Wednesday, September 13, 2023

PATIRRUPPATTU-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

                                                

   

                                                                             பகுதி – (ஆ) – இலக்கியம்

    ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES - எட்டுத்தொகை:

 பதிற்றுப்பத்து-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை . ஏனைய எட்டுப் பத்துகளும் கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டு பேர் பற்றிய வரலாறு நமக்கு பதிற்றுப்பத்தின் 80 பாடல்கள் வாயிலாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.

வகை:

இந்நூல் பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் குடியோம்பல் முறை, படை வன்மை, போர்த்திறம், பகையரசர்பால் பரிவு, காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும், கவிஞரைக் காக்கும் பண்பு, பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சித் திறன்களையும் சித்திரிக்கின்றன.

பதிற்றுப்பத்து - பதிகம் தரும் செய்திகள்:

பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.

பாடல் தொகுதிகளின் பட்டியல்:

பகுதிபாடியவர்பாடப்பட்ட சேர மன்னன்பாடியவர் பெற்ற பரிசுகள்
முதல் பத்து

-

-

இரண்டாம் பத்துகுமட்டூர்க் கண்ணனார்இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்உம்பற்காடு, 500 ஊர்கள்
மூன்றாம் பத்துபாலைக் கௌதமனார்இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்வேள்விகள் செய்ய உதவி வழங்கப்பட்டது
நான்காம் பத்துகாப்பியாற்றுக் காப்பியனார்களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்40 நூறாயிரம் பொன், சேர நாட்டின் ஒரு பகுதி
ஐந்தாம் பத்துபரணர்கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்உம்பற்காட்டு வாரி
ஆறாம் பத்துகாக்கைபாடினியார் (நச்செள்ளையார்)ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்9 துலாம் பொன், நூறாயிரம் பொன்
ஏழாம் பத்துகபிலர்செல்வக் கடுங்கோ வாழியாதன்நூறாயிரம் பொன்
எட்டாம் பத்துஅரிசில் கிழார்தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைஒன்பது நூறாயிரம் காணம்
ஒன்பதாம் பத்துபெருங்குன்றூர் கிழார்குடக்கோ இளஞ்சேரலிரும்பொறைமுப்பத்தேழாயிரம் பொன்
பத்தாம் பத்து

-

-

இரண்டாம் பத்து

  • இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பாடியது
  • இமையத்தில் வில் பொறித்தான். இச்செய்தியைப் பத்துப்பாட்டு நூல்களுல் மூன்றவதான சிறுபாணாற்றுப்படையில் அதன் ஆசிரியர் அடிக்குறிப்பில் கண்டவாறு[4] புகழ்ந்து கூறுகிறார்.
  • ஆரியரை அடக்கினான்
  • யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
  • பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான்

மூன்றாம் பத்து

  • பல்யானைச் செல்கெழு குட்டுவனை பாலைக்கோதமனார் பாடியது
  • உம்பற் காட்டைக் கைப்பற்றினான்
  • அகப்பா நகரின் கோட்டையை அழித்தான்
  • முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான்
  • அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான்
  • நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான்

நான்காம் பத்து

  • களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரலை காப்பியாற்றுக்காப்பியனார் பாடியது
  • பூழி நாட்டை வென்றான்
  • நன்னனை வென்றான்

ஐந்தாம் பத்து

  • கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது
  • ஆரியரை அடக்கினான்
  • கண்ணகி கோட்டம் அமைத்தான்
  • கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
  • வியலூரை அழித்து வெற்றி கண்டான்
  • கொடுகூரை எறிந்தான்
  • மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
  • கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
  • சோழர் ஒன்பதின்மரை வென்றான்
  • படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்

ஆறாம் பத்து

  • ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காககை பாடினியார் நச்செள்ளையார் பாடியது
  • தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
  • பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.
  • வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
  • மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்
  • கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.

ஏழாம் பத்து

  • கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)
  • செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது
  • பல போர்களில் வென்றான்
  • வேள்வி செய்தான்
  • மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான்
  • அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான்
  • பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான்

எட்டாம் பத்து

  • பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடியது
  • கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான்
  • தகடூர்க் கோட்டையை அழித்தான்

ஒன்பதாம் பத்து

  • இளஞ்சேரல் இரும்பொறையை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது
  • கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான்.
  • பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான்.
  • வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான்
  • வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான்.
  • மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான்
  • தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான்
  • சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான்
  • அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான்

பாடல் தலைப்புகள்:

இந்நூலிலுள்ள பாடல்களின் தலைப்பாக விளங்குவன அப்பாடல்களிலேயே காணப்படும் அழகான சொற்றொடர்களேயாவன. இரண்டாம் பத்திலுள்ள முதற்பாடலின் தலைப்பு புண்ணுமிழ் குருதியாகும். இத்தொடர் இப்பாட்டின் எட்டாம் அடியில் உள்ளது. பாடல் எண் பன்னிரண்டினுடைய, அடுத்த பாடலின், தலைப்பு மறம் வீங்கு பல்புகழ் என்பதாகும். இத்தொடர் இப்பாடலின் எட்டாவது அடியில் காணப்படுகிறது. இது போன்று இந்நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படும் அருஞ் சொற்றொடர்கள் பாக்களின் தலைப்பாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். அதற்கு அடுத்த பாடலின் தலைப்பு பூத்த நெய்தல் ஆகும். இத்தொடர் பதின்மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் காணப்படுகிறது. 14ம் பாட்டின் தலைப்பு சான்றோர் மெய்ம்மறை. இதற்கு அடுத்த பாடலின் தலைப்பு நிரைய வெள்ளம். இத்தகைய அழகான தலைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவரும் வண்ணம் தீட்டிய சித்திரம் போல் கருத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றன.

உரையாசிரியர்கள்:

பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. இந்த உரையாசிரியர் யார் என்பதை அறிய இயலவில்லை. இவ்வுரையாசிரியர் நேமிநாதம் இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் என்பது இவ்வுரையில் காணப்படும் குறிப்பிலிருந்து தெரிகிறது. இந்த பழையவுரை குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் அளவில் இடைப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்வுரை பாடல்களின் தலைப்புப் பொருத்தம் குறித்து பேசுகின்றது. முக்கியமான இலக்கணக் குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன்.

  • ஔவை துரைசாமிப்பிள்ளை உரை
  • யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் உரை
  • புலியூர் கேசிகன் உரை
  • பரிமளம் உரை

பதிற்றுப்பத்து பாடல்களில் சில சொற்களின் பயன்பாடுகள்:

  • கசடு = சேறு, வஞ்சகம் 'கசடு இல் நெஞ்சம்'
  • காணியர் காணலியரோ = பார்க்கட்டும் அல்லது பார்க்காமல் போகட்டும் 'ஆடுநடை அண்ணல் நிற் பாடுமகள் காணியர் காணலியரோ நிற் புகழ்ந்த யாக்கை'
  • துளங்கு = ஆடு, துள்ளிக் குதித்து ஆடும் நீர், அலைமோது. 'துளங்குநீர் வியலகம்'
  • நுடங்கல் = ஆடல், 'கொடி நுடங்கல்'
  • மேவரு = விரும்பும்(நம்பும் மேவும் நசை யாகுமே-தொல்காப்பியம்) \ மேவு + வரு \ மேவு = விரும்பு \ வரு - துணைவினை \ 'மேவரு சுற்றம்

பதிப்பு வரலாறு:

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்

50 KEY POINTS TNPSC EXAMS -பதிற்றுப்பத்து 

  1. சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
  2. பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது.
  3. திணை = பாடாண் திணை (புறத்திணை)
  4. பாவகை = ஆசிரியப்பா
  5. பாடல்கள் = 100( கிடைத்தவை 80)
  6. புலவர்கள் = 10(அறிந்த புலவர் 8)
  7. அடி எல்லை = 8-57
  8. பெயர் காரணம்:பத்து + பத்து = பதிற்றுப்பத்து,( பத்து + இன் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து)
  9. பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று தொல்காப்பியம் வெளிப்படையாக கூறவில்லை. நன்னூல் கூறுகிறது.
  10. வேறுபெயர்: இரும்புக்கடலை
  11. இந்நூலை தொகுத்தவர், தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
  12. பழைய உரைக்கு உ.வே.சா வின் குறிப்புரை
  13. இந்நூல் பாடாண் திணை என்னும் ஒரே தினைப் பாடலால் ஆனது.
  14. இந்நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
  15. ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை) ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.
  16. வழக்கின் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப் பெற்றுள்ளதால் இந்நூல் “இரும்புக்கடலை” என அழைகப்படுகிறது.
  17. பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிக்கிறது.
  18. சங்க நூல்களில் அனைத்துப் பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.
  19. பதிற்றுப்பத்தும் இசையோடு பாடப்பட்ட நூல்.(இசையோடு பரிபாடலும் பாடப்பட்டது)
  20. நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.
  21. பகைவரது பெண்டிரின் கூந்தலை அறிந்து கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுப்பது போன்ற செய்திகள் ஐந்தாம் பத்தில் உள்ளது.
  22. “பிற்காலத்தில் கல்வெட்டுகளில் இடம் பெற்ற மெயகீர்த்திகளின் போக்கு பதிகங்களில் காணப்படுகிறது” என்கிறார் தமிழண்ணல்
  23. எட்டுத்தொகையுள் ஒரு திணைப் பாடல்களைக் கொண்ட ஒரே நூல்.
  24. பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பத்து வேறு வேறு புலவர்கள் பாடி இருப்பது இதன் சிறப்பாகும்.
  25. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு (இசை) பாடலின் பெயர் ஆகியவைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
  26. பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து அந்தாதித் தொடைபெறும். இதனால் இது பிற்கால அந்தாதிகளுக்கு வழிகாட்டி எனலாம்.
  27. பதிற்றுப்பத்தினை இரும்புக் கடலை என்று அழைப்பர்
  28. இதனால் இதன் பாடல்கள் இசையோடு பாடப் பெற்றமை புலனாகும்.
  29. ஒவ்வொரு பாடலுக்கும் அப்பாடலில் சிறந்து விளங்கும் தொடரொன்றினால் பெயர் இடப்பட்டுள்ளது.
  30. ‘தசும்புதுளங்கு இருக்கை’ சுடர்வீ வேங்கை, ஏறா ஏணி, நோய்தபு நோன்றொடை என்பன போன்று ஒவ்வொரு பாடலுக்கும் பெயர் சூட்டப்பட்டிருக்கும்.
  31. ஒவ்வொரு பத்துப் பாடலின் முடிவிலும் பதிகம் ஒன்று காணப்படுகின்றது.
  32. அதில் பிற்காலத்துத் தோன்றிச் சிறப்படைந்த அரசர்களின் மெய்கீர்த்தி போன்று இது அவ்வப்பத்தின் வரலாறு கூறும் சிறப்பினதாக அமைந்துள்ளது.
  33. இப்பதிகத்தினால் பத்து செய்யுட்களின் பெயர், பாடினார் பெயர், பாடப்பட்ட அரசர் பெயர், அவர் ஆட்சி புரிந்த கால அளவு, பாடிய புலவர் பெற்ற பரிசில் போன்ற செய்திகள் அறியப்படுகின்றன.
  34. வழக்கில் இல்லாத பல பழந்தமிழ்ச் சொற்களை இந்நூலில் காண முடிகிறது.
  35. சேரர்களின் வரலாற்றை அறிய உதவும் ஒரு வரலாற்று நூலாகவே இது திகழ்கின்றது.
  36. மாற்றார் மகளிரின் கூந்தலை அறுத்துக் கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுக்கும் வழக்கம் சொல்லப்பட்டுள்ளது.
  37. பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிப்பது.
  38. சேரநாட்டார் (கேரளா) தமிழர்களே என்பதற்கு இந்நூல் சான்று பகர்கிறது
  39. பரணன் கானம், கண்ணன் காடு, காக்கையூர் ஆகிய ஊர்கள் சோநாட்டுக்களே எனச் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்றன.
  40. பதிற்றுப்பத்தின் பதிகச்செய்திகள் வரலாற்றிற்குப் பெரிதும் உதவுவன
  41. நன்னன போன்ற குறுநில மன்னர்களும். தகடூர் அதியன் வெல்லப்பட்டதும். மேற்குக் ஈடலில் கப்பல்களைத் தாக்கும் கடம்பர்களை அடக்கியமையும் போன்ற வரலாற்றுச் செய்திகள் இதன் கண் உள்ளன
  42. 2 முதல் 6 ஆம் பத்துவரை உதியஞ்சேரல் குடியையும், 7 முதல் 9ஆம் பத்துவரை இரும்பொறை மரபையும் பேசுகின்றன.
  43. இவற்றால் பதிற்றுப்பத்து, புறநானூற்றைப் போலவே வரலாற்றுப் பெட்டகமாக விளங்குதலை உணர முடியும்.


முக்கிய அடிகள்:
  • ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
  • ஈத்தொறு மாவள்ளியன்
  • மாரி பொய்க்குவது ஆயினும்
  • சேரலாதன் பொய்யலன் நசையே
  • வாரார் ஆயினும், இரவலர் வேண்டித்
  • தேரில் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும்
  • நசையால் வாய்மொழி இசைசால் தோன்றல்

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: