- தேசிய மாம்பழ தினம் (National Mango Day) – July 22 : முக்கனிகளுள் முதல் கனியான மாம்பழத்திற்காக கொண்டாடப்படும் தினம் தேசிய மாம்பழ தினமாகும்.நம் நாட்டின் தேசிய பழமாக 1950-ல் மாம்பழம் அறிவிக்கபட்டது.மாம்பழ திருவிழாவானது உத்தரபிரதேசத்தில் கொண்டாடப்பட்டது.
- உலக மூளை தினம் (World Brain Day) – July 22.கருப்பொருள்: “Brain Health and Disability: Leave No one Behind”.1957 July 22-ல் The World Federation of Neurology அமைப்பு தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.
- PI Approximation Day – July 22:π-யின் மதிப்பான 22/7-யை நினைவு கூறும் விதமாக ஜூலை 22-ல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.π-யின் மதிப்பான 3.14-யை நினைவு கூறும் விதமாக மார்ச் 14-லும் ஃப்பை(PI) தினம் கொண்டாடப்படுகிறது.
- பதிவுத்துறை மறு சீரமைப்பின் அங்கமாக தாம்பரம், கோவை தெற்கு ஆகிய இடங்களை தலைமையாக கொண்டு புதிய பதிவு மாவட்டங்களையும், 13 வணிக வரி மாவட்டங்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
- குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை செயலராக உள்ள வி.அருண்ராய்க்கு உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இந்தியா-இலங்கை இடையே கடல் வழி பாலம் அமைத்தல், மின்சார பகிர்மான அமைப்புகளை ஒருங்கிணைத்தல் உள்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
- இலங்கையில் யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை வசதி தொடங்கவும், நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே படகு சேவை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- விராட்கோலி விளையாடிய 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.இச்சாதனை புரிந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் : 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியாவின் சமீர், ராஜ் கன்வர் சிங் சந்தூர், மகேஷ் ஆனந்த குமார் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
- செக்குடியரசில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை சாம்பியன் ஷிப் போட்டியில் இருகைகளும் இல்லாத மாற்றுத்திறனாளியான இந்தியாவின் ஷீத்தல் தேவி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்
- மத்திய நிலக்கரி அமைச்சகமானது சமீபத்தில் வர்த்தக அமைச்சகத்தால் GeM மூலம் மின்-கொள்முதலில் செய்த சாதனைகளுக்காக “சிறந்த ஈடுபாடு” பிரிவில் விருதினைப் பெற்றுள்ளது. 2023-24 நிதியாண்டில், நிலக்கரி பொதுத் துறை நிறுவனங்களானது(PSUs) கிட்டத்தட்ட ரூ. 21,500 கோடி மதிப்புள்ள பல்வேறு ஏலங்களை வெளியிடுவதன் மூலம் GeM மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதே இந்த விருதுகளை பெறுவதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் இயங்கும் கோல் இந்தியா நிறுவனமானது(CIL) “ரைசிங் ஸ்டார்” மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு “டைம்லி பேமெண்ட்ஸ்” பிரிவுகளில் விருதுகளானது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
"TNPSC PAYILAGAM BLOG | Best Preparation Tips For TNPSC Exams | "
Saturday, July 22, 2023
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 22.07.2023
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)
காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது:
-
Introduction Welcome to our blog post on "APRIL 2024 - CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL" , specifically tailored for ...
-
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL Introduction Welcome to our blog post on "MARCH 2024 - CURRENT AFFAIRS QUESTION AND A...
No comments:
Post a Comment