Friday, September 15, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15.09.2023

  


TODAY CURRENT AFFAIRS IN TAMIL 15.09.2023

  1. செப்டம்பர் 15-ல் காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. 2022 செப்டம்பர் 15-ல் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம் 2023
  2. கி.ரா.விருது (Ki.Ra. Award – 2023)-ஆனது எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருதானது கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் நடைபெற உள்ள கி.ரா. நூற்றாண்டு நிறைவு விழாவில் வழங்கப்பட இருக்கிறது.
  3. 2018-ல் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அமித்தவா ராய் தலைமையிலான குழுவானது சிறைச்சாலை பிரச்சனைகளையும், மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
  4. டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் தலைவர்கள் (Emerging Leaders List)  பட்டியலில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தலைவர் ஹனுமன் பீரித் கவுர், பத்திரிக்கையாளரான நந்திதா வெங்கடேசன், கட்டக்கலையில் சிறந்து விளங்கும் வினு டேனியல் ஆகியோர் இடம் பிடித்துள்ளன.
IMPORTANT DAYS AND DATES IN SEPTEMBER 2023 - செப்டம்பர் 15 

பொறியாளர் தினம் (இந்தியா):இந்திய பொறியாளர் பாரத ரத்னா மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று இந்தியாவில் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.கருப்பொருள்: “Engineering for a Sustainable Future”

சர்வதேச ஜனநாயக தினம்:ஜனநாயகம் என்பது மக்களைப் பற்றியது என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக செப்டம்பர் 15 அன்று சர்வதேச ஜனநாயக தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும், மனித உரிமைகளை திறம்பட நிறைவேற்றுவதையும் மக்களுக்கு புரிய வைக்கும் வாய்ப்பை வழங்குகிறது.கருப்பொருள்: “Empowering the Next Generation”

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: