Friday, February 9, 2024

FEBRUARY 2024 -TODAY CURRENT AFFAIRS IN TAMIL 09.02.24


பாரத ரத்னா விருது 2024

  1. முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
  2. சில தினங்களுக்கு முன்பு பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசிய பெண் குழந்தைகள் தின மாநில விருது 2024

  1. திருச்சி மாவட்டத்தின் சுகிதா தேசிய பெண் குழந்தைகள் தின மாநில விருது 2024-ஐ வென்றுள்ளார்.
  2. தமிழ்நாட்டில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 24-ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
  3. தேசிய பெண் குழந்தைகள் தினம் – ஜனவரி 24
  4. உலக பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11
வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி 
  1. கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 91.20 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இந்த எண்ணிக்கை 6% அதிகரித்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
  2. அதில், நாடு முழுவதும் 2.53 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர். 
  3. மேலும் ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரநிலப் பறவைகள்

  • ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு-2024 ன்படி தமிழ்நாட்டில் 6,80,028 ஈர நிலப்பறவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்காக தனி சுற்றுச்சூழல் பட்ஜெட்:

  • கேரள அரசானது சுற்றுச்சூழலுக்காக தனி சுற்றுச்சூழல் பட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது.

தளவாட செயல்திறன் குறியீடு 2023

  1. உலக வங்கி வெளியிட்டுள்ள தளவாட செயல்திறன் குறியீடு 2023-ல் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
  2. இந்தியா 38வது இடம் பிடித்துள்ளது.

பாரதிய அந்தரிக்ஷா மையம்

  1. இந்தியா தனக்கென தனி சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் (Bharatiya Antariksha Station) அமைக்க உள்ளது.
  2. இந்த விண்வெளி மையம் 2035-ல் செயல்பாட்டிற்கு வரும்
  3. சர்வதே விண்வெளி மையம் அமைக்கும் 3வது நாடு என்ற பெருமையை பெற உள்ளது.

ஹைட்ரஜன் ரயில்

  • சென்னை ஐசிஎஃப் ஹைட்ரஜன் ரயிலை தயாரிக்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் தொழிற்சாலை:
  1. வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் தொழிற்சாலை, நாட்டின் ஒரே ஒரு இடத்தில்தான் அதாவது மைசூருவில்தான் இயங்கி வருகிறது. மைசூரு பெயிண்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிடட் என்ற இந்த நிறுவனம் கர்நாடக அரசின் கீழ் இயங்கி வருகிறது. 
  2. ஒவ்வொரு முறையும், தேர்தல் நடக்கும் போது இந்த நிறுவனத்துக்கு வரும் உத்தரவைப் பொறுத்து மை தயாரிக்கும் பணி தொடங்கும். வழக்கமாக 10 மி.லி. கொண்ட பிளாஸ்டிக் குப்பிகளில்தான் மை தயாரிக்கப்படுகிறது. இந்த ஒரு 10 மி.லி. குப்பியில் இருக்கும் மையைக் கொண்டு 700 வாக்காளர்களின் கைகளில் மை தடவ முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  3. ஒரு சிறப்பு ரசாயனத்தின் கூட்டுக்கலவையே இந்த மை என்றும், இது வெகுநாள்கள் நீடிக்கும் என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. 
  4. இந்த தொழிற்சாலையில் மை தயாரிக்கும் பணி 1962ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சுமார் ஏழு ஏக்கரில் இயங்கி வரும் இந்த நிறுவனம்தான், இன்றுவரை ஒரே ஒரு நிறுவனமாக, மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

திருநங்கையர்களுக்கு இலவச பேருந்து

  • திருநங்கையர்களுக்கு இலவச பேருந்து சேவையை டெல்லி அறிமுகம் செய்துள்ளது.
அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டம் :
  1. தமிழகம் முழுவதும் 1.16 லட்சம் இடங்களில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாநிலத்தில் 19 வயது வரை உள்ள அனைவருக்கும், 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா். 
  2. மாநிலம் முழுவதும் நிகழாண்டில் 2.69 கோடி பேருக்கு அந்த மாத்திரைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசுசாா் மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் என மொத்தம் 1.16 லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  3. பிப்ரவரி 10 - தேசிய குடற்புழு நீக்க நாள்

இஸ்ரோ அறிவிப்பு

  1. பிப்ரவரி 17-ல் இன்சாட் 3 டிஎஸ் செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  2. பருவநிலை மாறுபாடுகளை ஆராயும் பேரிடர்களை முன் கூட்டியே அறிவதற்கு இச்செயற்கைகோள் உதவுகிறது.

சாரதி இணையதளம்

  1. பயிர்க் காப்பீடு தொடர்பான குறைகளை தீர்க்கவும், காப்பீடு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ள சாரதி என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
  2. இந்த இணைய தளத்தினை ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்துள்ளார்.

க்ரிஷ் ரக்ஷக் இணையதளம்

  1. பயிர்க் காப்பீடு திட்டத்தின் குறை தீர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்த க்ரிஷ் ரக்ஷக் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
  2. மேலும் இதற்காக 14447 என்ற இலவச உதவி எண்ணும் தொடங்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் அதிபர் தேர்தல்:

  • அஜர்பைஜான் அதிபர் தேர்தலில் இல்ஹாம் அலியேவ்- Ilham Aliyev வெற்றி பெற்றுள்ளார்.

7வது இந்தியப் பெருங்கடல் மாநாடு

  • ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 7வது இந்தியப் பெருங்கடல் மாநாடானது நடைபெற்றுள்ளது.

நிரஞ்சன் ஷா மைதானம்-Niranjan Shah Cricket Stadium

  • குஜராத்தின் ராஜ்கோட்டிலுள்ள செளராஷ்டிரா மைதானத்திற்கு நிரஞ்சன் ஷா மைதானம் என பெயரிடப்பட்டுள்ளது.

வருடாந்திர தொழில் ஆய்வறிக்கை

  1. 2020-21, 2021-22-க்கான வருடாந்திர தொழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  2. உற்பத்தி துறையில் அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
  3. குஜராத், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

சி-பாட் ரோபோ (C-Bot)

  1. கடலின் அடியில் உள்ள பவளப்பாறையை கண்காணிக்க சி-பாட் என்னும் ரோபோவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  2. மேலும் நீர்வெப்பத் துவாராங்களையும் கண்டறியவும், கடல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த ரோபோ உதவுகிறது.
  3. கோவாவின் தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் இந்த ரோபோவினை தயாரித்துள்ளது.

பிச்சைக்காரர்கள் இல்லா நகரம்

  1. 2026ஆம் ஆண்டுக்குள் 30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லா நகரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.
  2. தமிழ்நாட்டில் மதுரை நகரை பிச்சைக்காரர்கள் இல்லா நகரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வெடிமருந்து

  1. மெட்ராஸ் ஐஐடியானது இந்தியாவின் முதல் 155 மிமீ வெடிமருந்தினை உருவாக்கியுள்ளது.
  2. மெட்ராஸ் ஐஐடி – 1959

சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி- Surajkund Crafts Mela

  1. ஹரியனாவில் சூரஜ்குண்ட் மேளா எனும் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சியானது நடைபெற்றுள்ளது.
  2. இதனை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்தார்.
  3. இக்கண்காட்சியின் பங்குதாரர் நாடாக தான்சானியாவும், பங்குதாரர் மாநிலமாக குஜராத்தும் உள்ளன.

முதலமைச்சர் வயோஸ்ரீ திட்டம்

  • மகாராஷ்டிராவில் வயதானோர்கள், மாற்றுத்திறளானிகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்க முதலமைச்சர் வயோஸ்ரீ திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.
கில்காரி திட்டம் (Kilkari Programme)
  1. தேசிய சுகாதாரத்துறையானது கில்காரி திட்டத்தினை குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கியுள்ளது.
  2. கர்ப்பம், பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு பற்றிய  ஆடியோ செய்திகளை குடும்பங்களின் மொபைல் போன்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டமாகும்.

நல்லெண்ண தூதர்:

  1. அனைவருக்கும் கல்விக்கான நல்லெண்ண தூதராக வினிசியஸ் ஜூனியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. யுனெஸ்கோ (UNESCO) இவரை நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது.
  3. UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) – ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் – 16.10.1945


முக்கியமான நாட்கள்-பிப்ரவரி 9

பாபா ஆம்தேவின் நினைவுநாள்

  1. பாபா ஆம்தே ஒரு இந்திய சமூக சேவகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். அவர் குறிப்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான அவரது பணிக்காக அறியப்பட்டார்.
  2. பழங்குடியின மக்களின் உரிமைகளை ஆதரிப்பவர், அவர் 1973 இல் கட்சிரோலியில் மடியா கோண்ட் பழங்குடியினருக்காக லோக் பிரதாரி பிரகல்ப் என்ற அமைப்பை நிறுவினார். மத பதட்டங்களைத் தணிக்க 1985 இல் பாரத் ஜோடோ யாத்ரா போன்ற நாடு முழுவதும் அமைதி ஊர்வலங்களையும் நடத்தினார். ஆம்தே பெரிய அணைகளை எதிர்த்தார் மற்றும் நர்மதா மீது சர்தார் சரோவர் திட்டத்திற்கு எதிரான இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
  3. அவரது பணிக்காக, ஆம்டேவுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பரிசு, மகசேசே விருது, காந்தி அமைதி பரிசு மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. 
  4. தலாய் லாமா அவரது பணியைப் பாராட்டினார், "நடைமுறை இரக்கம், உண்மையான மாற்றம் மற்றும் இந்தியாவை வளர்ப்பதற்கான சரியான வழி" என்று அழைத்தார். 
  5. பல மாதங்களாக இரத்த புற்றுநோயுடன் போராடிய அவர் பிப்ரவரி 9, 2008 அன்று இறந்தார்.


CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு-2024 ன்படி தமிழ்நாட்டில் ------------- ஈர நிலப்பறவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  ?

A) 6,80,028
B) 7,80,028
C) 8,80,028
D) 9,80,028

ANS :  A) 6,80,028

 


நடப்பு நிகழ்வுகள் 2024 

MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:

விருதுகள் கௌரவங்கள் 2024 :

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024

முக்கியமான நாட்களின் பட்டியல் 2024


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: