TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.01.24

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 14.01.24

தமிழக அரசு விருதுகள்: 2024:

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய 7 தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருது2024  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


இண்டியா கூட்டணியின் தலைவராக தேர்வு :

டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்றனர். சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இண்டியா கூட்டணியின் தலைவராக, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தைவான் அதிபர் தேர்தல் 2024:

தைவான் அதிபர் தேர்தல் 13.01.24 நடைபெற்றது. இதில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் லாய் சிங் டி, பிரதான எதிர்க் கட்சியான குவோமின்டாங் சார்பில் ஹவ் யூ, தைவான் மக்கள் கட்சி சார்பில் கோ வென் ஜி ஆகியோர் போட்டியிட்டனர்.

அந்த நாட்டின் 2.5 கோடி மக்கள் தொகையில் 1.9 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி அமெரிக்க ஆதரவு கட்சியாகும். குவோமின்டாங் கட்சி சீன ஆதரவு கட்சியாகும்.

இதில் அமெரிக்க ஆதரவு கட்சியான ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி  இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கையில் அவர் 53.74 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

மகாதேவ் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு:

மகாதேவ் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் கூடுதலாக நிதின் திப்ரிவால் மற்றும் அமித் அகர்வால் ஆகிய இருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இவ்விருவரும் ராய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மகாதேவ் செயலி மூலமாக பெறப்பட்ட பணத்தைக் கொண்டு நிதின் திப்ரிவாலும், அமித் அகர்வாலும் சில சொத்துகள் வாங்கியுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இவ்விருவரையும் வரும் 17/01//24-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்செயலியின் நிறுவனர்களான சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பாலை துபாய் காவல் துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது. அவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் இறங்கி இருக்கும் அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்பு, இவ்வழக்குத் தொடர்பாக இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் இருவர் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர்.


இந்தியாவின் விஜய்வீர் சித்து-பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி :

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் நடைபெற்ற ஆடவருக்கான 25 மீட்டர் ரேப்பிடு ஃபையர் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் விஜய்வீர் சித்து 28 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

மனித வனவிலங்கு மோதல் இழப்பீட்டுத் தொகை அரசாணை வெளியிட்டது-தமிழ்நாடு அரசு 

மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித -வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி (Corpus Fund) ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முறையீடுகளை பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்காக, மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பதை ரூபாய் 10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம்:

இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம்’ என்ற தலைப்பில் தில்லியில்  நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்றாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நமது ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் அந்த நாடுகளுக்குப் பயணிப்போது அந்த நாட்டுப் பணம் அல்லது அமெரிக்கா டாலரைப் பயன்படுத்தாமல், இந்திய ரூபாயை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றாா்.


14 ஜனவரி முக்கியமான நாட்களின் பட்டியல் 2024


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023


TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL

TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023

TNPSC CURRENT AFFAIRS FEBRUARY 2023

TNPSC CURRENT AFFAIRS MARCH 2023

TNPSC CURRENT AFFAIRS APRIL 2023

TNPSC CURRENT AFFAIRS MAY 2023

TNPSC CURRENT AFFAIRS JUNE 2023

TNPSC CURRENT AFFAIRS JULY 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023

TNPSC CURRENT AFFAIRS SEPTEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS OCTOBER 2023

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2023

TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023



MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

விருதுகள் கௌரவங்கள் 2023 :

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2023:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!