Monday, July 24, 2023

Central Government Schemes ஜனனி சுரக்ஷா யோஜனா/ Janani Suraksha Yojana:




 ஜனனி சுரக்ஷா யோஜனா/ Janani Suraksha Yojana:

  • ஜனனி சுரக்ச யோஜனா (ஜனனி சுரக்ஷ யோஜனா, Janani Suraksha Yojana -JSY) என்பது இந்திய ஒன்றிய அரசால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும் இளங்குழந்தை இறப்பு விகிதத்தையும் (maternal and infant mortality rates) குறைக்கும் இலக்குடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுள் ஒன்றாகும்.
  • அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் இந்த இலக்குகளை இது அடைய முயலுகிறது. ஏனென்றால் அரசு மருத்துவமனைகளில் நல்ல மகப்பேறு மருத்துவர்களும் நல்ல குழந்தை நல மருத்துவர்களும் 24 மணிநேரமும் இருப்பர். இவ்வாறாக கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு விகிதத்தையும் இளங்குழந்தை இறப்பு விகிதத்தையும் குறைக்கலாம்.இத்திட்டம் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (National Rural Health Mission) (NRHM) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது
  • இந்த திட்டம் ஏப்ரல் 12, 2005 இல் தொடங்கப்பட்டது. இது நாட்டில் பிறக்கும் குழந்தைகள் இறப்பை குறைப்பது இதன் நோக்கம் ஆகும்.
  • மருத்துவமனைகளில் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது.அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு 700 ரூபாயும், பயிற்சி பெற்ற செவிலியர் உதவியுடன் வீடுகளில் பிரசவித்தால் 500 ரூபாய் உதவித்தொகையும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இதில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு வயது வரம்பு, வருமான வரம்பு கிடையாது.
  • தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் பிரசவத்திற்காக சேர்க்கப்படும் போது, செவிலியர்களால் ஒப்புகை செய்யப்பட்ட நகலை கொடுத்தால், அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்து உதவித்தொகையைக் காசோலையாகப் (மட்டுமே) பெற்றுக்கொள்ளலாம். இதற்காக போதுமான அளவு நிதி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், நகராட்சி, அரசு மருத்துவமனைகளுக்கும் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டமான முத்துலட்சுமி ரெட்டி கர்ப்பிணி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற்றவராக இருந்தாலும் "ஜனனி சுரக்ஷ யோஜனா' திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: