Wednesday, November 6, 2024

Digital India Common Service Center (DICSC)

Digital India Common Service Center (DICSC)


டிஜிட்டல் இந்தியா பொது சேவை மைய (DICSC) திட்டம்

  • கிராமப்புற இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கும், டிஜிட்டல் சேவைகள் மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையம் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.  இந்த முயற்சி 10 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஒன்றேபோல் டி.ஐ.சி.எஸ்.சி மையத்தை நிறுவவும், மொத்தம் நாடு முழுவதும் 4,740 மையங்கள் ஏற்படுத்தவும் வழிவகை செய்யும்.
  • குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் 720 டி.ஐ.சி.எஸ்.சி மையங்களும், கோரக்பூரில் 1,273 மையங்களும் அமைக்கப்படும். சத்ரபதி சம்பாஜி நகர் (பழைய அவுரங்காபாத், மகாராஷ்டிரா) 870, சம்பா (இமாச்சலப் பிரதேசம்) 309, கம்மம் (தெலுங்கானா) 589, காந்திநகர் (குஜராத்) 288, மாமித் (மிசோரம்) 100, ஜோத்பூர் (ராஜஸ்தான்) 415, லே (லடாக்) 95, மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 81 டி.ஐ.சி.எஸ்.சி மையங்கள் இதில் அடங்கும். இந்த மையங்களின் செயல்பாடு மற்றும் மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கண்காணிப்பு இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் மூலம் நிர்வகிக்கப்படும்.
  • ரூ.3,160.88 லட்சம்  பட்ஜெட்டில், இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஆறு மாதங்களுக்கு இயங்க உள்ளது. அதை ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது. கிராமப்புற மக்களுக்கு நிதி மற்றும் வணிக சேவைகளுடன் அத்தியாவசிய மின்-ஆளுமை சேவைகளை வழங்கும் ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதே முதன்மை குறிக்கோளாகும். பிலிபித்தில் உள்ள சி.எஸ்.சி மையங்கள் ஆதார் பதிவு, வங்கி, நிதி திட்டமிடல், தொலை தூர சட்ட ஆலோசனை, தொலை மருத்துவ ஆலோசனை, கல்வி மற்றும் இ-காமர்ஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும்.
  • டி.ஐ.சி.எஸ்.சி திட்டம் நோக்கம்: உள்ளூர் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிப்பதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியமான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதன் மூலம் இந்தப் பிராந்தியங்களை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்வதன் மூலமும், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலமும், இந்த முயற்சி பிலிபித் மற்றும் கோரக்பூரின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தி, அவற்றை பரந்த டிஜிட்டல் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரசின் திட்டங்களை ஊக்குவிக்கவும், தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய சேவைகளை நேரடியாக வழங்கவும்  ஜி.பி.எஸ் இயக்கப்பட்ட மொபைல் வேன்கள் பயன்படுத்தப்படும். இந்த விரிவான அணுகுமுறை டிஜிட்டல் கல்வியறிவை கணிசமாக மேம்படுத்துவதுடன், பிலிபித், கோரக்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCE : PIB

No comments:

Post a Comment

Featured Post

INDIA’S FIRST CONSTITUTION MUSEUM

இந்தியாவின் முதல் அரசியமைப்பு அருங்காட்சியகம் : ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு...