57,881 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய 140 கோடி மக்கள் தொகையில் 10 சதவீதம் மூத்த குடிமக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2050}இல் 19.5 சதவீதமாக அதிகரிக்கும்' என்று நீதி ஆயோக் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி:
  • மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சிஇ20 கிரையோஜெனிக் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
  • ககன்யான் திட்டத்தின் மூலம் தரையில் இருந்து 400 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. 
  • இத்திட்டத்தை 2025-ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக பல்வேறு கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனையானது ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்தது. 
  • அதன் இறுதிக்கட்ட பரிசோதனை திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை-சிவ் நாடார் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை-சிவ் நாடார் பவுண்டேஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
  • பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது. காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம்.
  • தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்குச் செல்லவேண்டும் என்கிற நோக்கத்துடனும், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்வதை எளிதாக்கி சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சரிசெய்து சமூக நீதியை நிலைநாட்டவேண்டும் என்கிற இலக்குடனும் தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டில் மணற்கேணி செயலியை அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை -Tamilnadu State Women's Policy
  • தமிழகத்தில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசியலில் பெண்களின் நிலையை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட்டுள்ளார்.
  • இக்கொள்கையானது தொலைநோக்கு பார்வையுடன், சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணைய மசோதா:
  • தமிழகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க தமிழக சட்டப்பேரவையில் மசோதாவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு மற்றும் மேலாண்மை பற்றி ஆலோசனைகளை வழங்க உருவாக்கப்பட உள்ளது.
  • இவ்வாணையத்தில் ஒரு தலைவர், 3 பகுதி நேர உறுப்பினர்கள், 3 முழு நேர உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளன.
  • இவர்கள் 62 வயது வரை பணிபுரியலாம்.
செவாலியர் விருது :
  • காங்கிரஸ் எம்பியும், எழுத்தாளருமான சசி தரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பிரான்ஸ் செனட் தலைவர் லார்ச்சர் இந்த விருதை சசி தரூருக்கு வழங்கினார்.
  • கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியின் எம்பியாக இருக்கும் சசி தரூர் அரசியலுக்கு வரும் முன் வெளியுறவு துறை சார்ந்த முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஐநா சபையின் உயர் பொறுப்புகளில் இருந்துள்ள சசி தரூர் ஒரு எழுத்தாளரும் ஆவார்.
முதல் மின்சார ரயில் சேவை:
  • ஜம்மு காஷ்மீரின் முதலாவது மின்சார ரயில் சேவையானது ஸ்ரீநகர் மற்றும் சங்கல்தான் இடையே துவங்கப்பட்டுள்ளது.
  • இது மொத்தம் 272 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. இதில் 161 கிலோமீட்டர் வழித்தடம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. 16 பாலங்கள், 11 சுரங்கங்களை உள்ளடக்கிய 48.1 கிலோமீட்டர் நீளமுள்ள உதம்பூர் - ஸ்ரீநகர் - பராமுல்லாவை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ரைசினா உரையாடல்
  • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் இணைந்து புவிசார் அரசியல் மற்றும் புவி பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடல் புதுதில்லியில் நடைபெறுகிறது.
  • இம் மாநாட்டில் கீரிஸ் நாட்டின் பிரதமரான கிடிரியகோஸ் மட்சோடாகிஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்க பாதை திறப்பு:
  • ஜம்மு - காஷ்மீரின், பனிஹால் - -காரி- - சம்பர்- - சங்கல்தான் வழித்தடத்தில், 48.1 கி.மீ., துாரத்துக்கான புதிய ரயில் பாதையை பிரதமர் மோடி  துவக்கி வைத்தார். 
  • இதில், காரி - சம்பர் இடையே, 12.77 கி.மீ., தொலைவுக்கான நாட்டின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை அமைந்துள்ளது. 'டி - 50' என்றழைக்கப்படும் இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி, 2010ல் துவக்கப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு பின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 
  • ரயில் பயணியரின் பாதுகாப்புக்காக சுரங்க ரயில் பாதையின் அருகிலேயே ஆபத்து காலத்துக்கான மற்றொரு சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் பாதையின் ஒவ்வொரு 375 மீட்டர் தொலைவிலும், பயணியர் வெளியேறுவதற்கான இணைப்பு வழி அமைக்கப்பட்டுஉள்ளது.
சூரிய சக்தி மின் திறன்; தமிழகம் 4வது இடம்:
  • கடந்த ஜனவரி நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையம் நிறுவுதிறனில் 
  • ராஜஸ்தான், 18,795 மெகாவாட்டுடன் முதலிடத்தில் உள்ளது. 
  • 10,548 மெகாவாட்டுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும்; 
  • கர்நாடகா, 9,463 மெகாவாட்டுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 
  • தமிழகம், 7,426 மெகாவாட் திறனுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் ஜிபிடி (BharatGPT):
  • கூகுள் நிறுவனம் ஜெமினி என்ற பெயரிலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்ங் ஏஐ என்ற பெயரிலும் அறிமுகம் செய்தது. 
  • அந்த வரிசையில் தற்போது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் ஜிபிடி (BharatGPT) என்னும் பெயரில் இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது. 
  • இதற்காக ஐஐடி பாம்பே உடன் கைக்கோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இதற்காக 'ஹனூமான்' என்ற மாடலை புகுத்தியுள்ளது. 11 இந்திய மொழிகள் அடங்கிய ஹனூமான் மாடலை மார்ச் மாதத்தில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியா - கிரீஸ் ஒப்பந்தம்:
  • ராணுவ ஆயுத வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம், இந்தியா - கிரீஸ் பிரதமர்கள் இடையேயான சந்திப்பின் போது கையெழுத்தானது. 
  • ஐரோப்பிய நாடான கிரீசின் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடில்லிக்கு 21.02.2024 வந்த அவருக்கு, ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார்.

முக்கியமான நாட்களின் பட்டியல் பிப்ரவரி  2024:


பிப்ரவரி 22 - உலக சிந்தனை தினம்

  • 1926-ம் ஆண்டு முதல் பெண்கள் சாரணர் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பவுல் மற்றும் லேடி பேடன் பவுல் ஆகிய இருவரின் பிறந்த தினமான பிப்ரவரி மாதம் 22-ந் தேதி ‘உலக சிந்தனை தின மாக’ அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சிந்தனைத் திறனை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சிஇ20 கிரையோஜெனிக் என்ஜின் சோதனையை எங்கே வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  ?

A)  மகேந்திரகிரி ,திருநெல்வேலி மாவட்டம்
B) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம்
C) சதீஷ் தவான் விண்வெளி மையம் ,ஸ்ரீஹரிகோட்டா 
D) டாக்டர் அப்துல் கலாம் தீவு, ஒடிசா

ANS :  A)  மகேந்திரகிரி ,திருநெல்வேலி மாவட்டம்

நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!