TODAY CURRENT AFFAIRS IN TAMIL 24.07.2023
- முதியோர் ஓய்வூதியம்: தமிழகத்தில் ரூ.1000லிருந்துரூ.1,200ஆக முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
- கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்ட முகாம் : ஜூலை 24 தர்மபுரி, தோப்பூரில் கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்ட முகாமானது முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட உள்ளது. 15.09.2023-லிருந்து கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது.
- 05.09.2022-லிருந்து தமிழகத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி திட்டத்தின் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கீழ் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டமானது தொடங்கப்பட்டது
- பெண் காவலர்க்கான அவள் எனும் திட்டம் 17.03.2023-லிருந்து செயல்படுத்தப்பட்டது
- 23.06.2023-லிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க இமைகள் திட்டம் துவங்கப்பட்டது.
- ராஜ்யசபா துணைத் தலைவர் குழு:ராஜ்யசபா துணைத் தலைவர் குழுவிற்கு முதன் முறையாக 4 பெண்கள் நியமனம் செய்யபப்பட்டள்ளன.பி.டி.உஷா, சுலதா தியேர், ஃபெளசியாகான், ஃபாங்னான் கெளன்யாக்
- ஆயுஷ்மான் பவ : நாட்டின் கடைக்கோடி வரை உள்ளவருக்களுக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் கிடைக்க ஆயுஷ்மான் பவ (நீடுழி வாழ்க) எனும் திட்டத்தினை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
- செமிகான் இந்தியா 2023 மாநாடு: குஜராத்தின் தலைநகரான காந்திநகரில் செமிகான் இந்தியா 2023 மாநாடு நடைபெற்றுள்ளது
- ஐஎன்எஸ் கிர்பான் : இந்தியாவால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக போர்க்கப்பலான ஐஎன்எஸ் கிர்பான் வியத்நாமிற்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.
- பேரிடர் பாதுகாப்பு மாநாடு : ஜி20 நாடுகளின் 3வது பேரிடர் பாதுகாப்பு மாநாடானது சென்னையில் நடைபெற்றது.முதல் இரு மாநாடுகள் முறையே காந்திநகர், மும்பையில் ஆகிய இடங்களில் நடைபெற்றது.ஜி20 முதல் மூன்று மகளிர் மாநாடுகள் முறையே ஜெய்ப்பூர், அவுரங்கபாத், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.ஜி20 கல்வி அமைச்சர் நான்கு மாநாடுகள் முறையே சென்னை, அமிர்தசரஸ், புவனேஸ்வர், புனே போன்ற இடங்களில் நடைபெற்றது.
- ஜி20 – அறிவியல் 20 உச்சி மாநாடு: கோயம்புத்தூரிலுள்ள ஈஷா யோகா மையத்தில் ஜி20 நாடுகளின் அறிவியல் 20 உச்சி மாநாடு நடைபெற்றது.
- ஸ்டூவர்ட் பிராட் : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இங்கிலாநது வீரர் ஸ்டுவர்ட் பிராட் பெற்றுள்ளார்.
- பாகிஸ்தான் ஏ அணி சாம்பியன் : இலங்கையில் நடைபெற்ற இளையோர் (யு23) ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய ஏ அணியானது 2வது இடத்தை பிடித்துள்ளது
- கொரிய ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டி: தென்கொரியா நடைபெற்ற கொரிய ஓபன் சூப்பர் 500 பாட்மின்டன் போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- Important Days and Dates – 24th July 2023 .வருமான வரி தினம் (Income Tax Day) – July 24
- உலக சுய பாதுகாப்பு தினம் (International Self-Care Day) – July 24 .கருப்பொருள்: Resilience, adaptability, and thriving in adversity.
- 2019-ல் இந்தியாவில் இ-சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
- 1980-ல் இந்தியாவில் வன பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது
No comments:
Post a Comment