FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 20.02.24

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL 20.02.24
CURRENT AFFAIRS IN TAMIL 20.02.24


தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்:

  • சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை 20.02.24 தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 
  •  மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 42,282 கோடி
  • KEY POINTS: வேளாண்  பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் 2024-25

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு 

  • மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 
  • மகாராஷ்டிராவில் விவசாயிகள், கொல்லர், தச்சர் உள்ளிட்ட 96 சாதிகளைச் சேர்ந்தவர்கள் மராத்தா சமூகத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இம்மாநிலத்தில் 28% உள்ளனர். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தாங்கள் பின்தங்கி இருப்பாகவும், எனவே, தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி அவர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். 
  • மராத்தா சமூகத்தின் நிலை குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி சுனில் சுக்ரி தலைமையிலான மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த வெள்ளிக்கிழமை தனது அறிக்கையை அரசுக்கு வழங்கியது. 
  • மகாராஷ்டிர மாநில சமூக பொருளாதார பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சட்டம் 2018 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தற்போது, மராத்தா சமூகத்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை 20.02.24 ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்:
  • ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
  • ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 32,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். மேலும், ஜம்மு காஷ்மீரில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்கினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
தமிழக அரசு சார்பில் ரூ.17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம்:

  • ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை உருவாக்கும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 
  • மூன்றடுக்கு கொண்ட இந்த அகாடமியின் தரைதளத்தில் பன்நோக்கு விளையாட்டுத் தளம், முதல் தளத்தில் டேக் வாண்டோ மற்றும் ஜூடோ விளையாட்டுத் தளம், இரண்டாவது தளத்தில் வாள்வீச்சு தளம் மற்றும் மூன்றாவது தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இவற்றை  சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயதிநி ஸ்டாலின் திறந்துவைத்தார்.


முக்கியமான நாட்களின் பட்டியல் பிப்ரவரி  2024:


பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 27 வரை - தாஜ் மஹோத்சவ்

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 அன்று, ஆக்ராவில் தாஜ் மஹோத்சவ் அல்லது தாஜ் திருவிழா கொண்டாடப்படுகிறது, இது நம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. 
  • 2024 ஆம் ஆண்டு இந்த திருவிழா பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கி 27 பிப்ரவரி 2024 வரை நீடிக்கும். 

பிப்ரவரி 20 - அருணாச்சல பிரதேசம் நிறுவப்பட்ட நாள்

  • இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசாங்கம், வட-கிழக்கு எல்லை ஏஜென்சி, பிபாபாசு தாஸ் சாஸ்திரி, தயா கிருஷ்ண கோஸ்வாமி மற்றும் ஓ.பி. உபாத்யா ஆகியோரால் 20 ஜனவரி 1972 இல் அருணாச்சல பிரதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அது யூனியன் பிரதேசமாக மாறியது . 
  • பின்னர் மத்திய அரசில் ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது 1987 பிப்ரவரி 20 அன்று அருணாச்சல பிரதேசம் மாநிலமாக மாறியது. 

பிப்ரவரி 20 - மிசோரம் நிறுவன தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 அன்று, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மிசோரம் அதன் நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது. 
  • இது 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அதிகாரப்பூர்வ 23 வது மாநிலமாக மாறிய நாளைக் குறிக்கிறது.

பிப்ரவரி 20 - உலக சமூக நீதி தினம்

  • ஒரு நாட்டின் மக்களுக்கிடையேயும் உலகில் நாடுகளுக்கிடையேயும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்திட பிப்ரவரி 20-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக சமூக நீதி தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறன்றது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த தினத்தை 2007-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26-ஆம் தேதி அங்கீகரித்தது. 2009-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் சமூக நீதி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • சமூக நீதியானது எவ்வாறு வறுமையை ஒழிப்பதிலும் வேலைவாய்ப்பை உயர்த்துவதிலும் சமூக ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதிலும் செயலாற்றுகின்றது என்பதை மக்களிடையே ஊக்கப்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
  • கருப்பொருள்: Bridging Gaps Building Alliances
பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024


தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் மொத்த நிதி ஒதுக்கீடு ?

A)  ரூ. 42,282 கோடி
B) ரூ. 52,282 கோடி
C) ரூ. 32,282 கோடி
D) ரூ. 22,282 கோடி

ANS :  A)  ரூ. 42,282 கோடி


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024

அரசு அறிமுகப்படுத்தி முக்கிய செயலிகள் 2023:2024:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!