SITRU ILAKKIYAMGAL -TNPSC TAMIL ILLAKKIYAM NOTES:
பகுதி – (ஆ) – இலக்கியம்
சிற்றிலக்கியங்கள்:
இராசராச சோழன் உலா
உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடுதலின் இப்பெயர் பெற்றது.
உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள்.
தலைவன் வீதியில் உலாவர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.
உலா கலிவெண்பாவால் இயற்றப்படும்.
இவ்விலக்கியம் உலாப்புறம் எனவும் வழங்கப்படும்.
உலாவின் முன்னிலை
பாட்டுடைத்தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடை சூழத் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
உலாவின் பின்னிலை
உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாகக் கூறுவன உலாவின் பின்னிலை என்று கூறுவர்.
உலாவில் பெண்களின் ஏழு பருவங்கள்
ஏழு பருவப் பெண்களின் வயது முறையைப் பின் வருமாறு கூறுவர். பேதை 5 – 7, பெதும்பை 8 – 11, மங்கை 12 – 13, மடந்தை 14 – 19, அரிவை 20 -25, தெரிவை 26 – 32, பேரிளம் பெண் 33-40.
சிற்றிலக்கியங்கள்
- குறவஞ்சி
- பரணி
- தூது
- கலம்பகம்
- உலா
- பள்ளு
- காவடிச்சிந்து
- அந்தாதி
- பிள்ளைதமிழ்
ஒட்டக்கூத்தர் ஆசிரியர் குறிப்பு
- இராசராச சோழனுலாவைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.
- கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுகிறார்.
- ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
- அம்மூவரைப் பற்றியும் அவர் பாடிய மூன்று உலாக்களும் மூவருலா எனப்படுகிறது.
- தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலியன இவர் இயற்றிய வேறு நூல்கள் ஆகும்.
- கூத்தர் என்பதே இவர் இயற்பெயர்.
- ஒட்டம் (பந்தயம்) வைத்துப்பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்கூத்தர் எனப்பட்டார்.
- இவரது காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஆகும்.
நூற்குறிப்பு
- மூவர் உலாவில் இடம் பெற்றுள்ள ஒரு நூல்
- விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் என்ற மூவர் மீதும் பாடப்பட் உலா நூல் மூவர் உலா
- இவர் முன்னோர் மதுரை மன்னரிடம் பலபட்டடை கணக்குத் தொழில் புரிந்தனர்.
- இரண்டாம் ராஜராஜன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட இந்த 391 கண்ணிகள் உள்ளன.
- “புயல்” என்ற மங்கலச் சொல்லால் இந்நூல் தொடங்குகிறது.
- உலா, கலிவெண்பாவால் பாடப்படும் இலக்கியம்
- ஒட்டக்கூத்தர் – கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சகன்
நூற் செய்திகள்
- சோழமன்னர்களின் வழிமுறை, செய்த போர்கள் அடைந்த வெற்றி, அளித்த கொடை பற்றிக் கூறுகிறது.
- இராஜராஜன் கருநிறத்தவன், அவன் பட்டத்து அரசி புவனமுழுதுடையாள்
- இராஜராஜனுக்கு வரராசன், கண்டன், சனநான் என்ற பட்டப் பெயர்களும் விளங்கின.
- அரசன் பெரும்பாலும் பாசறையிலேயே இருந்தால் “அயிற்படை வீரன்” எனச் சிறப்பிக்கப்படுகிறான்.
- பார் மடந்தை கைகளிலும், போர் மடந்தை தோளிலும், திருமடந்தை விழிகளிலும், கலை மடந்தை அவன் செவிகளிலம் வாழ்வதாகப் பாடியுள்ளார்.
- திருவெம்பாவை, கச்சிக் கற்றளி குறித்த குறிப்புகளும் உள்ளன.
- கொப்பத்துப்பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, கலிங்கத்துப்பரணி ஆகிய மூன்று நூல்களை குறிப்பிடுகிறது.
- இதன் ஒவ்வொரு கண்ணிக்கும் அரசன் ஆயிரம் பொற்காசுகளைத் தந்து பாராட்டினான்.
No comments:
Post a Comment