Monday, July 17, 2023

TNPSC GENERAL TAMIL NOTES தமிழ் நூல்களில் முதன் முதல்

  1. முதல் குறவஞ்சி நூல் = திருக்குற்றால குறவஞ்சி (எழுதியவர் = திரிகூடராசப்பக் கவிராயர்)
  2. முதல் உலா நூல் = திருக்கையிலாய ஞான உலா (இதனை ”தெய்வீக உலா” அல்லது “ஆதி உலா” என் அழைப்பர். எழுதியவர் = சேரமான் பெருமாள் நாயினார்)
  3. தமிழின் முதல் நாவல் = பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை)தமிழின் முதல் இசைபாடல் நூல் = பரிபாடல்
  4. தமிழின் முதல் காப்பியம் = சிலப்பதிகாரம்
  5. தமிழின் முதல் காப்பியம் = மணிமேகலை
  6. முதல் விருத்தப்பா காப்பியம் = சீவக சிந்தாமணி
  7. தமிழின் முதல் தருக்க நூல் = நீலகேசி
  8. சைவசமயத்தின் முதல் நூல் = திருமூலரின் திருமந்திரம்
  9. முதல் சித்த நூல் = திருமூலரின் திருமந்திரம்
  10. தமிழின் முதல் கள ஆய்வு நூல் = பெரியபுராணம்
  11. முதல் பரணி நூல் = கலிங்கத்துப்பரணி
  12. முதல் தூது நூல் = நெஞ்சு விடு தூது (எழுதியவர் = உமாபதி சிவம்)
  13. முதல் கலம்பக நூல் = நந்திக்கலம்பகம் (எழுதியவர் = தெரியவில்லை)
  14. முதன் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் = குறுந்தொகை
  15. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் = மனோன்மணீயம்.
  16. தமிழில் அச்சிடப்பட்ட முதல் இலக்கண நூல் = நன்னூல் (1835)
  17. தமிழில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூல் = 1984 ஆகஸ்ட்டில் ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் “புள்ளிப் பூக்கள்” எனும் தனது ஹைக்கூ நூலை வெளியிட்டார்.
  18. தமிழ் மொழியில் வெளி வந்த முதல் ஹைக்கூ கவிதை இதழ் = கரந்தடி
  19. தமிழில் வெளிவந்த முதல் சென்ரியு கவிதை நூல் = ஈரோடு தமிழன்பன் அவர்களின் “ஒரு வண்டி சென்ரியு” (2001)
  20. தமிழின் முதல் லிமரைக்கூ கவிதை நூல் = ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” நூலாகும்.
  21. முதன் முதல் புத்தக வடிவம் பெற்ற சங்க இலக்கியம் = திருமுருகாற்றுப்படை
  22. தமிழில் புதுக்கவிதை பற்றிய முதல் ஆய்வு நூல் = யாப்பும் கவிதையும் (எழுதியவர் சி.மணி)
  23. தமிழில் தோன்றிய முதல் உரைநூல் = இறையனாரகப்பொருள் உரை
  24. தமிழில் முதன் முதலாக அகராதி என்ற சொல்லைப் பயன்படுத்திய நூல் = 1594 இல் எழுதப்பட்ட “அகராதி நிகண்டு”. இதன் ஆசிரியர் = இரேவணசித்தர்.
  25. தமிழில் தோன்றிய முதல் நிகண்டு = சேந்தன் திவாகரம் (ஆசிரியர் = திவாகர முனிவர்)
  26. இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் = பெங்கால் கெஜட் (1780) (கல்கத்தா ஜெனரல் அட்வைசர்)
  27. இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆங்கில வார இதழ் = ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் துவக்கிய “மெட்ராஸ் கூரியர்” (Madras Courier)
  28. 1850 ஆம் ஆண்டு முதல் தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ (Delhi Sketch Book), என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.
  29. தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் = மதராஸ் மெயில் (1868)
  30. தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் = சுதேசமித்திரன் (1882)
  31. தமிழில் வெளிவந்த முதல் வார இதழ் = பெர்சிவல் பாதிரியாரின் “தினவர்த்தமானி”
  32. தமிழின் முதல் சரித்திர நாவல் = கல்கியின் “பார்த்திபன் கனவு”
  33. சாகித்திய காதமி விருது பெற்ற தமிழின் முதல் நாவல் = கல்கியின் “அலை ஓசை”.
  34. வெளிநாட்டு (அயல்) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல் = தொ.மு.சிதம்பர ரகுநாதனின் `பஞ்சும் பசியும்’ நாவல்.
  35. இலக்கிய விமர்சனம் பற்றிய தமிழின் முதல் நூல் = தொ.மு.சிதம்பர ரகுநாதனின் “இலக்கிய விமர்சனம்”
  36. “கரிசல் வட்டார அகராதி” என்று மக்கள் பேசும் சாதாரண தமிழுக்கு அகராதி உருவாக்கிய முதல் அறிஞர் = கி.ராஜநாராயணன்
  37. தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  38. தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கட்டுரை தொகுப்பு நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  39. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் புதினம் (நாவல்)? = கல்கி இயற்றிய “அலையோசை” (1956)
  40. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் உரைநடை நூல்? = ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தி திருமகள்” (1958)
  41. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பயண நூல்? = சோமு அவர்கள் இயற்றிய “அக்கரைச் சீமையில்” (1962)
  42. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் வாழ்க்கை வரலாற்று நூல்? = பி.ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள் இயற்றிய “ஸ்ரீ ராமானுஜர்” (1965)
  43. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய திறனாய்வு நூல்? = கி. வா. ஜெகந்நாதன் இயற்றிய “வீரர் உலகம்” (1967)
  44. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை நூல்? = அ. சீனிவாச ராகவன் இயற்றிய “வெள்ளைப் பறவை” (1968)
  45. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நாடக நூல்? = பாரதிதாசனின் “பிசிராந்தையார்” நாடகம் (1969)
  46. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் சிறுகதை தொகுப்பு நூல்? = கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு” (1970)
  47. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய வரலாறு நூல்? = பி.எஸ். ராமையா அவர்களின் “மணிக்கொடி காலம்” (1982)
  48. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் தன் வரலாறு நூல்? = லா.ச.ராமாமிர்தம் அவர்களின் “சிந்தாநதி” (1989)
  49. தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற வசன கவிதை நூல்? = அப்துல் ரகுமானின் “ஆலாபனை” (1999)
  50. தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் விமர்சன நூல்? = தி.க. சிவசங்கரன் எழுதிய “விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்” (2000).


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: