MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
இரண்டாம் சாகுஜி (சாகுஜியின் மகன் - (1777 - 1808)
காட்டுராஜா என்கிற இரண்டாம் சாகுஜி போன்சலே (Shahuji II Bhonsle of Katturaja) என்பவர் என்பவர் போன்சலே மரபின் தஞ்சாவூர் மராட்டிய மன்னராக 1738 முதல் 1739வரை இருந்தவராவார். இவர் சரபோஜியின் முறையிலா மணப்பிறப்பு மகன் என்ற சரிபார்க்கப்படாத கூற்றை அடிப்படையாகக் கொண்டு அதிகாரத்திற்கு உயர்ந்தார்.
அதிகாரத்திற்கு உயருதல்
சரபோஜி மரணமடைந்த பிறகு, காட்டுராஜா அரியணையை அடைய விரும்பினார். இருப்பினும், 1778 இல் முதலாம் சரபோஜி இறந்தபோது, அரியணை அவரது தம்பியான துக்கோஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. துக்கோஜி 1736இல் இறக்கும்வரை காட்டுராஜாவால் அரியணைமீது உரிமை கோர இயலவில்லை. அவர் இறந்த பிறகு குறைந்த காலமே ஆட்சியில் இருந்த இரண்டாம் வெங்கோஜி காலத்திலும் ஆட்சி உரிமை கோரவில்லை. ஆனால் வெங்கோஜியின் மரணத்துக்குப் பிறகு அவரது மனைவி சுஜான்பாயி அரியணையில் அமர்ந்தபிறகு காட்டுராஜா அரியணையில் உரிமை கோரினார். பிரஞ்சுக்காரர்களின் உதவியையும் பெற்றுக் கொண்டார். ஏமார்ந்த நேரத்தில் சுஜான்பாயியை சிறைபிடித்து, தளபதி சையதுவின் உதவியுடன் 1738இல் காட்டுராஜா மன்னராக ஆனார்.
ஆட்சிகாலம்
சவாய் சாகுஜி அல்லது சாகுஜி என்ற பெயரைப்பூண்டு காட்டுராஜா அரியணை ஏறி ஓராண்டு ஆட்சி செய்தார். இவர் அரியாசணம் ஏறிய பிறகு இவரது நடத்தையைக் கண்டு வெறுப்புற்று, இவர் உண்மையிலேயே அரசவாரீசுதானா என ஐயமுற்றனர். இதன்பிறகு தளபதி சையது காட்டுராஜாவை அரியணையில் இருந்து அகற்றிவிட்டு மறைந்த மன்னர் துக்கோஜியின் ஆசைநாயகிக்குப் பிறந்த பிரதாப சிம்மனை மன்னனாக்கினான்
பிற்கால வாழ்வு
பிரதாப சிம்மனின் ஆட்சிப் பிரதேசத்தில் இருந்து தொலைவான இடத்தில் இரண்டாம் சாகுஜி வாழ்ந்துவந்தார். பிரதாப சிம்மனின் ஆட்சியின் துவக்கக் காலத்தில் அவரையும் வீழ்த்தும் என்னத்துடன் இருந்த செல்வாக்கான தளபதியான சையது.ஆற்காடு நவாப்பான சந்தா சாகிப்புடன் இணைந்து சதியில் ஈடுப்பட்டார். இவர்களின் இந்த சதிசெயலில் இரண்டாம் சாகுஜியும் இணைந்து கொண்டார். இந்த சதித்திட்ங்களானது பின்னர் பிரதாப சிம்மனுக்குத் தெரிந்த்து. இதையடுத்து மன்னரின் ஆணையின்பேரில் சையிது கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment