Wednesday, September 6, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.09.2023

 


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 06.09.2023:

  1. தமிகத்தின் முதல் தேனீ பூங்காவானது 14.8ஹெக்டர் பரப்பில் அத்திப்பட்டு கிராமத்தில் அமைய இருக்கிறது.
  2. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 2023-24 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட  அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. ஆதிதிராவிட குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை  உறுதி செய்யவும், சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்டது இத்திட்டம் ஆகும்.
  3. சென்னை மாகாண முன்னாள் முதல்வரான ப.சுப்பராயனின் உருவச்சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையின் காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்துள்ளார்.
  4. கொல்கத்தா உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தேசிய பசுமை தீப்பாயத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  5. இஸ்ரோ மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் இணைந்து  நிலவின் துருவத்தை ஆய்வு செய்யும் லூபக்ஸ் ஆய்வுத்திட்டத்தினை வகுத்துள்ளது.
  6. பின்லாந்து நாட்டில் உலகில் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட்டானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  7. 2026-ஆம் ஆண்டு வரை ராணுவ ஆட்சி நடைபெறுகின்ற மியான்மர் ஆசியான் அமைப்பின் தலைமையை ஏற்க தடை விதிக்கப்பட்டது.
  8. மேற்கத்திய நாடுகளானது ரஷ்யாவின் வேளாண் பொருள்களின் ஏற்றுமதிக்கு  அனுமதி அளிக்கும் வரை  உக்ரைன் நாட்டுடனான தானிய ஒப்பந்த்திற்கு தடை விதிப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  9. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கேபான் நாட்டின் அதிபராக அந்நாட்டின் தலைமை ராணுவ தளபதியான பிரைஸ் க்ளாய்டர் ஒலிகு குவேமா அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
  10. கால்பந்து வரலாற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ  850 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற உலகச் சாதனையை படைத்துள்ளார்

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: