TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.09.2023:
- 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.2022-2023 ஆம் ஆண்டில் இத்திட்டம் 37 மாவட்டங்கள் அடங்கிய 14 தொகுப்புகளில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ–டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்.டி.எப்.சி எர்கோ மற்றும் ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரில், 11.20 லட்சம் விவசாயிகளால் 24.45 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ. 1,375 கோடியும் மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும் விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் ஆக மொத்தம் ரூ.2,319 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
- எஸ்பிஐ ரிசா்ச் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிப்பதாவது: கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் நிகர சேகரிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.1 சதவீதமாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது சுமாா் 55 சதவீத வீழ்ச்சியாகும். அதே நேரம், முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை கடந்த நிதியாண்டில் இரு மடங்காக அதிகரித்து ரூ.15.6 லட்சம் கோடியாக உள்ளது. குடும்பங்களின் சேமிப்பைப் பொருத்தவரை கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் காப்பீடு, சேம நிதி ஆகியவற்றில் கூடுதலாக ரூ.4.1 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. கடனைப் பொருத்தவரை கடந்த நிதியாண்டில் இந்தியக் குடும்பங்களின் கடன் சுமை ரூ. 8.2 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மத்தியபிரதேசம் மாநிலத்தின், கந்தர்வா மாவட்டத்தின், ஓம்காரேஸ்வரர் என்னுமிடத்தில் நர்மதியின் நதிக்கரையில் ஆதிசங்கராச்சாரியாருக்கு (ஏகத்மாதா கி பிரதிமா) 108 அடி உயரத்துடன் ரூ.2200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட சிலையை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் திறந்து வைத்துள்ளார். ஆதிசங்கராச்சாரியார் 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். இச்சிலையானது ஒருமையின் சிலையாக கருதப்படுகிறது.
- வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது விருப்பத்தின் அடிப்படையிலேயே தவிர கட்டாயம் அல்ல. இதைத் தெளிவுப்படுத்தும் விதமாகப் புதிய வாக்காளா் சோ்ப்பு, புதுப்பிப்பு ஆகியவற்றுக்கான படிவங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என உச்சநீதிமன்றத்தில் இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு (National Medical Commission) மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பானது (World Federation for Medical Education) சர்வதேச அங்கீகாரத்தினை அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய மாணவர்கள் உயர் கல்விக்கான மருத்துவப் படிப்பினை மேற்கொள்ள முடியும். National Medical Commission தில்லியை தலைமையிடமாக கொண்டு 25.09.2020-ல் உருவாக்கப்பட்டது.
- சிவபெருமான் என்ற கருப்பொருளுடன் உத்திர பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு (International Cricket Stadium) பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இம் மைதானமானது 30 ஏக்கர் பரப்பளவில் ரூ.450 கோடி மதிப்பீட்டில் 30,000 பேர் அமரும் வகையில் ஏற்படுத்தப்பட உள்ளது.
- இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதினை 2002-லும், பத்மபூஷன் 2013-லும் பெற்ற பிரபல பரத நாட்டியக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன் தனது 86 வயதில் காலமானார்.
- தற்சாா்பு இந்தியா திட்டத்தில் இணைகிறது போயிங் நிறுவனம்: அமெரிக்காவின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், பி-8ஐ என்ற கடற்சாா் கண்காணிப்பு விமானத்தின் தொழில்நுட்பம், உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்திய கடற்படையில் அதிநவீன பி-8ஐ கண்காணிப்பு விமானங்கள் 12 உள்ளன. மேலும், 6 விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
- 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில் ‘சென்டாக்’ மூலம் நடைபெறும் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக புதுவை அமைச்சரவையில் முன்னதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
- செர்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியின் மகளிர் 53கி பிரிவில் இந்தியா அண்டிம் பங்கல் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தியா சார்பில் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லும் ஐந்தாவது வீராங்களையாக திகழ்கிறார்
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 22
ரோஜா தினம் (புற்றுநோயாளிகளின் நலன்): புற்றுநோயாளிகளின் நலனுக்காக செப்டம்பர் 22 அன்று ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது அல்லது இந்த நாள் புற்றுநோயாளிகளுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையைக் குறிக்கிறது என்று சொல்லலாம். கனடாவைச் சேர்ந்த 12 வயது மெலிண்டா ரோஸின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது, அரிய வகை இரத்த புற்றுநோயால் கண்டறியப்பட்டபோது அவர் நம்பிக்கையை கைவிடவில்லை.
உலக காண்டாமிருக தினம் : இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் இந்த நம்பமுடியாத உயிரினங்களுக்கு பாதுகாப்பான இயற்கை வாழ்விடத்தை உருவாக்குகிறது.
உலக கார் இல்லாத தினம் (World Car Free Day):ஆண்டுதோறும் செப்டம்பர் 22ம் தேதி ‘உலக கார் இல்லாத தினம்’ அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தை குறைக்கும் வகையிலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
No comments:
Post a Comment