பகுதி – (இ)
தமிழில் கடித இலக்கியம் –நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்
ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு
பிறப்பு : 1709 – சென்னை பெரம்பூர்
தந்தை : திருவேங்கடம்
மைத்துனர் : நைனியப்பர்
ஆசிரியர் : எம்பார்
பெப்பிசு
- உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி = சாமுவேல் பெப்பிசு
- இந்தியாவின் பெப்பிசு = ஆனந்தரங்கர்
- நாட்குறிப்பு வேந்தர் = ஆனந்தரங்கர்
ஆனந்தரங்கர் சிறப்பு பெயர்கள்
- இந்தியாவின் பெப்பிசு
- இந்தியாவின் சாமுவேல் பெப்பீசு
- டைரி வரலாற்றின் தந்தை
- நாட்குறிப்பு வேந்தர்
பணி :
புதுவையில் அரசுப் பணியில் உதவியாளராக இருந்தார்.
பிறகு திவானாகப் பதவி உயர்வு பெற்றார்.
துய்ப்ளெச்சு என்னும் ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளர் (துபாசி) இறந்ததனால் பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கம் அப்பணிக்கு நியமிக்கப்பட்டார்.
தன்னுடைய 17 வயதில் தந்தையை இழந்த ஆனந்தரங்கர், பிரெஞ்ச் உயர் அதிகாரி “அலனுவார்” என்பவரின் உதவியால் பரங்கிப்பேட்டை நெசவுச்சாலைக்கும், சாயம் தேய்க்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நாட்குறிப்பு
1736 – 1761 வரை சுமார் 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
தம் நாட்குறிப்புக்கு ‘தினப்படி செய்தி குறிப்பு’ ‘சொஸ்தலிகிதம்’ (சொஸ்த – தெளிவான லிகிதம் – கடிதம்) தமிழ்ப்பற்றாளர் ஆதலால் நாட்குறிப்பைத் தமிழிலேயே எழுதியுள்ளார்.
நாட்குறிப்பில் இடம் பெற்ற செய்திகள்
ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளின் பெரும்பகுதி வணிகச்செய்திகளையே கூறுகின்றன.
நாணய அச்சடிப்பு உரிமை
- 09.1736 ஆம் நாள் குறிப்பு = பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையைப் பெற்றதை விளக்குகிறது. இந்த உரிமையைப் பெறுவதற்காக ஆளுநர் செலவழித்த பெருந்தொகையையும் ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிகக் கழகம் பெற்றது.
- இதற்கான ஆணையை 10.09.1736 அன்று கனகராயர் பல்லக்கில் வைத்து ஊருக்குள் கொண்டு வந்தார்.
- 21 பீரங்கிகள் முழங்கின.
சென்னையை கைப்பற்றல்
- ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை கைப்பற்றிய பிரெஞ்ச் தளபதி = 1746 இல் பிரெஞ்ச் கப்பல் தளபதி லெபூர்தொனே கைப்பற்றினார்
- பிரெஞ்ச் அரசை எதிர்த்து ஆற்காடு நவாப் அன்வர்தீன்கானின் மூத்த மகன் மகபூஸ்கான் போரிட்டார்.
வரலாற்று ஆசிரியர்
- ஆனந்தரங்கர் ஒரு வரலாற்று ஆசிரியர் போல பல்வேறு அரசியல் நிகழ்வுகளை தமது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவையாவன,
- தேவனாம்பட்டணத்தை கைப்பற்ற ஆங்கிலேயருடன் பிரெஞ்ச் அரசு நடத்திய போர்
- ஆம்பூர் போர்கள்
- தஞ்சைக் கோட்டை மீதான முற்றுகை
- இராபர்ட் கிளைவ் படையெடுப்பு
- ஆங்கிலேயர் புதுச்சேரியை முற்றுகையிடல்
- 1758 இல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டார் = பிரெஞ்ச் அதிகாரி லல்லி
- கோட்டையை இடித்தும் வீடுகளை தரைமட்டமாக்கியும் கூட லல்லியால் சென்னையை கைப்பற்ற முடியவில்லை.
- சென்னை கோட்டையின் ஆளுநர் “மேஸ்தர் பிகட்” வெற்றி பெற்ற செய்திகளை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- 06.1739ஆம் நாள் குறிப்பு = புதுச்சேரியின் ஆளுநர் ‘துய்மா’ பிறப்பித்த ஆணையில், புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்குத் தெற்காகப் போகிற உப்பங்கழிப் பகுதியிலும் பட்டணத்தின் வீதிகள் எவ்விடத்திலும் காலைக்கடன் கழிப்பவர்களுக்கு ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- மீறியவர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டத்தொகையில் இரண்டு பணம் பிடித்துக் கொடுப்பவருக்கும், மீதி நான்கு பணம் சாவடிக்கும் உரியது என்று அறிவிக்கப்பட்டது.
- இது தெரியாமல் பலரும் தண்டம் கட்டியதாக’ ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தண்டனை விவரங்கள்
- நீதி வழங்குதல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளையும் இவருடைய நாட்குறிப்பு, பதிவு செய்துள்ளது.
- தொடர்ந்து வீடுகளில் திருடி வரும் கும்பல் ஒன்று பிடிபட்டபோது, அவர்களுள் தலைமைத் திருடனைக் கடைத்தெருவில் தூக்கில் தொங்கவிட்டனர்.
- ஏனைய இருவருக்கும் இரண்டு காதுகளை அறுத்து, ஐம்பது கசையடிகளும் தரப்பட்டன.
- ஆனந்தரங்கர் நாட்குறிப் பின் பெரும்பகுதி வணிகச் செய்திகளையே விவரித்துள்ளது.
- ஆனந்தரங்கரும் பிறரும் வணிகத்திற்கு முதன்மை அளித்துள்ளதை உணரமுடியும்.
- புதுச்சேரியில் இருந்து மணிலாவுக்குச் சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதையும் அவர் பதிவு செய்துள்ளார்.
- ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைய, கப்பல்களுக்கு ஆறு திங்கள் தேவைப்பட்டன.
- 11.1737 அன்று பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் 08.05.1738 அன்று புதுச்சேரியை அடைந்துள்ளது. கப்பல் வந்தவுடன் பீரங்கி முழங்குதல் வழக்கத்தில் இருந்துள்ளது.
- துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
- 100க்கு 320 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்குப் பணத்தைச் செலுத்திவிடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.
- வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றைப் பெற்றுப் பாதுகாத்துள்ளார்.
- எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணையின் பேரில் 1730ஆம் ஆண்டு மே திங்களில் அறிவிக்கப்பட்டது.
- பல்வேறு விதமான வராகன்களை ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுச்சேரிப் பிறை வராகன்
- சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன்
- வட்ட வராகன்
- பரங்கிப் பேட்டை வராகன்
- ஆரணி வராகன்
- 1745 ஆம் ஆண்டு 21 ஆம் நாள் = வியாழக்கிழமை, புதுச்சேரியை பெரும் புயல் தாக்கியது
- பேரிடரால் உணவுக்கு தவித்த மக்களுக்கு, அப்போது ஒழுகரையிலே கனகராயர், பெருஞ்சோறு அளித்துத் தமிழரின் இரக்கத்தையும் ஈரத்தையும் வெளிப்படுத்தியதை ஆனந்தரங்கர் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளார்.
- இங்கிலாந்திற்கும், பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கப்பல் வணிகம் பெரிதும் தடைபட்டது.
- புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை 1745ஆம் ஆண்டில் தடைபட்டுப் பெரும் பொருளாதாரத் தட்டுப்பாடு தோன்றியது.
- புதுச்சேரி வணிகம் முழுவதும் வீழ்ந்தது.
- 06.1746ஆம் நாள் லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் புதுவைக்கு வந்தன.
- கப்பல் வருகையை அறிந்த மக்களின் உள்ள மகிழ்ச்சியை காகிதத்தில் எழுத இயலாது என தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தரங்கம் பிள்ளை பெற்ற பெருமைகள்
- 1749 – இல் முசபர்சங் என்பவர் ஆனந்தரங்கத்துக்கு 3000 குதிரைகளை வழங்கி ‘மன்சுபேதார்’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.
- உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி ‘பெப்பிஸ்’ என்பார்.
- இந்தியாவில் பெப்பிஸ் எனப் போற்றப்படுவர் ஆனந்தரங்கம் பிள்ளை ஆவார்.
- இவரை “நாட்குறிப்பு வேந்தர்” எனவும் போற்றுகின்றனர்.
- செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாகவும் அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர்தாராகவும் நியமனம் பெற்றார்.
- துய்ப்ளே ஆட்சியில் ஆனந்தரங்கர் பல்லக்கில் செல்லும் உரிமைஅவர் வரும் போது மங்கல ஒலிகள் ஒலிக்கும் உரிமை ஆளுநர் மாளிகைக்குள் செருப்பணிந்து செல்லும் உரிமை போன்ற பல தனிப்பட்ட உரிமைகளைப் பெற்றிருந்தார்.
- அருணாச்சல கவிராயர் தம் ராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றி மீண்டும் ஒருமுறை இவர்முன் அரங்கேற்றினார்.
- இவரின் நாட்குறிப்புகள் அவர் வீட்டில் இருப்பதை ‘கலுவாமொம்பிரேன்’ என்பவர் கண்டறிந்தார்.
- நாட்குறிப்பின் சில பகுதிகளை ‘குலியன் வென்சோன்’ பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார்.
ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்துள்ள நூல்கள்
- ஆனந்தரங்கக்கோவை – தியாகராச தேசிகர்
- ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் – அரிமதி தென்னகன்
- ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்
- கள்வன் நொண்டிச்சிந்து
- ஆனந்தரங்கர் புதினங்கள்
- ஆனந்தரங்க விஜயசம்பு – சீனிவாசக்கவி (வடமொழி)
- ஆனந்தரங்க ராட்சந்தமு – கஸ்தூரிரங்கக்கவி (தெலுங்கு)
No comments:
Post a Comment