பகுதி – (ஆ) – இலக்கியம்
ETTUTHOGAI NOOLGAL-TNPSC TAMIL ILLAKKIYAM NOTES - எட்டுத்தொகை:
TNPSC TAMIL ILLAKKIYAM NOTES -ஐங்குறுநூறு AINKURUNURU
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. அவை, ஆசிரியப்:பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.அந்தப் பாடல் சிவபெருமானின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புலவர்கள்:
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் வெண்பாவைக் கீழ்க்காண்போம்.
சான்று :
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சிக் கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லைப் பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
விளக்க உரை :
- மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
- நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
- குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
- பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
- முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
ஆகியோர் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார்.
ஐந்து புலவர்கள் :
ஓரம்போகியார் :‘ஓரம்போகியார்’ என்ற இப்புலவரின் பெயர் பாட பேதமாக ஒரேர் போகியார், ஒன்னார் உழவர், கரம்போகியார் எனத் திரிந்து காணப்படுகின்றது. சேரமான் ஆதன் எழினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன் என முடிமன்னர் மூவரையும் ‘விராஅன்’ மற்றும் ‘மத்தி’ என்னும் இருவர் பற்றியும் இப்புலவர் பாடியுள்ளார். தேனூர், ஆமூர், இருப்பை, கழார் என நான்கு ஊர்களையும், நதிகளில் காவிரி, வையை ஆகியன பற்றியும் பாடியுள்ளார்.
அம்மூவனார்:அம்மூவனார் என்ற புலவர் சேர, பாண்டியராலும், திருக்கோவலூரையாண்ட ‘காரி’ என்னும் வள்ளலாலும் ஆதரிக்கப்பட்டவர். தொண்டி, மாந்தை, கொற்கை, கோவலூர் முதலான நகரங்களும் இவரால் சிறப்புறப் பாடப்பட்டுள்ளன. நெய்தல் நிலம் பற்றிப்பாடுவதில் இவர் வல்லவர்.
கபிலர்:‘குறிஞ்சிக்கோர் கபிலன்’ எனப் புகழப் பெறுபவரான இப்புலவர், பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூரில் அந்தணர் மரபில் பிறந்தவர். பாரி வள்ளலின் ஈடு இணையற்ற நண்பர் குறிஞ்சித்திணை நூறு இவரால் பாடப்பட்டவை.
ஓதலாந்தையார்:இவர் கடைச் சங்கப்புலவர்களுள் ஒருவர். அறக்கருத்துகளைத் தம் பாடல்களில் அதிகமாக வலியுறுத்தியுள்ளார். பாலைத் திணையில் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பெரும்பான்மையாகக் கூறப்படினும், தலைவி, தலைவனை மணந்து அவனுடன் இனியனாய்ச் சென்ற நிகழ்வினை இடைச்சுரத்து மக்களிடம் கேட்ட செவிலி, அதனை நற்றாய்க்குக் கூறும் செய்யுளை ஈற்றில் வைத்து இத்திணைக்கு மங்கல முடிவு கொடுத்துள்ளார்.
பேயனார்:இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். முல்லை நிலம் பற்றிப் பாடுவதில் வல்லவர். ஐங்குறுநூற்றைத் தவிரக் குறுந்தொகையில் மட்டுமே இவருடைய பாடல்கள் உள்ளன.
நூலின் அமைப்பு:
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். இதில் திணைப்பாடல்கள் அமைவுமுறையை, "மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே" என்ற அடிகள் தெளிவுபடுத்துகின்றன.
இந்நூலில் நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சிறப்பான தலைப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன.
மேலும் தொண்டிப்பத்து (பாடல் 171-180) என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. இதனைப் பாடியவர் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
ஐங்குறுநூறு குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ள பாடல்களைக் கொண்டுள்ளது. ஆனால் இந்நூலின் பாடல்கள் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி பொருட்கள் மூன்றும் குறைவாக அமைந்துள்ளது.
தொகுப்பு:
- தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
- தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
உரை, பதிப்பு
- முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்
- முதலில் உரை எழுதியவர் = ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
பதிப்பு வரலாறு:
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்.
50 KEY POINTS TNPSC EXAMS -ஐங்குறுநூறு:
- திணை = அகத்திணைபாவகை = ஆசிரியப்பாபாடல்கள் = 500பாடியோர் = 5அடி எல்லை = 3-6
- பெயர்க்காரணம்:ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
- குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
- கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள் வீதம் 500 பாடல்கள் கொண்டது
- ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு தினைக்கும் நூறு நூறு பாடல்கள் என்னும் வீதத்தில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாடல்கள் எனப் பத்து பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு பத்து பாடல்களின் தலைப்பும் “பத்து” என முடிகிறது.
- குரங்குப்பத்து, எருமைப்பத்து, குயிற்பத்து போன்ற தலைப்புகள் உள்ளன.
- தொகை நூல்களில் மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல்.
- தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ளது.
- அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
- சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.
- இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் இதுவே.
- தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இதில் விரவி வந்துள்ளது.
- தொகை நூல்களில் மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல் இதுவே.
- தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ளது.
- அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
- சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.
- இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் இதுவே.
- தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இதில் விரவி வந்துள்ளது.
- இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அப்பழைய உரையோடு தன் விளக்கத்தினையும் சேர்த்து டாக்டர் உ.வே.சா. அவர்கள் 1903-ல் இந்நூலை முதன்முதலில் வெளியிட்டார்.
- அதன்பின் இதற்கு ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையெழுதி வெளியிட்டார். இதன் 129, 130 ஆகிய இரு பாடல்களும் மறைந்து போயின.
- நூறு பாடல்களின் பகுதிகளாகக் காணப்படும் ஒவ்வொரு பத்தும், பொருளமைப்பினாலோ அன்றி அப்பாக்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனிப் பெயர்கள் பெற்றன.
- வேட்கைப்பத்து, வேழப் பத்து, தெய்யோப் பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியினால் பெயர் பெற்றவை.
- பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து, தோழி வற்புறுத்தப்பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பால் பெயர் பெற்றன.
- தொண்டிப்பத்து – அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
- அன்னாய் பத்து சொல்லாட்சியும், பொருளமைதியும் பொருந்தியது.
- எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப்பத்தும் ஐங்குறுநூறூம் பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதிகளைக் கொண்டு ஒரே மாதிரி உருவாக்கப்பட்டுள்ளன
- ஐங்குறுநூற்றில் ஆதன், அவினிகுட்டுவன். கடுமாள், கிள்ளி போன்ற மன்னர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
- துறைக் குறிப்புகள் இந்நூலின் ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் விரிவான துறைக்குறிப்புகள் அமைந்திருத்தல் தனிச்சிறப்பாகும்.
- துறைக் குறிப்புகளில் சூழல், கூறுவோர், கேட்போர் ஆகிய திறம் இடம் பெறும்.
- பிற அகநூல்களான அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் அளவில் பெரிய பாடல்கள் தமக்குரிய சூழலைத் தாமே விளக்குவனவாய் இருத்தலால், சிறிய துறைக் குறிப்புகள் உடையனவாக உள்ளன.
- ஆனால், அடியளவு சிறிதாக உள்ள இந்நூலில், நீண்டமையும் துறைக்குறிப்புகள் பாடல் பின்னணி, முன் நிகழ்ச்சி, முந்தைய உரையாடலில் நிகழ்ந்த கூற்று ஆகியவற்றை நன்கு விளக்குகின்றன.
- சங்க அகப்பொருள் மரபை மீறாமலும், அதனை வலியுறுத்திக் காப்பனவாகவும் தொல்காப்பிய நூற்பாத் தொடரையே கொண்டு அமைந்த துறைக் குறிப்புகளும் இந் நூலில் காணப்படுகின்றன.
- பாத்திரங்களின் கூற்று பெயர் சுட்டாத அகத்திணை மரபு காரணமாகவும், உணர்வுகளுக்கு முதன்மை அளிப்பதாலும் இந்நூலில் உள்ள பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன.
- ஒரே பாத்திரக் கூற்று ஒற்றை நடிப்பு போன்றும், பல பாத்திரங்கள் கூற்று நாடகத் துறைக்குரிய கள அமைப்புக் கொண்டும் திகழ்கின்றன.
- 20 பத்துகள் ஒருவர் கூற்றிலும், 16 பத்துகள் இருவர் கூற்றிலும், 10 பத்துகள் மூவர் கூற்றிலும், இரண்டு பத்துகள் நால்வர் கூற்றிலும், தலா ஒரு பத்துகள் ஐவர் மற்றும் அறுவர் கூற்று களிலும் அமைந்துள்ளன.
- இந்திர விழா (62), மார்சுழி நீராடல் (84) தொண்டி கொற்கை போன்ற துறைமுகங்கள் (171, 185) போன்றவை. குறிப்பிடப்பட்டுள்ளன.
- நெய்தல் திணைப்பாடல்களில் பேதைப் பருவ மகளிரின் விளையாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன.
- தேனூர். தொண்டி ஆமூர், வயலூர் போன்ற ஊர்கள் சுட்டப்பட்டுள்ளன.
- இவற்றின் அடிக் குறிப்புகள் பொருத்தமுடையளவாகவும், விளக்கமாகவும் பழமையுடையனவாகவும் விளங்குகின்றன.
- தொல்காப்பியம் முதலான நூல்கள் அனைத்தும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்றே வரிசைப்படுத்தியிருக்கின்றன. இந்நூல் ஒன்றே மருதத்திணையை முதற்கண் வைத்துக் கூறுகின்ற நூலாகும்.
- முதல் பொருள், கருப்பொருள், உரிப் பொருள் ஆகிய மூன்றையும் குறைவின்றிக் கூறும் சிறப்பினையும் இந்நூலின்கண் காணலாம்.
- கபிலர் பெருமானின் பாடல்களில் குறிஞ்சி நில இயற்கை எழிலைக் காணலாம்.
- ஓரம்போகியாரின் மருதத் திணைப் பாடல்களிலோ உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்தனவாக விளங்குகின்றன.
- இந்நூலில் விலங்கு, பறவைகளைக் கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து, கேழற்பத்து, மயிற்பத்து, கிள்ளைப் பத்து எனப் பெயரமைத்து அகப் பொருட் கருத்துக்கள் அழகு விளக்கியுரைக்கப்பட்டுள்ளன.
- இந்நூலில் உள்ள பாடல்களைப் பெண்பாற் புலவர்கள் எவரும் இயற்றாதது எண்ணத்தக்கது.
- திணைக்கு 100 பாடல்கள் என்னும் தொகுப்பால் ‘சதகம்’ என்னும் இலக்கிய வகையும், பத்துப் பாடல்கள் என்னும் தொகுப்பு முறையால் ‘பதிகம்’ என்னும் வகையும், அந்தாதி முறையில் அமைந்த தொண்டிப் பத்தால் அந்தாதி என்னும் இலக்கிய வகையும் தோன்ற, இந்நூல் முன்னோடியாய்த் திகழ்கிறது.
- வெறிப்பத்து, வேட்கைப் பத்து, மறுதரவுப் பத்து ஆகியன, சங்ககாலச் சடங்குகளை வெளிப்படுத்தும் விதமாய் அமைதலோடு, திருவாசகத்திற்கு முன்னோடியாகவும் விளங்குகின்றன.
- பெற்றோர் இறைவனை வேண்டி நோன்பு நோற்றுப் பிள்ளை பெற்ற செய்தியை அறிய முடிகின்றது.
- போரில் வீரமரணம் அடைந்தோர்க்கு நடுகல் நாட்டி, வழிபாடு செய்த தன்மையை உணரமுடிகின்றது.
- பெற்றோர்தம் மகள் மணவாழ்விற்குரிய தகுதியைப் பெற்றுவிட்டனள் என்பதனை உலகிற்கு உணர்த்த நிகழ்த்தும் ‘சிலம்புகழி நோன்பு’ குறித்து இந்நூல் தெரிவிக்கிறது.
- தாய் முகம் நோக்கியே ஆமைக்குட்டிகள் வளரும் என்ற உண்மையையும்,
- முதலைகள் தம் குட்டிகளைபே கொன்று தின்றுவிடும் என்னும் செய்தியையும் சொல்கிறது.
நூலில் கூறப்படும் அரசர்கள்
- கடுமான்
- குட்டுவன்
- ஆதன்
- அவினி
- கொற்கை கோமான்
- மத்தி
நூலில் கூறப்படும் ஊர்கள்
- தொண்டி
- தேனூர்
- கழார்(காவிரி)
- கொற்கை
கிடைக்காதவை
ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில் 129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
முக்கிய அடிகள்:
அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ
மானுண்டு எஞ்சிய கலுழி நீரே - (கபிலர்)
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோய் யாயே - (ஓரம்போகியார்)
பூத்த கரும்பில் காய்ந்த நெல்லிற்
கழனி யூரன்
வாழி ஆதன் வாழி அவினி
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ
மானுண்டு எஞ்சிய கலுழி நீரே - (கபிலர்)
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோய் யாயே - (ஓரம்போகியார்)
பூத்த கரும்பில் காய்ந்த நெல்லிற்
கழனி யூரன்
வாழி ஆதன் வாழி அவினி
No comments:
Post a Comment