தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் (Indian Rivers Inter-link)
தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் (Indian Rivers Inter-link) என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் ஓர் அரசுத் திட்டம் ஆகும். இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் மற்ற வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் திட்டமாகும்.
இந்திய அரசின் தேசிய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் (அ) தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை (National Water Development Agency) இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வருகிறது.
கடந்த 1972 ஆம் ஆண்டு மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த டாக்டர். கே.எல்.ராவின் சீரிய ஆய்வின்பேரில் முதன் முதலாக கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முன் வைக்கப்பட்டது.
கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1.இமாலய ஆறுகள் திட்டம்
இமயமலையிலிருந்து பாயும் ஆறுகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகியவற்றை இணைப்பது, கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை நதியை மகாநதி ஆறுடன் இணைப்பது.
2.தீபகற்ப ஆறுகள் திட்டம்
இந்திய தீபகற்பத்தின் வடக்கிலுள்ள மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளை தெற்கிலுள்ள கிருஷ்ணா மற்றும் காவேரி ஆறுகளுடன் இணைப்பது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை இணைத்து அரபிக் கடலில் கலக்கும் உபரி நீரை கிழக்குப் பகுதியில் உள்ள வறண்ட பகுதிகளுக்குத் திருப்பி விடுவது.
No comments:
Post a Comment