அம்மா திட்டம்
- 2013 ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் செயல்படுகிறது.
- இது அனைத்து கிராமங்களிலும் உள்ள விளிம்புநிலை மனிதர்களுக்கு அதிகபட்ச சேவைகள் வழங்குவதை உறுதி செய்கிறது.
- ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் தலைமையிலான குழுக்கள் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள்.
கிடைக்கப் பெறும் சேவைகள்
- பட்டா மாறுதல்கள்
- குடும்ப அட்டைகள் – திருத்தங்கள்
- பிறப்பு/இறப்புச் சான்றிதழ்கள்
- சாதிச் சான்றிதழ்கள் / வருமானச் சான்றிதழ்கள் / இருப்பிடச் சான்றிதழ்கள் / குடியிருப்புச் சான்றிதழ்கள்
- வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
- முதல் பட்டதாரி சான்றிதழ்
- முதியோர் ஓய்வூதியம்
- விவசாயிகளுக்கான சான்றிதழ்கள்
அம்மா உணவகம்
இது 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் மாநில மாநகராட்சிக் கழகங்களினால் செயல்படுத்தப்படும் உணவகங்களில் மானிய விலையிலான உணவுகள் குறைந்த விலையில் மக்களுக்கு அளிக்கப்படும்.
அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்
இது 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் ரூ.1000 மதிப்பிலான 16 வகையான கருவிகளைப் பெறுவார்கள்.
மேலும் இப்பெட்டியானது ஒரு கைக்குட்டை, ஆடை, படுக்கை, கொசு வலை, குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சோப்பு, சுத்திகரிப்பான், ஒரு பொம்மை, மருந்துகள் (குழந்தை மற்றும் தாய்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
அம்மா குடிநீர்
2013 ஆம் ஆண்டு
செப்டம்பர் 15 அன்று அண்ணாதுரையின் 105-வது பிறந்த தினத்தின் போது இது அறிமுகப்படுத்தப்பட்டது.
சுத்தமான குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகித்தல் திட்டம்.
இத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்து ஒரு லிட்டர் நெகிழிப் புட்டிகளில் அடைத்து நீண்ட தொலைவு செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அவை விற்பனை செய்யப்படும்.
ஒரு லிட்டர் புட்டியின் விலை ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ள உற்பத்தி ஆலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் இது செயல்படுத்தப்படுகிறது.
நகரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாகப் பெறுவார்கள்.
முதல் பகுதியாக இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சென்னையில் 100 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நீரில் மொத்தம் கரைந்த திடப் பொருட்கள் 50 ppm (Parts per million) அளவிற்கு
கீழ் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அம்மா உப்பு
இது நலிவடைந்த பிரிவினர் பயன்பெறுவதற்காக தமிழ்நாடு உப்புக் கழகத்தினால் 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
மூன்று வகை: இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் உப்பு மற்றும் குறைந்த அளவுள்ள சோடியம் உப்பு ஆகியவை முறையே ரூ.25, ரூ.21, ரூ.14 ஆகியவற்றிற்கு விற்கப்படுகின்றன.
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் இராமநாதபுர மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு இது ஊக்கமளிக்கிறது.
சமூகத்தில் உள்ள பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக வேலை வாய்ப்புகளை இது உருவாக்குகிறது.
உப்பு உற்பத்தி, உப்பு சார்ந்த பொருட்கள் மற்றும் கடல் இரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக கடல் வளங்களைப் பெருமளவில் பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.
அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்
இது 11.01.2016 அன்று விலை மட்டுப்படுத்துதல் நிதியத்தின் கீழ் (Price Stabilization Fund) தமிழ்நாடு
உணவுப் பொருள் விநியோக கழகத்தினால் 25 மாவட்டங்களில் 54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் தொடங்கப்பட்டன.
இது குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
அம்மா சிமெண்ட்
இது 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மிகக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாயை ஈட்டும் குழுக்கள் மானிய விலையில் சிமெண்டைப் பெறுவதற்கு இது உதவுகிறது.
அம்மா சிமெண்ட்டின் ஒரு மூட்டையின் விலை ரூ.190 ஆகும்.
இந்த சிமெண்ட்டானது தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழக நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
ஒரு சிமெண்ட் மூட்டையின் உண்மையான மதிப்பு ரூ.360 ஆகும். ஆனால் இத்திட்டத்தின் கீழ் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை பாதியாகக் குறைந்துள்ளது.
தாம் கட்டும் வீடுகளுக்காக நுகர்வோர்களுக்கு 100 சதுர அடிக்கு 50 மூட்டைகளும் 1500 சதுர அடிக்கு 750 சிமெண்ட் மூட்டைகளும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பொது மக்கள் குறைந்தபட்சம் 10 சிமெண்ட் மூட்டைகளையும் அதிகபட்சமாக 100 சிமெண்ட் மூட்டைகளையும் பெற முடியும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிடங்குகளிலிருந்து அவை விற்பனை செய்யப்படும்.
மாநிலத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறையின் 250 கிடங்குகளிலிருந்து அவை விற்பனை செய்யப்படும்.
அம்மா விதைகள் திட்டம்
அம்மா விதைகள் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 02 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக மாநிலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை விவசாயிகளுக்கு அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
விவசாயிகள் சான்றளிக்கப்பட்ட விதைளைப் பயன்படுத்துவதை இது ஊக்கப்படுத்துகிறது.
நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்புகளின் மேல் தளங்களில் (மாடியில்) காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதை இது ஊக்கப்படுத்த விருக்கிறது.
இந்த விதைகள் நியாயமான விலையில் அம்மா சேவை மையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு விதைகள் வளர்ச்சி கழகம் பொறுப்பு நிறுவனமாக செயல்படும்.
திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் உள்ள குடிமக்கள் தங்களின் மாடிகளில் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்காக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அம்மா மருந்தகம்
இது 2014 ஆம் ஆண்டு ஜுன் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மருந்தகங்கள் மரபியல்பான மற்றும் நிறுவன அடையாளம் கொண்ட அனைத்து வகை மருந்துகளையும் குறைவான விலையில் விற்பனை செய்கின்றன.
இந்த மருந்தகங்கள் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்கின்றன.
இந்த திட்டத்தின் மூலம் தினக்கூலித் தொழிலாளர்கள் பெரியளவில் பயனடைகிறார்கள்.
இந்த மருந்தகங்கள் சென்னை, ஈரோடு, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளன.
அம்மா தகவல் மையம்
இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டணமில்லா தொலைபேசி எண் – 1100.
இது ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும்.
இத்திட்டம் தொடக்க நிலையில் ஒரு நாளைக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும்.
இது குடிமக்கள் அரசாங்கத் துறைகள் குறித்த புகார்களை அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குடிமக்களிடமிருந்துப் பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல், தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.
புகார் அளித்த குடிமக்களுக்குப் புகார் குறித்துத் தகவல் அளிக்கப்பட வேண்டிய அதிகாரி பற்றியும் புகார் மீது எடுக்கப்பட்ட நடிவடிக்கைப் பற்றியும் தெரிவிக்கப்படும்.
முதல்வர் குறைதீர் பிரிவில் குடிமக்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக அல்லது நேரடியாகவோ அளிக்கலாம். எனவே அம்மா தகவல் மையம் முதல்வர் குறைதீர் பிரிவின் நீட்டிப்பு என்று கருதப்படுகிறது.
இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று அறிவிக்கப்பட்டது.
இது அம்மா மக்கள் சேவை மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
நகர்ப்புற மக்களுக்காக மாநகராட்சிகள் ஒவ்வொரு புதன் கிழமையும் இந்த மையங்களைச் செயல்படுத்தும்.
பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், வர்த்தக உரிமங்கள், குடும்ப அட்டைகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், கட்டிடத்திற்கான அனுமதிப் பத்திரம் போன்ற பல்வேறு பொதுச் சேவைகளை வழங்குவதற்கு இது வசதியளிக்கிறது.
இந்த சேவை மையங்களின் நோக்கம் அதிகாரிகளின் பயணங்களின் போது அவர்களை சந்திக்க முடியாமல் உள்ள மக்களுக்கு உதவுவதும் சேவை வழங்குதலில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதும் ஆகும்.
அம்மா காய்கறிக் கடைகள்
இத்திட்டம் 2013 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முதல் செயல்படுகிறது.
இது பசுமைப் பண்ணை நுகர்வோர் கூட்டுறவுக் கடை அல்லது தூய விவசாயக் கூட்டுறவுக் கடை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நியாய விலைக் காய்கறிக் கடைகள் சென்னை மற்றும் துணை நகரங்களில் சந்தை விலையை விடக் குறைவாக தூய விவசாயக் காய்கறிப் பொருட்களை விற்பனை செய்கின்றன.
இந்த காய்கறிக் கடைகளுக்குத் தேவையான பொருட்களை அரசாங்கத் துறைகள் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு) நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும்.
இதன்மூலம், அரசாங்கம் தரகர்களின் இடையீட்டை ஒழித்துப் பொருட்களின் விலையை தனது கட்டுக்குள் வைத்திருக்கும்.
அம்மா சிறு கடன்கள் திட்டம்
இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டமானது 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்காக சிறு கடன்களை அளிக்கும்.
இதன்மூலம் வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 5000 ரூபாய் வரை கடன்களைப் பெற முடியும். இந்த கடனுக்கான 11 சதவிகித வட்டியை அரசாங்கம் அந்த வங்கிக்குச் செலுத்தும்.
இந்தக் கடனைப் பெற்ற வணிகர்கள் வாரத்திற்கு ரூபாய் 200 வீதம் 25 வாரங்களில் இந்தக் கடனை திருப்பிச் செலுத்தலாம்.
25 வாரங்களில் இந்தக் கடனை திருப்பிச் செலுத்தாத வணிகர்களிடம், செலுத்தாமல் மீதமுள்ள தொகையுடன் 4 சதவிகிதம் வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்திய வணிகர்கள் ரூ.25,000 வரை மீண்டும் கடன் பெறலாம்.
பூக்களை விற்பனை செய்வோர், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வோர் மற்றும் இதர சிறு வணிகர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.
இத்திட்டத்தின் நோக்கம் வட்டிக் கடைகாரர்களிடமிருந்து உயர்ந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிறு வர்த்தகர்களுக்கு உதவுவதாகும்.
அம்மா கைபேசிகள்
இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் ஒரு கேமிரா (புகைப்படக் கருவி), ஜிபிஆர்எஸ் மற்றும் மூன்றாம் தலைமுறை சிம் கார்டுடன் கூடிய கைபேசி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், தமிழ் மென்பொருள் பதிவேற்றப்பட்ட இந்த கைபேசியானது முதல் நிலையில் 20,000 சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. இதன் மதிப்பு 15 கோடியாகும்.
இந்த கைபேசியின் பயன்பாட்டிற்கான மாதச் செலவு தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழகத்தினால் ஏற்கப்படும்.
அம்மா மடிக் கணினிகள்
இத்திட்டம் பள்ளி மாணவர்களுக்காக 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறந்த திறன்களைப் பெறுவதற்காக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் உள்பட பன்னிரண்டாம் வகுப்பிலிருந்து இளங்கலைப் பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு எல்காட் (ELCOT) பொறுப்பு நிறுவனமாக செயல்படுகிறது.
தமிழ்நாட்டைத் தவிர குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் இதைப் பின்பற்றுகின்றன.
அம்மா உடற்பயிற்சி மையம்
07.2018 அன்று
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாவட்டத்தின் கொங்கணாபுரத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அம்மா பூங்காக்களில் உள்ள இடங்களில் அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படவிருக்கிறது. இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளால் பராமரிக்கப்படும்.
அம்மா உடற்பயிற்சியகத்தின் நன்மைகள்
இது கிராமப்புற இளைஞர்களின் உடற்பயிற்சிக்கு உதவி செய்து, தங்கள் உடற்திறனை மேம்படுத்த உதவுகிறது.
இது கிராமப்புற மக்களிடையே சுகாதாரம் குறித்த அறிவை அதிகரிக்கிறது.
இளைஞர்களின் தலைமைப் பண்பு மற்றும் மன உறுதியை இது மேம்படுத்துகிறது.
இது இளைஞர்களை விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார் செய்கிறது.
No comments:
Post a Comment