Tuesday, August 1, 2023

Tamil Nadu Government Schemes கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் 2023



கள ஆய்வில் முதலமைச்சர்

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டத்தை பிப் 1ம் தேதி  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அத்திட்டத்தின்கீழ்  பிப்ரவரி 1 மற்றும் 2ம் 2023 தேதிகளில் வேலூர் மண்டலத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் ஆய்வு செய்யும் வகையில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதல்வர் தொடங்கியுள்ளார்.  

 ’கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இத்திட்டத்தின்படி முதல்வர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோருடன், நேரடியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கள ஆய்வு மேற்கொள்ள  இருக்கிறார். 

முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வில் குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் மக்களுக்கு சென்று அடைகிறதா என ஆய்வு செய்யப்பட இருக்கின்றன.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: