மக்களுடன் முதல்வர்” திட்டம்
அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 18-12-2023 கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்
“மக்களுடன் முதல்வர்“’ என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக வரும் 18-12-2023 ஆம் தேதி முதல் 06-01-2024 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக, ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து 31-1-2024 வரை “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும். இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.
மக்களுடன் முதல்வர்” திட்டம் G .O அரசாணை(நிலை) எண்.760
1.பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் கீழ் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி "அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு துறையின் பொறுப்பாகும்" என கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறார்கள்.
2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் நிர்வாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
3. மக்களுடன் முதல்வர்' என்ற இந்த திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
4. முகாம்களில் பெறப்படும் அனைத்து மனுக்களும் 30 தினங்களுக்குள் சம்மந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்கப்படும்.
5. இந்த முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதத்தில் புயல் பாதித்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் சுமார் 1745 முகாம்கள் நடத்தப்படும். புயல் பாதித்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும். நகர்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர். அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படும்.
6. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் முகாம்கள் நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
7. முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கைககளும் இதற்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட "மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சேவை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் முகாம்களிலேயே பெற்று பரிசீலிக்க வேண்டும்.
8. மேலும், இணையவழி விண்ணப்ப முறை எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து முகாம்களிலும் இ-சேவை மையங்கள் அமைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment