பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிபெண் காவலர்க்கான அவள் எனும் திட்டம் 17.03.2023-லிருந்து செயல்படுத்தப்பட்டதுகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக காவல்துறையில் பெண்காவலர்கள் இணைக்கப்பட்டதன் பொன்விழா சென்னையில் நடக்கிறது. நிகழ்ச்சியில் சிறப்பு தபால் தலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் காவலர்களுக்கு நவரத்ன அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார், அதன் விவரம் வருமாறு:-
- ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்.
- பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி.
- காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை.
- காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும்.
- கலைஞர் காவல் கோப்பை விருது.
- குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்.
- பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள்.
- ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு.
- பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்.
No comments:
Post a Comment