Thursday, September 14, 2023

KALITHOGAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

                                                                                                                                                                                             


                                                                        

                                                                    பகுதி – (ஆ) – இலக்கியம்

ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES - எட்டுத்தொகை:

KALITHOGAI-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.

அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர், தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.

வேறு பெயர்கள்

  • கலி
  • குறுங்கலி
  • கற்றறிந்தோர் ஏத்தும் கலி
  • கல்விவலார் கண்ட கலி
  • அகப்பாடல் இலக்கியம்

தொகுப்பு:

பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி;

            மருதனிள நாகன் மருதம்; - அருஞ்சோழன்

            நல்லுருந்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல்

            கல்விவலார் கண்ட கலி

கலித்தொகை நூலில் உள்ள,

  • பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ ( 35 பாடல்கள்)
  • குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலர் (29 பாடல்கள்)
  • மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் மருதன் இளநாகனார் (35 பாடல்கள்)
  • முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன் (17 பாடல்கள்)
  • நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவன் (33 பாடல்கள்)
  • இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.

பாடல் தொகைகள்:

கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும் குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும் மருதக்கலியில் 35 பாடல்களும் முல்லைக்கலியில் 17 பாடல்களும் நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

கலிதொகையின் சிறப்பு:

திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்

    விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ

    கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம்

    பொங்கு கலி இன்பப் பொருள்

    என்றும் பழம் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றது.

கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள்:

'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
  • ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
  • போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
  • பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
  • அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
  • அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
  • செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
  • நிறைவு எனப்படுவது மறைபிறர் அறியாமை
  • முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
  • பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
கலித்தொகை காட்டும் சமூகம்:

களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றிச் செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.

வரலாற்று செய்திகள்:

கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையைப் பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.

KEY POINTS TNPSC EXAMS -கலித்தொகை 
  1. திணை = அகத்திணைபாவகை = கலிப்பாபாடல்கள் = 150அடி எல்லை = 11-80பாடியோர் = 5
  2. பெயர்க்காரணம்- கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் கலித்தொகை
  3. நூல் முழுமைக்கும் நச்சினார்கினியர் உரை உள்ளது.
  4. நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
  5. கடவுள் வாழ்த்து-இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  6. இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
  7. இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.
  8. தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
  9. நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற் களியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.
  10. இந்நூலை தொகுத்தவர்.நல்லந்துவனார்.நல்லந்துவனார் சங்க காலத்தவர்.இவர் நெய்தல் கலியில் 33 பாடல்கள் பாடியுள்ளார்.
  11. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள்
  12.  எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை கலிப்பாக்களால் அமைந்தது.
  13. கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்ந்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.
  14. கலித்தொகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது.
  15. கலிப்பா துள்ளல் ஓசை உடையது.
  16. இந்நூலை “கற்றறிந்தோர் ஏத்தும் கலி” எனச் சிறப்பிப்பர்
  17. இது நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.
  18. இசையோடு பாடுவதற்கு ஏற்றது
  19. தொல்காப்பிய விதிப்படி கலிப்பாவால் அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை நூல் கலித்தொகை மட்டுமே.
  20. பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் = கலித்தொகை, பரிபாடல்
  21. கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது.
  22. பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
  23. பாலை தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
  24. நூல் முழுவதுமே பாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
  25. பிற சங்க நூல்களில் கூறப்படாத, “கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
  26. கலித்தொகையை நல்லந்துவனார் மட்டுமே பாடினார் எனக்கூரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  27. ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே.
  28. பெருந்திணை, கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே.
  29. காமக் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.
  30. மகாபாரத கதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.


முக்கிய அடிகள்:

“காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்

யாழ்வரைத் தங்கியாங்கு”

“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்”

"ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை

அறிவேனப்படுவது பேதையர் சொல் நோன்றல்

செரிவேனப்படுவது கூறியது மறா அமை"

அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்

செறிவெனப் படுவது கூறியது மறாஅமை

நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை

முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்

பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: