Wednesday, November 6, 2024

ESA PROBA-3 Mission

ESA  PROBA-3 Mission


புரோபா-3 விண்கலம்:

  • சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளும் ஈடுபடவுள்ளனர். 
  • இதற்காக ஐரோப்பிய யூனியனின் புரோபா-3 விண்கலத்தை இஸ்ரோ பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம்  டிசம்பர் மாதம் 2024 விண்ணுக்கு அனுப்புகிறது. 
  • இந்த புரோபா-3 விண்கலத்தில் இரண்டு செயற்கைக்கோள்கள் (Coronagraph Spacecraft (CSC) and the Occulter Spacecraft (OSC)) இருக்கும். இவை ஒன்றாக இணைந்து செயல்படும். 
  • Coronagraph Spacecraft : 144 மீட்டர் நீளமுள்ள இந்த சாதனம் சோலார் கார்னோகிராப் என அழைக்கப்படும். இது சூரியனின் கரோனா என்ற பிரகாசமான ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய உதவும்.
  • Occulter Spacecraft என்பது 250 கிலோ எடையுள்ள மினி-செயற்கைக்கோள் ஆகும், இது லேசர் மற்றும் விஷுவல் மெட்ராலஜி ஆப்டிகல் ஹெட்களை வழங்குகிறது. இது 1.4 மீட்டர் விட்டம் கொண்ட வட்டு கொண்டுள்ளது. அதன் விளிம்பின் வடிவம் கரோனாகிராஃபினுள் நுழையும் சூரிய ஒளியின் அளவைக் குறைக்கும் நோக்கம் கொண்டது
  • சூரியனை துல்லியமாக ஆய்வு செய்வதற்காக உலகில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில், சூரியனின் ஒளிவட்டப்பகுதி விரிவாக ஆய்வு செய்யப்படும். கடந்த 70 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே விண்வெளி ஆய்வில் ஈடுபட்டன. 
  • 2023-ம் ஆண்டின் புதிய விண்வெளி கொள்கை மூலம் விண்வெளித் துறை, பொதுத்துறைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இது தொழில்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தும்.
  • 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளி மையத்தை அமைக்கவும், 2040-ம் ஆண்டுக்குள் நிலவில் முதல் இந்திய வீரரை தரையிறக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. 
  • தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான துறைகள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. 
  • நேவிகேஷன் தகவல்களை அளித்தல், செயற்கைகோள் படங்களை அனுப்புதல் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதை விண்வெளி தொழில்நுட்பம் ஊக்குவிக்கிறது. 


KEY NOTES :

  • Objective: The mission aims to study the solar corona in detail.
  • Collaboration: European Space Agency (ESA) and ISRO are collaborating on this mission.
  • Launch: Scheduled for December 2024 using ISRO’s PSLV-XL rocket.
  • Components: Includes two satellites, Coronagraph Spacecraft (CSC) and Occulter Spacecraft (OSC), working together to reduce sunlight interference and study the sun’s corona accurately.

No comments:

Post a Comment

Featured Post

INDIA’S FIRST CONSTITUTION MUSEUM

இந்தியாவின் முதல் அரசியமைப்பு அருங்காட்சியகம் : ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு...