Monday, November 6, 2023

இரண்டாம் மாதவராவ் (1774–1795)- MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL



MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

இரண்டாம் மாதவராவ்  / சவாய் மாதவராவ் (1774–1795)

சிறீமந்த் பேஷ்வா இரண்டாம் மாதவராவ் பட் (Shrimant Peshwa Madhav Rao Bhat II) (18 ஏப்ரல் 1774 - 27 அக்டோபர் 1795) சவாய் மாதவ்ராவ் பேஷ்வா அல்லது இரண்டாம் மாதவராவ் நாராயண் என்றும் அறியப்பட்ட இவர் இந்தியாவில் மராட்டிய பேரரசின் 12வது பேஷ்வா ஆவார். மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சரானஇரகுநாதராவ் உத்தரவின் பேரில் 1773 இல் கொலை செய்யப்பட்ட பேஷ்வா நாராயணராவின் மரணத்திற்குப் பிந்தைய மகனாவர். இவர், சட்டப்பூர்வ வாரிசாக கருதப்பட்டார். மேலும் 1782 இல் சல்பாய் ஒப்பந்தத்தால் பேஷ்வாவாக நிறுவப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர்,பேஷ்வா நாராயணராவின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவி கங்காபாய்க்கு பிறந்த மகனாவார். ரகுநாதராவ் ஆதரவாளர்களால் நாராயணராவ் கொலை செய்யப்பட்ட பின்னர் இவர் பேஷ்வா ஆனார். ஆனால் விரைவில் மராட்டிய பேரரசின் பிரபுக்கள் மற்றும் மாவீரர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பதிலாக அவர்கள் கங்காபாயின் புதிதாகப் பிறந்த இவரை, நானா பட்நாவிசு தலைமையில் ஆட்சியாளராக நிறுவினர். இவர் 40 நாட்கள் குழந்தையாக இருந்தபோதே பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். இவர் ஆட்சியில் இருந்த காலம் நானா பட்நாவிசின் அரசியல் சூழ்ச்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

ஆட்சி :

முதல் ஆங்கிலேய-மராத்தியப் போர்

முதல் ஆங்கிலேய-மராத்தியப் போரில் 1782 இல் பிரித்தானியர்களின் இழப்புக்குப் பிறகு, மாதவராவை ஆங்கிலேயர்கள் பேஷ்வாவாக அங்கீகரித்தனர். இருப்பினும், பேஷ்வாவின் அனைத்து அதிகாரங்களும் நானா பட்நாவிசு, மகாதாஜி சிந்தியா போன்ற அமைச்சர்களின் கைகளில் இருந்தன.

ஆங்கிலேய-மைசூர் போர்களில் ஈடுபாடு

மைசூர் 1761 முதல் மராட்டிய கூட்டமைப்பைத் தாக்கி வந்தது. மைசூரின் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் முன்வைத்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள பேஷ்வா ஆங்கிலேயர்களை ஆதரித்தார். மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போரின் போது, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மைசூருக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்தியாவிலும் மராட்டியப் பேரரசு பெற்ற பலம் மற்றும் ஆதாயங்களால் பீதியடைந்தது.

தில்லியில் குழப்பம், முகலாய தர்பார்

1788 ஆம் ஆண்டில், குலாம் காதிர் தில்லியைத் தாக்கினார், மகாதாஜி சிந்தியா மராட்டியர்களின் இராணுவத்தை தில்லிக்கு அழைத்துச் சென்று முகலாய பேரரசரையும் அவரது குடும்பத்தினரையும் காப்பாற்றினார்.

ராஜ்புத்தின் அடிபணிதல்

1790 இல், மராட்டியர்கள் பதான் போரில் ராஜ்புத் மாநிலங்களை வென்றனர். மகாதாஜி சிந்தியா இறந்த பிறகு 1794 இல், மராட்டிய சக்தி நானா பட்நாவிசின் கைகளில் குவிந்தது. 

மிருகக்காட்சிசாலை

மாதவராவ் சிங்கங்கள் மற்றும் மூக்குக் கொம்பன் போன்ற கவர்ச்சியான விலங்குகளின் தனிப்பட்ட சேகரிப்பைக் கொண்டிருந்தார். இவர் வேட்டையாடிய பகுதியான புனேவில் உள்ள பேஷ்வே பூங்கா பின்னர் உயிரியல் பூங்காவாக மாறியது. பயிற்சி பெற்ற நடன மான் கூட்டத்தை இவர் மிகவும் விரும்பினார். 

இறப்பு

மாதவராவ் தனது 21 வயதில் புனேவில் உள்ள சனிவார்வாடாவின் உயரமான சுவர்களில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  தற்கொலைக்கான காரணம், நானா பட்நாவிசின் அதிகாரத் தன்மையை இவரால் தாங்க முடியவில்லை. இவரது தற்கொலைக்கு சற்று முன்னர், காவல் அதிகாரி காசிராம் கொத்தவாலை தூக்கிலிட உத்தரவிட்டதில், இவர் முதல் முறையாக நானாவின் விருப்பங்களை மீற முடிந்தது 

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: