மாநில அளவில் மகளிர் கொள்கை வகுத்த முதல் மாநிலமாக தமிழகம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் மகளிர் கொள்கை வகுத்த முதல் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
மகளிர் கொள்கை:
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்க வழிவகை செய்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்
பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனா
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய முயற்சியான “பிரதான்மந்திரி சூர்யோதயா யோஜனா” ஐ அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தின் முதன்மை கவனம், நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சோலார் சிஸ்டங்களை நிறுவுவதாகும், இது நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு எதிர்காலத்தை வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.
இது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தை கணிசமாக குறைப்பது மட்டுமின்றி எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவை காண உதவும். இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளில் சூரியமின் தகடுகளைப் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாஸ்த்ரா சீமா பால் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவ அமைப்பான சாஸ்த்ரா சீமா பால் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1990 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான தல்ஜித் சிங் சௌதரி எஸ்எஸ்பி எனப்படும் சாஸ்த்ரா சீமா பால் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைவரும், எஸ்எஸ்பி அமைப்பின் தற்காலிக தலைவருமான அனீஷ் தயாள் சிங் இப்பொறுப்பை தல்ஜித் சிங் சௌதரியிடம் ஒப்படைத்தார். புதுதில்லியில் உள்ள சாஸ்த்ரா சீமா பால் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்பு நிகழ்வு நடைபெற்றது. தல்ஜித் சிங் சௌதரி 2025 நவம்பர் மாதம் வரை இப்பதவியை வகிக்க உள்ளார்.
ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது சஷாஸ்த்ர சீமா பல் அல்லது எஸ்.எஸ்.பி. (Sashastra Seema Bal) என்பது இந்திய-நேப்பாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் படைகளில் ஒன்றாகும். உத்தராஞ்சல் (263.கி.மீ), உத்திரப் பிரதேசம் (599.3 கி.மீ), பீகார் (800.4 கி.மீ), மேற்கு வங்காளம் (105.6 கி.மீ) மற்றும் சிக்கிம் (32 கி.மீ) ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய - நேப்பாள எல்லைகளான 1751 கி.மீ தூரத்தை பாதுகாக்கிறது. சிக்கிம் (32 கி.மீ), மேற்கு வங்காளம் (183 கி.மீ), அசாம் (267 கி.மீ) மற்றும் அருணாச்சல் பிரதேசம் (217 கி.மீ) ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியையும் பாதுகாக்கிறது
பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது:2023
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி இந்திய அணிக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக வலம் வருகிறார். இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டு முறை இருந்துள்ளார். முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அணியின் இயக்குநராகவும், அதன்பிறகு தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட உள்ளது
2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் அணி :
2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), மார்க் சேப்மேன், சிக்கந்தர் ராஸா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் அடாய்ர், ரவி பிஸ்னோய், ரிச்சர்ட் நிகராவா மற்றும் அர்ஷ்தீப் சிங்.
2023 ஆண்டின் ஐசிசி ஒருநாள் அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டேரில் மிட்செல், ஹென்ரிச் க்ளாசன், மார்கோ ஜேன்சன், ஆடம் ஸாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி.
2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் அணி விவரம்: உஸ்மான் கவாஜா, திமுத் கருணாரத்னே, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட், ரவீந்திர ஜடேஜா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டுவர்ட் பிராட்.
ஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஒரிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர். அவரது இராணுவம் இந்திய தேசிய இராணுவம் (INA) அல்லது ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் என்று அறியப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது மேற்கத்திய சக்திகளுக்கு எதிராக வெளிநாட்டிலிருந்து இந்திய தேசியப் படையையும் அவர் வழிநடத்தினார்.
TODAY CURRENT AFFAIRS IN TAMIL 2023
TODAY CURRENT AFFAIRS 2023 IN TAMIL |
TNPSC CURRENT AFFAIRS DECEMBER 2023 |
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
விருதுகள் கௌரவங்கள் 2023 :
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL: